என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veer Savarkar"

    • அந்தமானில் வீர சாவர்க்கர் சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்துவைத்தார்.
    • சாவர்க்கரைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பூங்கா ஒன்றையும் தொடங்கி வைத்தார்.

    ஸ்ரீவிஜயபுரம்:

    சாவர்க்கரின் புகழ்பெற்ற கவிதையான 'சாகரா ப்ராண்' எழுதப்பட்டு 116வது ஆண்டு நிறைவை ஒட்டி, உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அந்தமான் நிகோபர் தீவுக்குச் சென்றார்.

    தெற்கு அந்தமானில் உள்ள பியோத்னாபாத் என்ற இடத்தில் நிறுவப்பட்ட வீர சாவர்க்கர் சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்துவைத்தார். அதன்பின், சாவர்க்கரைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பூங்கா ஒன்றையும் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:

    அந்தமான் நிகோபர் தீவுகள் ஒரு தீவுக்கூட்டம் அல்ல. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தவம், தியாகம், அர்ப்பணிப்பு, தேசபக்தியால் உருவான ஒரு புனித பூமி.

    நாட்டில் தீண்டாமையை ஒழிக்க, வீர சாவர்க்கர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒருபோதும் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

    அவர் தமது காலத்தில் ஹிந்து சமூகத்தில் இருந்த தீமைகளை எதிர்த்து துணிச்சலுடன் போராடினார். சமூகத்தின் எதிர்ப்பு அவருக்கு இருந்தாலும் அவர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்தார்.

    வீர சாவர்க்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. பிறப்பிலே ஒரு உண்மையான தேசபக்தர்.

    சுதந்திரத்துக்கு முன், அந்தமான் நிகோபர் சிறைக்கு கொண்டு வரப்பட்ட நபர், அங்கிருந்து திரும்பி வந்தாலும் அவர்களின் மனம், ஆன்மா அழிக்கப்பட்டு, ஒருபோதும் அசல் வடிவத்திற்கு திரும்ப முடியாது.

    ஆனாலும், வீர சாவர்க்கர் தமது வாழ்க்கையின் கடினமான நாட்களை இங்கே கழித்ததால் இந்தியருக்கு ஒரு தீர்த்த ஸ்தலமாக மாறிவிட்டது. இந்த இடம், மற்றொரு சுதந்திர போராட்ட வீரரான நேதாஜியின் நினைவுடனும் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    சாவர்க்கர் 1911-ம் ஆண்டு ஸ்ரீ விஜயபுரம் என அழைக்கப்படும் போர்ட் பிளேயரில் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாவர்க்கரைப் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துகள் அவமானகரமானது.
    • ராகுல் காந்தி நாசிக் வந்தால் அவரது முகத்தில் கருப்பு மை பூசுவோம் என்றார்.

    மும்பை:

    காங்கிரஸ் கட்சியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனாவும் தேசிய அளவில் இந்தியா கூட்டணி மற்றும் மகாராஷ்டிர அளவில் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

    இதற்கிடையே, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, சுதந்திரப் போராட்ட வீரர் வீரசாவர்க்கரை 'மாபிவீர்' (மன்னிப்பு கேட்கும் வீரர்) என்று விமர்சித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், உத்தவ் சிவசேனா கட்சியின் நாசிக் நகரப்பிரிவு துணைத்தலைவர் பாலா தராதே, வீர சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    சாவர்க்கரைப் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துகள் அவமானகரமானது. அதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். ராகுல் காந்தி நாசிக் வந்தால் அவரது முகத்தில் கருப்பு மை பூசுவோம். அதைச் செய்ய முடியாவிட்டால், அவரது வாகன பேரணி மீது கற்களை வீசுவோம். மகா விகாஸ் அகாடி கூட்டணியின் எதிர்காலம் என்னவாக இருந்தாலும், அதைப்பற்றி கவலை இல்லை என தெரிவித்தார்.

    • சாவர்க்கர் பற்றி அவதூறு பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது.
    • இந்த வழக்கு புனே நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    மும்பை:

    ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கடந்த 2023ல் மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரை விமர்சித்தார். அவரது இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி அவர்மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி தெரிவித்த கருத்து வரலாற்று உண்மைகள் அடிப்படையிலானது. அதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான ராகுலின் வாதங்களை அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி முன்வைக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • வீர சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • இந்தக் கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது.

    மும்பை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை நடத்தி வருகிறார்.

    இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபையின் முன்னோடி தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான வீர சாவர்க்கர் ஆங்கிலேயேர்களுக்கு உதவியதாகவும் அவர்களின் ஆதரவை எதிர்பார்த்து கருணை மனு கொடுத்ததாகவும் கூறினார். அதற்கு ஆதாரமாக ஒரு கடிதத்தையும் வெளியிட்டார்.

    ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பிட் பாத்ரா கூறுகையில், நாட்டின் பெருமையாக விளங்கிய வீர சாவர்க்கரை ராகுல் காந்தி அவமரியாதை செய்திருக்கிறார் . வீர சாவர்க்கர் மிகச் சிறந்த விடுதலைப் போராட்ட வீரர் என முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே புகழாரம் சூட்டியுள்ளார். இந்திரா காந்தி சொல்வது பொய்யா அல்லது ராகுல் காந்தி சொல்வது பொய்யா என சோனியா காந்தி குடும்பம் விளக்க வேண்டும். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு சிறை சென்றார்கள் என சோனியா காந்தி குடும்பம் நினைத்துக் கொண்டிருக்கிறது என காட்டமாக தெரிவித்தார்.

    மேலும், வீர சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

    இந்நிலையில், தனது தாத்தா குறித்து ராகுல் காந்தி அவமதித்து விட்டார் எனக்கூறி ரஞ்சித் சாவர்க்கர் சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    • வீர சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
    • ரூபாய் நோட்டுகளில் வீர சாவர்க்கர் உருவம் பொறிக்க வேண்டும் என இந்து மகாசபா கோரிக்கை விடுத்தது.

    லக்னோ:

    சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபா முன்னாள் தலைவருமான வீர சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, மத்திய அரசுக்கு இந்து மகாசபா சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில் கூறியதாவது:

    ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் மற்றும் இதர சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்களைப் பொறிக்க வேண்டும். மேலும், பாராளுமன்ற கட்டிடத்துக்குச் செல்லும் சாலைக்கு வீர சாவர்க்கர் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • கர்நாடக சட்டசபையில் இருந்து சாவர்க்கர் உருவப்படத்தை அகற்றுவேன் என பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
    • காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கேவுக்கு எதிராக மும்பை, நாக்பூரில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடக சட்டசபையில் இருந்து சாவர்க்கரின் உருவப்படத்தை அகற்றுவது சரியானது. அனுமதித்தால் அதை அகற்றுவேன் என தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், சாவர்க்கரின் சித்தாந்தம் வெறுப்பைத் தூண்டும் வகையில் இருப்பதால் கர்நாடக சட்டசபையில் அவரது புகைப்படம் இருக்கக் கூடாது என தான் கருதுகிறேன். சாவர்க்கருக்கு வீர் பட்டம் கொடுத்தது யார்? அதில் தெளிவு இல்லை. பா.ஜ.க.வுக்கு தெரிந்தால் சொல்லட்டும். சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் ஓய்வூதியம் வாங்கினாரா இல்லையா? மன்னிப்பு கடிதம் எழுதினாரா, இல்லையா என கேள்வி எழுப்பினார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கேவுக்கு எதிராக மும்பை மற்றும் நாக்பூரில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், வீர சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர் கூறுகையில், காங்கிரஸ் நீண்ட காலமாக வீர் சாவர்க்கரையும் புரட்சியாளர்களையும் துஷ்பிரயோகம் செய்து வருகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
    • இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    லக்னோ:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார்.

    மகாராஷ்டிர மாநிலத்தின் அகோலாவில் 2022, டிசம்பர் 17ல் நடந்த கூட்டத்தில் பேசியபோது வீர சாவர்க்கர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தார்.

    இதையடுத்து, வழக்கறிஞர் நிருபேந்திர பாண்டே ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு லக்னோ கோர்ட் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சாவர்க்கர் குறித்த அவதூறு வழக்குக்காக லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    சுதந்திரப் போராட்ட வீரரான வீர சவர்க்காருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    சுதந்திரப் போராட்ட வீரரான வீர சவர்க்காரின் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது சேவையை நினைவு கூரும் வகையில் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரரான வீர சவர்க்காருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், வீர சவர்க்காரின் மன தைரியம், தேசப்பற்று மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை வலுவான இந்தியாவை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்துள்ளன. நிறைய பேருக்கு அவர் முன்னுதாரணமாக விளங்கி வருகிறார் என பதிவிட்டுள்ளார்.
    ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு பதிலாக சவார்கர் படத்தை இடம்பெறச்செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அகில பாரத இந்து மஹாசபை கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்துத்துவ இயக்கங்களின் முன்னோடியாக கருதப்படும் விநாயக் தாமோதர் சவாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சில அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவரது பிறந்தநாள் நேற்று இந்த அமைப்பினரால் விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக சவார்கர் படத்தை இடம்பெறச்செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அகில பாரத இந்து மஹாசபை கோரிக்கை விடுத்துள்ளது.

    காந்தி மற்றும் சவார்கர்

    ×