என் மலர்
நீங்கள் தேடியது "bank fraud"
- இவரது வங்கிக்கடன் 2016 ஜூலை மற்றும் 2019 இடையே வராக்கடனாக அறிவிக்கப்பட்டது.
- பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே ரூ.2,468.51 கோடி ஏமாற்றப்பட்டுள்ளது.
புதுடெல்லி :
வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு செலுத்தாமல் மோசடி செய்த பிரபல தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி போன்றவர்கள் பட்டியலில் சேர்ந்திருப்பவர், குஜராத் மாநிலம், சூரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கப்பல் கட்டும் தள நிறுவனமான 'ஏ.பி.ஜி. ஷிப் யார்டு' தலைவர் ரிஷி கமலேஷ் அகர்வால் ஆவார்.
இவர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்ட 28 வங்கிகளில் ரூ.22 ஆயிரத்து 842 கோடி கடன் வாங்கி விட்டு வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே ரூ.2,468.51 கோடி ஏமாற்றப்பட்டுள்ளது. இதுதான் நாட்டின் மிகப்பெரிய வங்கி மோசடி என கருதப்படுகிறது.
'எர்ணஸ்ட் அண்ட் யெங்' நிறுவனம் நடத்திய தடயவியல் ஆய்வில், 2012 முதல் 2017 காலகட்டத்தில், ரிஷி கமலேஷ் அகர்வாலும் அவரது கூட்டாளிகளும் குற்றச்சதி, மோசடி, நம்பிக்கை மோசடி, அரசு பதவிகளை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களை அரங்கேற்றி இருப்பது அம்பலத்துக்கு வந்தது. இது தொடர்பான புகாரின்பேரில் ரிஷி கமலேஷ் அகர்வால் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
வங்கிக்கடனை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக பெற்றுக்கொண்டு, அதற்கு செலவிடாமல் பிற வழிகளில் செலவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது இவரது வங்கிக்கடன் 2016 ஜூலை மற்றும் 2019 இடையே வராக்கடனாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரிஷி கமலேஷ் அகர்வால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையை சி.பி.ஐ. மேற்கொண்டுள்ளது.
ஈரோடு ரெயில்வே காலனியை சேர்ந்தவர் செந்தில்(வயது 58). இவருடைய தம்பி ரவிச்சந்திரன்(56). இவர்கள் இருவரும் சேர்ந்து கோவை மாவட்டம் காரமடையில் பாலித்தீன் சாக்குப்பை தயாரிக்கும் நிறுவனம் தொடங்கினார்கள்.
இந்த நிறுவனத்தின் தேவைக்காக இருவரும் திருப்பூர் கொங்குநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.1 கோடி கடன் கேட்டனர்.
இதற்காக ஈரோட்டில் தங்கள் பெயரில் உள்ள 1¼ ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தின் ஆவணங்களை வங்கியில் அடமானமாக வைத்து கடந்த 2008-ம் ஆண்டு ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றனர். அதன்பிறகு கடனுக்கான தவணைத்தொகையை உரிய முறையில் திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் கடன் தொகையை செலுத்தாததால் அவர்களுடைய நிலத்தை ஜப்தி செய்து ஏலம் விடுவதற்கான நடவடிக்கையில் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று வங்கி அதிகாரிகள் பார்த்தபோது, அந்த ஆவணங்களில் குறிப்பிட்டபடி அங்கு நிலம் எதுவும் இல்லை. இதனால் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். செந்தில், ரவிச்சந்திரன் இருவரும் வங்கியில் அடமானம் வைத்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பதும், இருவரும் திட்டமிட்டே போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வங்கியின் உதவி பொது மேலாளர் ஜெகத்ரட்சகன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட செந்தில், அவருடைய தம்பி ரவிச்சந்திரன் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
கார்ப்பரேசன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் மொத்தம் ரூ.40 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தொழில் அதிபர் வினய் மிட்டல். அந்த வங்கிகளின் கோரிக்கையை ஏற்று, அவர் மீது 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில், சி.பி.ஐ. 7 வழக்குகளை பதிவு செய்தது. டெல்லி மற்றும் காசியாபாத் கோர்ட்டுகளில் குற்றப்பத்திரிகைகளையும் தாக்கல் செய்தது.
