என் மலர்
நீங்கள் தேடியது "fake document"
- இந்த கோவில் செயல் அலுவலராக மஞ்சு உள்ளார்.
- போலி ஆவணம் தயாரித்து வருவாய்துறைக்கு தடையில்லா சான்று கொடுத்து மின் இணைப்பு ஆணை பெற்றுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் பகுதியில் குட்டியாண்டவர்கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் செயல் அலுவலராக மஞ்சு உள்ளார்.இவர் அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-தெற்கு பிச்சாவரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். விவசாயி. இவர் கடந்த 30-ந் தேதி கோவிலில் பயன்படுத்தப்படும் துறை ரீதியான முத்திரையை பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்து வருவாய்துறைக்கு தடையில்லா சான்று கொடுத்து மின் இணைப்பு ஆணை பெற்றுள்ளார். எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
அதன்பேரில் போலீசார் ஜெயராமன் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாளை வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மனைவி கில்டா விஜயகுமாரி. இவர்களுக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் உள்ள திருச்செந்தூர் ரோடு போலீஸ் சோதனை சாவடி அருகே உள்ளது.
- சாமுவேல் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்த நிலையில் அந்த நிலத்திற்கு வேறு ஒரு நபர் சொந்தம் கொண்டாடி உள்ளார். இது தொடர்பாக கில்டா விஜயகுமாரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
நெல்லை:
பாளை வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மனைவி கில்டா விஜயகுமாரி. இவர்களுக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் உள்ள திருச்செந்தூர் ரோடு போலீஸ் சோதனை சாவடி அருகே உள்ளது.
சாமுவேல் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்த நிலையில் அந்த நிலத்திற்கு வேறு ஒரு நபர் சொந்தம் கொண்டாடி உள்ளார். இது தொடர்பாக கில்டா விஜயகுமாரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்நிலையில் நெல்லையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்பட 3 பேர் அந்த நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கற்களை அப்புறப்படுத்தி உள்ளனர். இதனை அறிந்த கில்டா விஜயகுமாரி பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள கில்டா விஜயகுமாரி நிலத்தை குறைந்த விலைக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் கேட்டதும், அதற்கு அவர் மறுத்துவிட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலியாக ஆவணம் ஏதேனும் தயாரித்து விற்க முடிவு செய்து கல்லை அப்புறப்படுத்தினார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொய்யான ஆவணம் தயாரித்து இந்த இடம் விற்கப்பட்டதாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- நிலமோசடியில் ஈடுபட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3ஆயிரம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள அய்யனதேவன்பட்டியை சேர்ந்த காசிமாயன் என்பவர் தனது தந்தை பெயரில் இருந்த சொத்தை அதேபகுதியை சேர்ந்த பாஸ்கரன் மற்றும் அவரது வாரிசுகளுடன் சேர்ந்து பஸ்நிலையம் அருகில் உள்ள சின்னத்துரை என்பவருக்கு கிரையம் செய்து விற்றார். ஆனால் பொய்யான ஆவணம் தயாரித்து இந்த இடம் விற்கப்பட்டதாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிபதி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு நிலமோசடியில் ஈடுபட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.3ஆயிரம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாத கால சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.
இவ்வழக்கில் அரசு தரப்பு வக்கீல் நிர்மலாதேவி, சிறப்பாக விசாரணை செய்த முன்னாள் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின்மும்தாஜ் மற்றும் போலீசார் ஆகியோரை தேனி மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ்டோங்கரே பாராட்டினார்.
ராமநாதபுரம் அருகே உள்ள தொருவளூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம் என்பவரின் மகன் முருகன் (வயது25). இவர் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்து இருந்தாராம். இவரது விண்ணப்பங்களை பரிசீலித்தபோது அவரது பெயரில் சான்றிதழ்கள் மற்றும் முகவரி ஆவணங்களை பயன்படுத்தி ஏற்கனவே பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பாண்டி மகன் விவசாயி முருகன் (வயது47) என்பவர் தனது பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி மேற்கண்ட முருகனின் பெற்றோரிடம் சென்று பொய்யான காரணங்களை கூறி ஏமாற்றி அவர்களின் மகன் முருகனின் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுள்ளார்.
