search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "black"

    • ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூர் ஒன்றிய குழுக்கள் சார்பில் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    ராசிபுரம்:

    மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றதை கண்டித்தும், அங்கு பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாகிடவும், பல தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ஒன்றிய அரசு உடனடியாக வாபஸ் பெற கோரியும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூர் ஒன்றிய குழுக்கள் சார்பில் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டம்

    ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலாளர் லலிதா கண்டன உரையாற்றினார்.

    வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரி, ராசிபுரம் ஒன்றிய தலைவர் சாவித்திரி, ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஞானசவுந்தர்யா, பொருளாளர் தேவி,துணத்தலைவர் கற்பகவல்லி, திராவிடர் விடுதலை கழகம் நகர அமைப்பாளர் சுமதிமதிவதனி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மணிமாறன், வெண்ணந்தூர் செயலாளர் செங்கோட்டுவேல், திராவிடர் விடுதலைக் கழகம் நகர செயலாளர் பிடல் சேகுவாரா உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.      

    • சக்கரசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர், கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • கடந்த 3 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகள் படிக்கவும் முடியவில்லை.

    சேலம்:கண்ணில் கருப்பு துணி கட்டி கலெக்டர் அலுவலகம் வந்த தொழிலாளிகள்கண்ணில் கருப்பு துணி கட்டி கலெக்டர் அலுவலகம் வந்த தொழிலாளிகள்

    சேலம் மாவட்டம் ஓமலூர் சக்கரசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர், கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து ஒருவரை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனர்.

    இதையடுத்து மனு அளித்துவிட்டு வந்து நிருபர்களிடம் பெரியஅண்ணன் கூறும்போது, எனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தேன். தற்போது விவசாயம் நலிவடைந்து விட்டதால் விசைத்தறி தொழில் செய்வதற்காக எந்திரத்திற்கு ரூ.10 லட்சம் வங்கியில் கடனை பெற்றேன்.

    இதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு மின் இணைப்பு கேட்டு 17 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்திய உள்ளேன். ஆனால் இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை. இது குறித்து மின்சாரத்துறை அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்தேன்.

    பின்னர் மின்சாரத்துறை சார்பில் மின் இணைப்பு வழங்குவதற்காக அதிகாரி மற்றும் ஊழியர்கள் வருகை புரிந்தனர். அப்போது அருகில் இருந்த வசதி படைத்த மணி உள்ளிட்டோர் மின் இணைப்பு வழங்க கூடாது என தடுத்துள்ளனர். மேலும் மின்சாரத் துறை ஊழியர்களுகடகு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் மின்சார துறை அதிகாரிகள் மின் இணைப்பு வழங்காமல் சென்று விட்டனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகள் படிக்கவும் முடியவில்லை. வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றி வாழ்ந்து வருகிறோம். தற்போது கடன் பெற்ற இடத்தில் ஒரு வருடமாக வட்டி கட்ட முடியாத சூழ்நிலை உள்ளது.

    எனவே தொழில் தொடங்குவதற்கு மின் இணைப்பு அவசியம் என்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு எங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருட்டில் வாழக்கூடிய நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

    மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

    • அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்க–ளில் உள்ள கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள கறுப்பு ஸ்டிக்கர்கள் அகற்றம்.
    • டிரைவர்களிடம் வாகன குறைகளை கேட்ட–றிந்து, அவற்றை நிவர்த்தி செய்யவும் உத்தரவிட்டார்.

    சேலம்:

    தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் போலீசார், அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்க–ளில் உள்ள கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள கறுப்பு ஸ்டிக்கர்களை உடனே அகற்றி மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அறிக்கை அளிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். அதன்படி சேலம் மாவட்டத்தில் போலீசாரின் வாகனங்களில் உள்ள கறுப்பு ஸ்டிக்கர் அகற்றும் பணி ஒரு வாரமாக நடந்தது. நேற்று சேலம் மாவட்ட ஆயுதப்படை கூடுதல் துணை கமிஷனர் ரவிச்சந்திரன் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து, டிரைவர்களிடம் வாகன குறைகளை கேட்ட–றிந்து, அவற்றை நிவர்த்தி செய்யவும் உத்தரவிட்டார்.

    • சுதந்திர தின விழாவின் போது பாளை ஆயுதப்படை மைதானத்தில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது.
    • சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது ஆயுதப்படை மைதானத்திற்கு கருப்பு உடைகள் அணிந்தபடி மாணவ மாணவிகள் சிலர் மைதானத்திற்குள் வந்தனர்.

    நெல்லை:

    சுதந்திர தின விழாவின் போது பாளை ஆயுதப்படை மைதானத்தில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டி ருந்தது. அப்போது திடீரென அங்கிருந்த ஸ்பீக்கர் சிலவற்றில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக வேறு ஸ்பீக்கர்கள் புதிதாக கொண்டுவரப்பட்டு மீண்டும் கலை நிகழ்ச்சி தொடங்கியது.இதன் காரணமாக கலை நிகழ்ச்சி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

    சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது ஆயுதப்படை மைதானத்திற்கு கருப்பு உடைகள் அணிந்தபடி மாணவ மாணவிகள் சிலர் மைதானத்திற்குள் வந்தனர். அப்போது அங்கு நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த போலீசார் சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உடை அணிந்து வந்ததாக நினைத்து அந்த மாணவ- மாணவிகளை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கருப்பு நிற உடைகள் அணிந்து வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் உள்ளே அனுமதித்தனர்.

    • ரெயில்கள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன.

    ஈரோடு:

    கோவை-ஷீரடி விரைவு ரெயிலை தனியாருக்கு விடுவதை உடனடியாக கைவிட வேண்டும். நாடு முழுவதும் விரைவு ரெயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    ராமாயண யாத்திரை என்ற பெயரில் டெல்லி-நேபால் ரெயிலை ஐ.ஆர்.சி.டி.சி-க்கு விற்றதை வாபஸ் பெற வேண்டும். பாரத் கவுரவ் என்ற பெயரில் சுற்றுலா ரெயில்கள் என்ற பெயரில் 100 விரைவு ரெயில்களை தனியாருக்கு விற்கும் முடிவை உடனே கைவிட வேண்டும்.

    உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் ஈரோடு கிளை சார்பில் இன்று கறுப்பு தினமாக கடைபிடித்து ஈரோடு ரெயில்வே பணிமனையில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் வினோத்குமார், செயலாளர் தர்மராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நிர்வாகிகள் முனிச்சந்த் மீனா, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன. இதில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×