இதையடுத்து, வினய் மிட்டல், நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் தலைமறைவானதாக கோர்ட்டு அறிவித்தது. அவருக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, அவர் இந்தோனேசியா நாட்டின் பாலியில் குடும்பத்துடன் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் அடிப்படையில், அவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தோனேசியா போலீசார் கைது செய்தனர். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு அதிபர் சமீபத்தில்தான் ஒப்புதல் அளித்தார்.

அதன்படி, இந்தியாவுக்கு வந்து சேர்ந்த வினய் மிட்டல் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Indonesia #VinayMittal #BankFraud
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையை தலைமை இடமாக கொண்டு நகை கடைகள் நடத்தி வந்தார்.
நகை வடிவமைப்பு மற்றும் வைர வியாபாரத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் அவர் முதன்மை பெற்று இருந்தார்.
வைர வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக அவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 280 கோடி ரூபாய் கடன் வாங்கினார். பிறகு அந்த தொகை அதிகரித்தது. மேலும் சில வங்கிகளிலும் கடன் பெற்றார்.
ஆனால் கடன் தொகையை அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்தவில்லை. சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாயை அவர் வங்கிகளுக்கு திருப்பி செலுத்த வேண்டி இருந்தது. அவர் கடனை திருப்பி தராததால் வங்கிகள் அவர் மீது புகார் கூறின.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் நிரவ் மோடி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்தது. அமலாக்கத்துறை அதிகாரிகளும் பணப்பரிமாற்ற மோசடிக்குறித்து விசாரித்தனர்.
இந்த நிலையில் நிரவ் மோடி கடந்த ஏப்ரல் மாதம் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். அவர் ஆங்காங்கில் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. கடந்த ஜூன் மாதம் அவர் இங்கிலாந்தில் இருப்பது தெரிய வந்தது.
தொழில் அதிபர் நிரவ் மோடி வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்த வேறு எந்த முயற்சியும் எடுக்காததால் அவரது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொண்டது. முதலில் குஜராத்தில் உள்ள அவரது 4 மில்கள் முடக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது நிரவ் மோடி மற்றும் அவருடைய குடும்பத்திற்கு சொந்தமான ரூ.637 மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக இன்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நிரவ் மோடிக்கு சொந்தமாக 2 அசையா சொத்துக்கள் உள்ளன. ரூ.216 கோடி மதிப்புள்ள அந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வங்கிகளில் 5 கணக்குகளை நிரவ் மோடி வைத்துள்ளார். அந்த கணக்குகளில் ரூ.278 கோடி முதலீடு செய்யப்பட்டு இருந்தது. அந்த பணம் முடக்கப்பட்டுள்ளது. அது போல ஆங்காங்கில் உள்ள வங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ.22.69 கோடி மதிப்புள்ள தங்க-வைர நகைகள் முடக்கப்பட்டுள்ளன.
நிரவ் மோடியை கைது செய்வதற்கு சர்வதேச போலீஸ் உதவியை இந்தியா நாடியுள்ளது. அவரது சொத்துக்களில் 90 சதவீதம் முடக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #NiravModi

மேலும் மருந்து கம்பெனியின் ரூ.4 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க பிரிவு கடந்த ஜூன் மாதம் முடக்கியது. தலைமறைவாக இருந்த நிதின் சந்தேசராவுக்கு கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. சிபிஐயும் அவரைத் தேடி வருகிறது.