அதனை பயன்படுத்தி தனது புகைப்படத்தை ஒட்டி பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக முதுநிலை கண்காணிப்பாளர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் இதுகுறித்து புகார் செய்தார்.
அவரது உத்தரவின்பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டி மகன் முருகன் என்பவரை கைது செய்தனர். இவர் இந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வெளிநாடு சென்று திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு ரெயில்வே காலனியை சேர்ந்தவர் செந்தில்(வயது 58). இவருடைய தம்பி ரவிச்சந்திரன்(56). இவர்கள் இருவரும் சேர்ந்து கோவை மாவட்டம் காரமடையில் பாலித்தீன் சாக்குப்பை தயாரிக்கும் நிறுவனம் தொடங்கினார்கள்.
இந்த நிறுவனத்தின் தேவைக்காக இருவரும் திருப்பூர் கொங்குநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.1 கோடி கடன் கேட்டனர்.
இதற்காக ஈரோட்டில் தங்கள் பெயரில் உள்ள 1¼ ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தின் ஆவணங்களை வங்கியில் அடமானமாக வைத்து கடந்த 2008-ம் ஆண்டு ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றனர். அதன்பிறகு கடனுக்கான தவணைத்தொகையை உரிய முறையில் திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் கடன் தொகையை செலுத்தாததால் அவர்களுடைய நிலத்தை ஜப்தி செய்து ஏலம் விடுவதற்கான நடவடிக்கையில் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று வங்கி அதிகாரிகள் பார்த்தபோது, அந்த ஆவணங்களில் குறிப்பிட்டபடி அங்கு நிலம் எதுவும் இல்லை. இதனால் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். செந்தில், ரவிச்சந்திரன் இருவரும் வங்கியில் அடமானம் வைத்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பதும், இருவரும் திட்டமிட்டே போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வங்கியின் உதவி பொது மேலாளர் ஜெகத்ரட்சகன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட செந்தில், அவருடைய தம்பி ரவிச்சந்திரன் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
ராயபுரம்:
பழைய வண்ணாரப்பேட்டை மாடர்ன்லைன் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது41).
இவர் தனக்கு குடிசை மாற்று வாரியத்தில் அதிகாரிகளை தெரியும். வீடுகள் ஒதுக்கீடு செய்து கொடுக்க முடியும் என்று கோடம்பாக்கம், கிராமத்தெருவைச் சேர்ந்த ரேகாவிடம் கூறினார்.
இதனை நம்பிய ரேகா உள்ளிட்ட 59 பேர் தலா ரூ.40 ஆயிரம் வீதம் ரூ.23 லட்சத்தை லட்சுமியிடம் கொடுத்து குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கி தரும்படி கூறினர்.
இந்த நிலையில் கடந்த வாரம் லட்சுமி, குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அதற்கான ஆணையை ரேகா உள்ளிட்டோரிடம் கொடுத்தார்.
அவர்கள் அதனை குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் காட்டியபோது அவை போலியானது என்பது தெரிந்தது.
இதுகுறித்து ரேகா பழைய வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி, அவரது கூட்டாளி சையத் ரஷித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
போலி ஆணையை அவர்கள் தயாரித்தது எப்படி என்று அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கைதான 2 பேரும் குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பெயர்களை கூறி வருகிறார்கள். எனவே அதிகாரிகளுக்கும், இதில் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடந்து வருகிறது.
ஆலந்தூர்:
பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்துக்கு, ஒரு வாலிபர் நேற்று வந்தார்.
