ஜீவா நடித்த ப்ளாக் திரைப்படத்தை பாராட்டிய கார்த்தி

கடந்த வாரம் பிளாக் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நாயகனாக ஜீவா நடித்துள்ளார். இவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
ஜீவா நடித்த ப்ளாக் திரைப்படத்தை பாராட்டிய கார்த்தி
Published on

மாநகரம், மான்ஸ்டர், டானாக்காரன், இறுகப்பற்று போன்ற வெற்றி படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் அடுத்ததாக ஜீவா நடித்துள்ள பிளாக் திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம். டைம் லூப் திரைப்படமாக இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாக எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

கடந்த வாரம் பிளாக் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியுள்ளார். இதில் நாயகனாக ஜீவா நடித்துள்ளார். இவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த நடிகர் கார்த்தி படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் " வாழ்த்துக்கள் ஜீவா ப்ரோ. ப்ளாக் திரைப்படம் முழுவதுமாகவே பார்ப்பவர்களை த்ரில்லிங்கான அனுபவத்தை அடிக்கடி கொடுத்த வண்ணம் இருந்தது. மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள். ஒரு பெரிய அறிவுசார்ந்த விஷயத்தை மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் அமைத்ததற்கு பாராட்டுகள்" என பதிவிட்டுள்ளார்.

நீண்ட நாளுக்கு பிறகு ஜீவாவுக்கு ஒரு கம் பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்திற்கு பிறகு பிரியா பவானி சங்கருக்கு மேலும் ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com