என் மலர்

  நீங்கள் தேடியது "mother suicide attempt"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரவாயலில் கடன் பிரச்சனை காரணமாக 2 குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  போரூர்:

  மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் கணபதி நகர் தாமஸ் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்து வந்தவர் சிபிராஜ்.

  இவரது மனைவி சைலஜா. இவர்களுக்கு ஸ்ரீலட்சுமி (வயது 4) ஆதிதேஷ் (வயது 2) என்கிற இரண்டு குழந்தைகள்.

  இன்று காலை 8.30 மணிஅளவில் கேரளாவில் இருந்து சிபிராஜின் நண்பர் ஜீனத் ஆலப்பாக்கத்தில் உள்ள சிபிராஜின் வீட்டிற்கு வந்தார்.

  கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கையறையில் சைலஜா மற்றும் 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் கிடந்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு போராடிய சைலஜாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.

  சைலஜா கணவரான சிபிராஜ் கோயம்பேட்டில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். பிப்ரவரி மாதம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிபிராஜ் இறந்து விட்டார். சைலஜா சிபிராஜின் இரண்டாவது மனைவி.

  கடன் பிரச்சனை காரணமாக குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு சைலஜா மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

  இதுதொடர்பாக சிபிராஜின் நண்பரான ஜீனத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர் அருகே 3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  குளித்தலை:

  கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தியை சேர்ந்தவர் வீர பாண்டி, தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகா (வயது 28). இவர்களுக்கு தனிஷ்கா (8), தனுஷ்கா (6), துர்கா (3) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

  இன்று அதிகாலை கார்த்திகாவின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கதவை தட்டி கார்த்திகாவை அழைத்துள்ளனர். ஆனால் உள்ளே இருந்து எந்தவிதமான சத்தமும் வரவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது உள்ளே கார்த்திகா மற்றும் அவரது 3 மகள்கள் வாயில் நுரை தள்ளியபடி மயக்கமடைந்து கிடந்தனர்.

  அதிர்ச்சியடைந்த பொது மக்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். பின்னர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  அப்போது கார்த்திகா 3 குழந்தைகளுக்கும் வி‌ஷம் கொடுத்து அவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. கார்த்திகாவின் கணவர் வீரபாண்டிக்கு மது பழக்கம் இருந்து வந்தது. தினமும் குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் வீட்டு செலவுக்கும் பணம் கொடுக்கவில்லை.

  இதனால் குடும்பத்தை நடத்துவதில் கார்த்திகா மிகவும் சிரமமடைந்தார். நேற்றிரவும் வீரபாண்டி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் சத்தம் போட்டதையடுத்து வீரபாண்டி அங்கிருந்து சென்று விட்டார்.

  கணவன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதால் வாழ்க்கையில் விரக்தியடைந்த கார்த்திகா, தனது 3 மகள்களுக்கும் நேற்றிரவு சாப்பாட்டுடன் அரளி விதையை அரைத்து கலந்து கொடுத்து விட்டார். அதனை 3 மகள்களும் சாப்பிட்ட பின்னர் அவரும் வி‌ஷம் கலந்த உணவை சாப்பிட்டுள்ளார்.

  வீரபாண்டி வெளியே சென்று விட்டதாலும், பொது மக்கள் யாருக்கும் தெரியாததாலும் கார்த்திகாவும், அவரது மகள்களும் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை உயிருக்கு போராடியுள்ளனர். இன்று காலை பொதுமக்கள் பார்க்கவே 4 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இல்லையென்றால் 4 பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே குடும்ப தகராறு காரணமாக மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  பெருந்துறை:

  பெருந்துறை அருகே உள்ள சிலேட்டர்புரம், தமிழ் நகரை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மனைவி திலகவதி. இவர்களது மகள் சுரக்ஷா (7), மகன் பிரவேஷ்குமார் (7).

  ராபர்ட் பெருந்துறை அருகே தனியார் பால் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிகிறார். திலகவதி அதே பகுதியில் சுரேஷ்குமார் என்பவரின் துணிக்கடையில் டெய்லராக வேலை பார்த்தார்.

  திலகவதிக்கும், ராபர்ட்டுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் திலகவதி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். வாழப்பிடிக்கவில்லை என்று அவர் கூறி வந்ததாக தெரிகிறது.

  இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி ராபர்ட் வேலைக்கு சென்றார். திலகவதி, சுரக்ஷா, பிரவேஷ்கு மார் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

  மன விரக்தியில் இருந்த திலகவதி எலி மருந்தை (வி‌ஷம்) சாப்பிட்டார். இதை சுரக்ஷா, பிரவேஷ்குமாரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

  தான் இறந்துவிட்டால் குழந்தைகள் கதி என்னாகுமோ? என்று திலகவதி நினைத்தார். எனவே அவர் சுரக்ஷா, பிரவேஷ்குமார் ஆகியோருக்கும் வி‌ஷம் கொடுத்தார்.

  இதனால் 3 பேரும் மயங்கினர். அவர்களது நடமாட்டம் இல்லாததை கண்டு அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். எனவே அவர்கள் ராபர்ட்டின் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

  திலகவதி, சுரக்ஷா, பிரவேஷ்குமார் ஆகிய 3 பேரும் மயங்கி கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக திலகவதி வேலை பார்த்த துணிக்கடையை சேர்ந்த சுரேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  அவர் சம்பவ இடத்துக்கு வந்து திலகவதி, சுரக்ஷா, பிரவேஷ்குமார் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

  பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரக்ஷா பரிதாபமாக இறந்தார்.

  திலகவதி, பிரவேஷ்கு மார் ஆகிய 2 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் குடும்பத்தகராறு காரணமாக 3 வயது குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  மதுரை:

  மதுரை ஜெய்ஹிந்துபுரம், ஜீவாநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி முத்துமாரி (வயது 29). இவர்களுக்கு விசாகா என்ற 3 வயது மகள் இருந்தாள்.

  செந்தில்குமார் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை இருந்துள்ளது.

  இன்று காலை முத்து மாரியின் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அவரது தாயார் போலீசில் புகார் செய்தார்.

  ஜெய்ஹிந்துபுரம் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தனர். அங்கு குழந்தை விசாகா, கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தாள்.

  அவளது அருகில் தாய் முத்துமாரியும் கழுத்து அறுக்கப்பட்டு மயங்கிக் கிடந்தார். மேலும் அவர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

  அவரை போலீசார் மீட்டு ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்து மாரி சிகிச்சை பெற்று வருகிறார்.

  இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பலூர் அருகே 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  குன்னம்:

  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் அருகே உள்ள கல்லப்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜ லட்சுமி (வயது 29). இவர்களுக்கு சஞ்சனாத்ஸ்ரீ (5), சிவனாத்ஸ்ரீ (3) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

  இந்நிலையில் சிலம்பரசனுக்கும், ராஜலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ராஜலட்சுமி கணவருடன் கோபித்து கொண்டு தனது 2 குழந்தைகளுடன், பூலாம்பாடியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

  இதனிடையே சிலம்பரசன் ராஜலட்சுமிக்கு போன் செய்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தண்ணீரில் எலிமருந்தை கலந்து, தனது 2 குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு அவரும் குடித்து விட்டார்.

  இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவனாத்ஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். ராஜலட்சுமி, சஞ்சனாத்ஸ்ரீ ஆகியோர் உயிருக்கு போராடி வருகிறார்கள். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

  இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ லட்சுமியின் நடத்தையில், சிலம்பரசன் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது.
  ×