உயர் அதிகாரியை சந்தித்த அவர், தனக்கு அங்கு தோட்ட பணியாளர் வேலை கிடைத்து இருப்பதாகவும் அதற்கான உத்தரவு வந்திருப்பதாகவும் கூறினார். அதற்கான நியமன ஆணை ஆவணத்தையும் கொடுத்தார்.
அதிகாரி அதை ஆய்வு செய்தார். அப்போது, அது போலி ஆவணம் என்பது தெரிய வந்தது. இது குறித்து ராணுவ பயிற்சி மைய உயர் அதிகாரி ராஜேந்திரசிங் பரங்கிமலை போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து பரங்கிமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகரன் விசாரணை நடத்தினார். அப்போது, போலி ஆவணம் கொடுத்து வேலைக்கு சேர முயன்ற வாலிபர் பெயர் அருண்குமார் (23). அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஏஜெண்டு ஒருவர் ஒரு லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு அருண்குமாருக்கு இந்த போலி உத்தரவை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைதான வாலிபர் அருண்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். போலி உத்தரவை கொடுத்த ஏஜெண்டு யார் என்பது குறித்து விசாரணை நடை பெறுகிறது.
இதன் பின்னணியில் ஒரு கும்பல் செயல்படலாம் என்று கூறப்படுகிறது. பணம் வாங்கிக் கொண்டு போலி ஆவணம் கொடுத்த ஏஜெண்டு விரைவில் பிடி படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
திருப்பூர்காவிப் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (59). பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். ஆடைகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த நிறுவனத்திற்கு டைமண்ட் தியேட்டர் அருகே உள்ள வங்கி கிளையில் கணக்கு உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ராமசாமி வங்கிக்கு சென்ற போது அவரது கணக்கில் ரூ. 3 கோடியே 92 லட்சத்து 78 ஆயிரத்து 768 ரூபாய் கடன் இருப்பதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனால் ராமசாமி அதிர்ச்சி அடைந்தார். தான் கடன் எதுவும் வாங்கவில்லை என அதிகாரிகளிடம் கூறினார். இதே போல் திருப்பூர் அருள் புரத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கும் சிவபிரகாசம் என்பவரும் இதே வங்கியில் இருந்து ரூ. 6 கோடியே 12 லட்சம் கடன் வாங்கி இருப்பதாக வங்கியில் இருந்து தகவல் வந்தது.
அவரும் வங்கியில் கடன் எதுவும் வாங்க வில்லை என தெரிவித்தார். இந்த நிலையில் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் ஹாரூண் ரஷித் என்பவர் இதே வங்கியில் ரூ. 5 கோடி கடன் கேட்டு உள்ளார்.அவருக்கு வங்கி நிர்வாகம் கடன் வழங்கி உள்ளது. ஆனால் ரூ. 5 கோடி கடனுக்கு ஹாரூண் ரஷித் ரூ. 8 கோடியே 34 லட்சம் கடன் பெற்றதாக வங்கியில் இருந்து தகவல் வந்துள்ளது.
வங்கியால் ஏமாற்றப்பட்ட ராமசாமி, சிவபிரகாசம், ஹாருண் ரஷித் ஆகியோர் இந்த மோசடி தொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரனிடம் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதன்படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது இந்த மோசடியில் ஈடுபட்டது திருப்பூர் சிவசக்தி நகர் செந்தில் குமார் (35), அவரது மனைவி பிரியா (31) என்பது தெரிய வந்தது.
இவர்களுக்கு உடந்தையாக கிருஷ்ண கிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த ராஜேஷ் கண்ணாவும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இவர்கள் 3 பேரும் போலி ஆவணம் தயாரித்து பனியன் அதிபர்கள் பெயரில் வங்கியில் கடன் வாங்கி உள்ளது தெரிய வந்தது.
