ஜீவா நடித்த `ப்ளாக்' திரைப்படம் ஓடிடியில் வெளியானது

கடந்த மாதம் பிளாக் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியுள்ளார்.
ஜீவா நடித்த `ப்ளாக்' திரைப்படம் ஓடிடியில் வெளியானது
Published on

மாநகரம், மான்ஸ்டர், டானாக்காரன், இறுகப்பற்று போன்ற வெற்றி படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் அடுத்ததாக ஜீவா நடித்துள்ள பிளாக் திரைப்படத்தை தயாரித்துள்ளது. டைம் லூப் திரைப்படமாக இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாக எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

கடந்த மாதம் பிளாக் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியுள்ளார். இதில் நாயகனாக ஜீவா நடித்துள்ளார். இவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். திரைப்படம் தற்பொழுது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. திரைப்படத்தை திரையரங்கிள் காண தவற விட்டவர்கள் ஓடிடியில் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நீண்ட நாளுக்கு பிறகு ஜீவாவுக்கு ஒரு கம் பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்திற்கு பிறகு பிரியா பவானி சங்கருக்கு மேலும் ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com