அந்த விஷயத்துக்கு எப்பயும் NO தான் - பிரியா பவானி ஷங்கரின் பளிச் பதில்

பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார்.பிளாக் திரைப்படம் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அந்த விஷயத்துக்கு எப்பயும் NO தான் - பிரியா பவானி ஷங்கரின் பளிச் பதில்
Published on

மாநகரம், மான்ஸ்டர், டானாக்காரன், இறுகப்பற்று போன்ற வெற்றி படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் அடுத்ததாக ஜீவா நடித்துள்ள "பிளாக்" திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம் பற்றி கதையாக் அமைந்துள்ளது.

பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

புதிய கேடட் கமினியூட்டியில் முதல் ஆளாக வீட்டை வாங்கிக் கொண்டு வருகின்றனர் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் தம்பதி. அப்பொழுது அந்த வீட்டில் அவர்கள் இருக்கும் சுற்றுச் சூழலில் அமானுஷ்யங்கள் நடப்பதுப் போல் டிரைலரில் காட்சிகள் அமைந்துள்ளது.

திரைப்படம் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த நேர் காணல் ஒன்றில் பிரியா பவானி சங்கரிடம் தொகுப்பாளர் " எந்த விஷயத்துக்கு பிரியா எப்பொழுதுமே நோ என கூறுவார் என்று கேட்ட கேள்விக்கு பிரியா " என்னுடையா உடம்பை என்றைக்கும் ஒரு பொருளாகவோ , வியாபாரமாகவோ விற்க மாட்டேன். அதை பிரதானமாக வரும் கதாப்பாத்திரத்தில் நடிக்க எனக்கு என்றும் உடன்பாடு இல்லை " என கூறியுள்ளார்.

டிமான்ட்டி காலனி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதேப்போல் இந்த படமும் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் வெற்றியை பெற்றுக் கொடுக்குமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com