இந்த மோசடிக்கு வங்கி மேலாளர் சோமாயாஜி, உதவி பொது மேலாளர் அனந்த் நாயக், சீனியர் மேலாளர் சங்கர், துணை பொது மேலாளர் பத்மா ரெட்டி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்கள் மோசடி பணத்தில் 5 சதவீதம் வரை கமிஷன் பெற்று இருப்பதும் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக வங்கி மேலாளர் சோமாயாஜியை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட செந்தில் குமார், அவரது மனைவி பிரியா, இவர்களுக்கு உதவிய ராஜேஷ் கண்ணா ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
அவர்களில் தற்போது செந்தில் குமார், பிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ராஜேஷ் கண்ணா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடைய வங்கி அதிகாரிகள் ஆனந்த் நாயக், சங்கர், பத்மா ரெட்டி ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த சோமாயாஜி தலைமறைவாகி உள்ளார். அவரை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. #tamilnews
ஆலந்தூர்:
சிவகங்கை மாவட்டம் பனங்குடியை சேர்ந்தவர் முருகேசன். தற்போது இவர் சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவில் தங்கியுள்ளார். அங்கு 35 வருடங்களாக டீக் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் கணக்கு வைத்திருக்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக்கு சென்று வியாபாரத்தை விரிவுபடுத்த ரூ.20 ஆயிரம் கடன் கேட்டார். அதையடுத்து அவர் வேறு வங்கியில் கடன்பெற்று இருக்கிறாரா? என வங்கி மேலாளர் பரிசோதித்து பார்த்தார்.
அப்போது ஒரு தனியார் வங்கியில் போலியான ஆவணங்கள் மூலம் இவரது பெயரில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிரெடிட் கார்டு வாங்கி இருப்பது தெரிய வந்தது. மேலும் இவரது பெயரில் 3 போலிகம்பெனிகள் உருவாக்கி ரூ.3 லட்சத்துக்கு கடன்பெற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
முருகேசன் பெயரில் போலி வாக்காளர் அடையாள அட்டையும், டிரைவிங் லைசன்சும் தயாரித்துள்ளனர். வேறு செல் போன் நம்பரும் பெற்றுள்ளனர். அதை வைத்து தான் கிரெடிட் கார்டு பெறப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் முருகேசன் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
கோவை காந்திபுரம் சத்தி ரோட்டில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் போதை பொருளை வைத்திருந்ததாக பெங்களூரை சேர்ந்த ஜாய் இமானுவேல், கோவை சாய்பாபா காலனி முகமது சிகாப், குனியமுத்தூர் ஜூல்பிகர் அலி, உக்கடம் முகமது அனாஸ் ஆகியோரை காட்டூர் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது பெங்களூரில் இருந்து இந்த போதை பொருட்களை வாங்கி வந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்தது.
கைதான 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு கோவை இன்றியமையா பொருட்கள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட முகமது சிகாப்பிற்கு வலிப்பு நோய் உள்ளதாகவும், அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என கூறி முகமது சிகாப் வக்கீல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதற்காக மருத்துவ சான்று, திருமண பத்திரிகை ஆகியவையும் தாக்கல் செய்யப்பட்டது. இதன் உண்மை தன்மையை கண்டறிய போலீசாருக்கு நீதிபதி தஞ்சய் பாபா உத்தரவிட்டு இருந்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் ஜாமீன் மனு தாக்கல் செய்த முகமது சிகாப்பிற்கு வலிப்பு நோய் இல்லை என்பதும், அவர் திருமண பத்திரிகை போலியாக அச்சடித்து மனு தாக்கல் செய்து இருப்பதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி தஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலி ஆவணம் தயாரித்து கோர்ட்டை ஏமாற்றும் எண்ணத்துடன் செயல்பட்ட வக்கீல் மற்றும் மருத்துவ சான்றிதழ் வழங்கிய டாக்டர்கள் மீது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வழக்கு பதிவு செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எஸ்.பி. சந்திரசேகர் ஆஜராகி வாதாடினார்.