search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வங்கி மோசடி, குறுஞ்செய்தி குறித்து விழிப்புணர்வு
    X

    சிவகங்கையில் மகளிர் உரிமைத்தொகை கணக்கு அட்டையை பயனாளிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அருகில் கலெக்டர் ஆஷா அஜீத்,எம்.எல்.ஏ.க்கள், தமிழரசி, மாங்குடி உள்ளனர்.

    வங்கி மோசடி, குறுஞ்செய்தி குறித்து விழிப்புணர்வு

    • வங்கி மோசடி, குறுஞ்செய்தி குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
    • அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன் னிலை வகித்தனர். நிகழ்ச்சி யில் அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை அட்டையை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 3 கட்டங்களாக நடத்தப்பட்ட முகாம்களின் மூலம் மொத்தம் 3 லட்சத்து 27 ஆயிரத்து 71 விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப் பங்கள் அனைத்தும், அரசி டம் உள்ள பல்வேறு தகவல் தரவுத் தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, திட்ட விதிகளைப் பூர்த்தி செய்த மகளிர் பய னாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர்.

    அரசாணையில் குறிப்பிட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப் பங்களில் முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு செப்டம்பர் 18 முதல் அனுப்பப்படும்.

    இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதார்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ- சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சி யருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

    தற்போது தொலைபேசி வாயிலாக போலியான நபர்கள் தங்களின் வங்கி கணக்கு தொடர்பாகவும், ஓ.டி.பி. குறுஞ்செய்தி குறித்தும் பொது மக்களி டையே கேட்கப்பட்டு மோசடி நடக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தாங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×