என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "childrens murder"

    • சிறுமி கடைசியாக ஒரு பெண்ணுடன் மாடிப்படி ஏறி சென்றது தெரியவந்தது.
    • எதுவும் நடக்காதது போல கதவை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    அரியானா மாநிலம் பானிபட் அருகிலுள்ள நவுலதா கிராமத்தில் ஒரு வீட்டில் திருமண விழா நடந்தது. விழா கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்த நிலையில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை திடீரென காணவில்லை.

    சிறுமியின் உறவினர்கள் அவளை தேடினர். திருமண மண்டபத்தில் பல பகுதிகளில் சிறுமியை தேடியும் அவளை காணவில்லை. இதனால் திருமண வீட்டில் பரபரப்பு உண்டானது. சிறுமியை காணாததால் பெற்றோர், உறவினர்கள் கவலை அடைந்தனர்.

    இதனிடையே மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள தண்ணீர் நிரம்பிய பெரிய வாளியில் சிறுமி தலை நீரில் மூழ்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பளிச் என்று உடை அணிந்து அங்கும் இங்கும் விளையாடி திரிந்த சிறுமி அலங்கோலமாக இறந்து கிடப்பதை பார்த்து உறவினர்கள் கதறினர்.

    உடனடியாக என்.சி. மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி குழந்தையின் தாத்தா பால் சிங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வந்து விசாரணை நடத்தியபோது அந்த சிறுமி நீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். சிறுமி திருமண வீட்டில் விளையாடியது, அவர் யார் யாருடன் பேசினார் என வீடியோ பதிவுகளை வைத்து விசாரித்தனர்.

    அப்போது சிறுமி கடைசியாக ஒரு பெண்ணுடன் மாடிப்படி ஏறி சென்றது தெரியவந்தது. அந்த பெண் திருமண வீட்டினரின் அத்தை பூனம் (வயது 34) என்றும் தெரியவந்தது. உடனே பூனத்தை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. பூனம் தன்னைவிட யாரும் அழகாக இருக்கக் கூடாது என்ற பொறாமையில் சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. திருமண வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியின் அழகு கொலையாளி பூனத்துக்கு பொறாமையை ஏற்படுத்தியது.

    தனது குடும்பத்தில் இப்படி ஒரு அழகான சிறுமியா என்று அவளிடம் பேச்சு கொடுத்த பூனம் பின்னர் அவளை ஏமாற்றி மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியிடம் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவருமாறு கூறியுள்ளார்.

    தன் உயிரையே பறிக்கத்தான் தண்ணீர் கொண்டுவர பூனம் சொல்கிறார் என்பதை அறியாத சிறுமி வாளியில் தண்ணீரை மாடிக்கு கொண்டு சென்றார். ஒரு அறைக்குள் சிறுமியை அழைத்து சென்ற பூனம் வாளியில் உள்ள தண்ணீருக்குள் சிறுமியின் தலையை அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் எதுவும் நடக்காதது போல கதவை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் பூனம் இதுபோன்று 3 குழந்தைகளை கொலை செய்தது தெரியவந்தது. பூனத்துக்கு 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது. இயல்பாகவே பூனத்துக்கு தன்னைவிட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்ற கர்வம் இருந்தது. 2023-ம் ஆண்டில் அவரது மைத்துனியின் 9 வயது சிறுமி இஷிகாவை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றார். இதை அவரது 3 வயது மகன் சுபத் பார்த்து விட்டான்.

