ஆந்திராவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது.நிலநடுக்கம் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
ஆந்திராவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
Published on: 

ஆந்திர மாநிலம் பல்நாடு பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

வினுகொண்டாவிலிருந்து வடமேற்கே 20 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது.

நிலநடுக்கம் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். அதிர்ஷ்டவசமாக, நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com