இதனிடையே நிதின் சந்தேசரா துபாயில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அமலாக்க பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நிதின் சந்தேசரா தற்போது துபாயில் இல்லை என்றும், அவர் தன் குடும்பத்தினருடன் நைஜீரியா நாட்டிற்கு தப்பிச் சென்று அங்கு பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நைஜீரியாவுடன் கைதிகள் ஒப்படைப்பு ஒப்பந்தமோ பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தமோ இல்லாததால் அங்கிருந்து நிதினை இந்தியாவுக்கு கொண்டு வருவது கடினம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே துபாயில் நிதின் சந்தேசரா கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்றும், இந்த தகவல் வெளியாவதற்கு முன்பாகவே அவர் நைஜீரியாவுக்கு சென்றுவிட்டதாகவும் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். #GujaratPharma #BankFraud #NitinSandesara
குஜராத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் நிதின் சந்தேசரா. மருந்து கம்பெனி நடத்தி வந்தார். இவர் ஆந்திர வங்கியில் ரூ.5 ஆயிரம் கோடி கடன் வாங்கினார். ஆனால் அதை திருப்பி செலுத்தாமல் தலைமறைவானார்.
இந்த மோசடி தொடர்பாக அமலாக்க பிரிவு வழக்குப்பதிந்து, ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் கார்க், மருந்து கம்பெனி இயக்குனர்கள், ஆடிட்டர் உள்ளிட்ட சிலரை கைது செய்தது. அவர்கள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் மருந்து கம்பெனியின் ரூ.4 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க பிரிவு கடந்த ஜூன் மாதம் முடக்கியது. தலைமறைவாக இருந்த நிதின் சந்தேசராவுக்கு கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே நிதின் சந்தேசரா துபாயில் இருப்பது தெரியவந்தது. இது குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிதின் சந்தேசரா துபாயில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அமலாக்க பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். #GujaratPharma #BankFraud #tamilnews
ஊட்டியை சேர்ந்தவர் ராஜன் (55). தொழில் அதிபர். இவர் ஊட்டியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில் புளோரிடெக் நிறுவனம் என்ற பெயரில் மலர் சாகுபடி செய்வதற்காக 58 விவசாயிகளின் பெயரில் கடன் பெற்றார்.
ரூ. 15 கோடி வரை பணம் பெற்று இருந்தார். அதனை திருப்பி செலுத்தவில்லை. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆய்வு செய்த போது கடன் வழங்கியதில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது.
அப்போது வங்கி மேலாளராக இருந்த சிவக்குமாருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரை இந்த மோசடி நடைபெற்று இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த 7-ந் தேதி ஊட்டி, குன்னூரில் உள்ள தொழில் அதிபர் ராஜனுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்தனர். குன்னூர் ஸ்டேன்ஸ் பள்ளி சாலையில் உள்ள ராஜன்வீட்டின் கதவில் இருந்த பூட்டுக்கும் சீல் வைக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இது தொடர்பாக ஊட்டி போலீசிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல் தெரிவித்து சென்றனர். கட்டிடம் சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து தொழில் அதிபர் ராஜன் தலைமறைவாகி விட்டார்.
அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் தேடி வருகிறார்கள். அவர் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியிலும் மோசடி செய்து இருப்பதாக புகார் எழுந்து உள்ளது. இது குறித்தும் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் குன்னூரில் சீல் வைக்கப்பட்டு இருந்த ராஜனின் வீட்டு கதவு சீல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. சி.பி.ஐ. அதிகாரிகள் ஒட்டி இருந்த நோட்டீசும் கிழிக்கப்பட்டு இருந்தது. இதனை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அங்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்த பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆவணங்களை தொழில் அதிபர் ராஜன் திருடி சென்றாரா? அல்லது வேறு நபர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முக பிரியாவிடம் கேட்ட போது, இது குறித்து குன்னூர் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டு உள்ளோம் என்றார்.
சி.பி.ஐ. அதிகாரிகள் வைத்த சீல் உடைக்கப்பட்ட சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.