இந்திய மாதர் சம்மேளனத்தினர் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூர் ஒன்றிய குழுக்கள் சார்பில் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்
இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்
Published on

ராசிபுரம்:

மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றதை கண்டித்தும், அங்கு பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாகிடவும், பல தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ஒன்றிய அரசு உடனடியாக வாபஸ் பெற கோரியும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூர் ஒன்றிய குழுக்கள் சார்பில் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலாளர் லலிதா கண்டன உரையாற்றினார்.

வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரி, ராசிபுரம் ஒன்றிய தலைவர் சாவித்திரி, ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஞானசவுந்தர்யா, பொருளாளர் தேவி,துணத்தலைவர் கற்பகவல்லி, திராவிடர் விடுதலை கழகம் நகர அமைப்பாளர் சுமதிமதிவதனி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மணிமாறன், வெண்ணந்தூர் செயலாளர் செங்கோட்டுவேல், திராவிடர் விடுதலைக் கழகம் நகர செயலாளர் பிடல் சேகுவாரா உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.      

X

Maalai Malar
www.maalaimalar.com