காதல் தகராறில் மகன் மாயமானதால் போலீஸ் நிலையம் முன்பு தாய் தீக்குளிக்க முயற்சி

கடந்த வாரம் சிறுவனும், சிறுமியும் திடீரென மாயமானார்கள். சிறுவனின் தாய் இன்று காலை மகனை மீட்டுதரக்கோரி தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு தனது உடலில் மண்எண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
காதல் தகராறில் மகன் மாயமானதால் போலீஸ் நிலையம் முன்பு தாய் தீக்குளிக்க முயற்சி
Published on

ராயபுரம்:

தண்டையார்பேட்டை ரெட்டக்குடி தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இவருடன் பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுமியும் வேலைபார்த்தார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

கடந்த வாரம் சிறுவனும், சிறுமியும் திடீரென மாயமானார்கள். இந்த நிலையில் சிறுமி மட்டும் வீட்டுக்கு திரும்பினார். ஆனால் சிறுவன் மாயமாகி உள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் இன்று காலை மகனை மீட்டுதரக்கோரி தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு தனது உடலில் மண்எண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com