    அவன் இஷிகா கொலையை வெளியில் சொல்லிவிடுவான் என பயந்து சுபத்தையும் கொலை செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது தாய் வீட்டில் உறவினரின் 6 வயது மகள் ஜியாவை நீரில் மூழ்கடித்து கொன்றார். அடுத்தடுத்த இந்த கொலைகளை உறவினர்கள் தற்செயலாக நடந்த விபத்து என்று நம்பப்பட்ட நிலையில் சிறுமி கொலை தொடர்பாகப் பூனத்திடம் போலீசார் விசாரித்த போது, பொறாமையின் காரணமாகத் தான் இந்த கொலைகளைச் செய்ததாக ஒப்புக் கொண்டார். இந்த கொடூர சம்பவம் அரியானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜவுளி தொழிலிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
    • மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அலெக்ஸ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    திருச்சி:

    திருச்சி மேல கல்கண்டார்கோட்டை மேகலா தியேட்டர் எதிர்புறம் உள்ள மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர் மேல கல்கண்டார் கோட்டை மருதம் அங்காடி பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.

    இவரது மனைவி விக்டோரியா (35) ரெயில்வே ஊழியர். இந்த தம்பதியருக்கு ஆராதனா( 9), ஆலியா( 3) ஆகிய 2 பெண் குழந்தைகள். இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

    அலெக்ஸ் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கீழ கற்கண்டார் கோட்டை மீனாட்சி நகர் பகுதியில் சொந்தமாக ஒரு வீடு வாங்கியதாக கூறப்படுகிறது.

    இதில் அவருக்கு கடன் தொல்லை ஏற்பட்டதாக தெரிகிறது. புதிய வீடு கட்ட வாங்கிய கடனுக்கான தவணை தொகையை அலெக்சின் மாமியார் தனது பென்சன் தொகை மூலமாக செலுத்தி வந்தார்.

    சமீபத்தில் அவர் இறந்துவிட்டார். இதனால் பென்சன் நின்றுபோனது.

    இதற்கிடையே அலெக்ஸ் தஞ்சையில் உள்ள தனது சகோதரர் ஒருவருக்கு கடனுக்கு ஜாமின் கொடுத்து, அதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அலெக்சின் தயார் கேன்சரால் பாதிக்கப்பட்டு பல லட்சம் ரூபாய் சிகிச்சைக்கு செலவழிக்க நேரிட்டது.

    இதற்கிடையே ஜவுளி தொழிலிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஜவுளிக்கடையை மூடியுள்ளார்.

    இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அலெக்ஸ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் மட்டும் தற்கொலை செய்தாலும் கடன்காரர்கள் மனைவி, குழந்தைகளை தொந்தரவு செய்வார்களே என கருதிய அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    நேற்று இரவு கணவன், மனைவி இருவரும் குழந்தைகள் ஆராதனா, ஆலியா ஆகியோருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தனர். இதில் சிறிது நேரத்தில் அந்த குழந்தைகள் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பின்னர் குழந்தைகளின் அதே அறையில் அலெக்ஸ் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். பக்கத்து அறையில் விக்டோரியா தூக்குப்போட்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

    இன்று காலை வழக்கம் போல் கடன்காரர் ஒருவர் அந்த வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. எந்த சப்தமும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

    இது பற்றி தகவல் அறிந்த பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். மேலும் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். பின்னர் நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடன் தொல்லை காரணமாக ஜவுளிக்கடை அதிபர் 2 குழந்தைகளை கொன்று மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    மதுரவாயலில் கடன் பிரச்சனை காரணமாக 2 குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் கணபதி நகர் தாமஸ் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்து வந்தவர் சிபிராஜ்.

    இவரது மனைவி சைலஜா. இவர்களுக்கு ஸ்ரீலட்சுமி (வயது 4) ஆதிதேஷ் (வயது 2) என்கிற இரண்டு குழந்தைகள்.

    இன்று காலை 8.30 மணிஅளவில் கேரளாவில் இருந்து சிபிராஜின் நண்பர் ஜீனத் ஆலப்பாக்கத்தில் உள்ள சிபிராஜின் வீட்டிற்கு வந்தார்.

    கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கையறையில் சைலஜா மற்றும் 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் கிடந்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு போராடிய சைலஜாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.

    சைலஜா கணவரான சிபிராஜ் கோயம்பேட்டில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். பிப்ரவரி மாதம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிபிராஜ் இறந்து விட்டார். சைலஜா சிபிராஜின் இரண்டாவது மனைவி.

    கடன் பிரச்சனை காரணமாக குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு சைலஜா மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக சிபிராஜின் நண்பரான ஜீனத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல் அருகே குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே சிறுமலை பசலி கிராமத்தை சேர்ந்தவர் குப்பாண்டி என்கிற பாலு. விவசாயி. அவரது மனைவி செல்லம்மாள் (வயது 28). இவர்களுக்கு பொன்னர் (6), பெரியக்காள் (2) ஆகிய குழந்தைகள் இருந்தனர்.

    கடந்த சிலநாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தும் சண்டை ஓய்ந்தபாடில்லை.

    நேற்று இரவும் வழக்கம் போல் 2 பேருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. இதனால் மனமுடைந்த செல்லம்மாள் தற்கொலை செய்வது என்று முடிவு செய்தார். பின்னர் தான் மட்டும் இறந்தால் குழந்தைகள் வாழ்க்கை பாதிக்ககூடும் என கருதி அவர்களையும் கொன்று விட தீர்மானித்தார்.

    இன்று காலை செல்லம்மாள் தனது மனதை கல்லாக்கி 2 குழந்தைகளை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்கு வந்தார். அங்கு 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசினார். இதனை அங்கு உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த செல்லம்மாள் கிணற்றில் குதித்தார்.

    ஆனால் சிறிது நேரத்தில் 2 குழந்தைகளும் பிணமாக மிதந்தனர். மலை கிராம மக்கள் செல்லம்மாளை மீட்டனர். அவர் உடனடியாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் பிரதாப், திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசாரும் விரைந்தனர். 2 குழந்தைகளின் உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார். #Kundrathur #Abirami

    பூந்தமல்லி, செப். 3-

    சென்னை குன்றத்தூரை சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி தனது 2 குழந்தைகளுக்கு பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது.

    அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக அவர் குழந்தைகளை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில் அபிராமி, பெற்ற குழந்தைகளையே கொலை செய்யும் அளவுக்கு கொடூர கொலையாளியாக மாறுவதற்கு காரணம் என்ன? என்பது பற்றி பரபரப்பான புதிய தகவல் கள் கிடைத்துள்ளன.

    சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் பணியாற்றிய போது தான் அபிராமி, விஜயை சந்தித்துள்ளார். முதல் பார்வையிலேயே காதல் ஏற்பட்டது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண் டனர். இவர்களின் இல்லற வாழ்க்கையில் அஜய், கார்னிகா என 2 குழந்தைகள் பிறந்தன.

    திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல் வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமி‌ஷன் அடிப்படை யில் வேலை செய்து வந்தார். ஆரம்பத்தில் சந்தோ‌ஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது.

    இதன் பின்னர் கடந்த 2 மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்து டன் அபிராமி பழக தொடங் கினார். கணவர், வேலை வி‌ஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

    இதனால் 2 பேருக்கும் இடையே நெருக்கம் அதிக மானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.

    இதன்பிறகு இந்த சுந்தரத் துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது.

    இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபி ராமி, நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறியுள்ளார். இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்.

    அபிராமி, சுந்தரம் இருவர் மீதும் கொலை, கூட்டு சதி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர்.

    இந்த வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கி தர போலீசார் முடிவு செய்துள் ளனர்.

    இந்த நிலையில் குழந்தை கள் கொலை செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் சுதா கூறும்போது, சிறுவன் அஜய் 3 மாத குழந்தையாக இருக்கும் போதில் இருந்தே எங்களுக்கு தெரியும். 2-வது பெண் குழந்தையும் இங்கேதான் பிறந்தது. குழந்தைகளை கொல்லாமல் விட்டிருந்தால் நாங்களே பாசத்தோடு வளர்த்திருப்போம் என்றார். * * * அபிராமி

    ×