என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fossil"

    • இதுபோன்ற புதைபடிவம் இதற்கு முன் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
    • ஆராய்ச்சியாளர்கள் நவீன முதலைகளுடன் வலுவான ஒற்றுமைகளைக் கண்டறிந்தனர்.

    ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் 201 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பழங்கால உயிரினத்தின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இது டைனோசர்களை விட பழமையான 'பைட்டோசர்' என்ற ஊர்வனவற்றிற்கு சொந்தமானது.

    ஃபதேகர் பகுதியில் உள்ள மேகா கிராமத்தில் உள்ள ஒரு குளத்தின் அருகே கிராமவாசிகளால் இந்தப் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகஸ்ட் 21 அன்று அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    அந்தப் பகுதியை ஆய்வு செய்து, அது ஜுராசிக் காலத்தின் புதைபடிவம் என்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர். 

    பின்னர், ஜோத்பூரில் உள்ள ஜேஎன்வியூ பூமி அறிவியல் நிறுவனத்தின் டீன் டாக்டர் வி.எஸ். பரிஹார் தலைமையிலான குழு இது குறித்த ஆய்வைத் தொடங்கியது.

    இது கிட்டத்தட்ட முழுமையான எலும்புக்கூடு என்பதால் இந்த கண்டுபிடிப்பு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுபோன்ற புதைபடிவம் இதற்கு முன் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் இந்தியாவில் ஜுராசிக் காலத்தின் பாறைகளில் இந்த இனத்தின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை.

     

    புதைபடிவத்தைப் பற்றிப் பேசிய டாக்டர் பரிஹார், "இது பைட்டோசார் குடும்பத்தைச் சேர்ந்தது. முதலை போன்ற இந்த ஊர்வன டைனோசர்களுக்கு முன்பு, பிந்தைய ட்ரயாசிக் மற்றும் ஆரம்பகால ஜுராசிக் காலங்களில் வாழ்ந்தன. அவை சுமார் 1.5 முதல் 2 மீட்டர் நீளம் கொண்டவை" என்று கூறினார்.

    இந்த உயிரினத்தின் முதுகெலும்பு ஆய்வு செய்யப்பட்டபோது, ஆராய்ச்சியாளர்கள் நவீன முதலைகளுடன் வலுவான ஒற்றுமைகளைக் கண்டறிந்தனர்.

    இந்த புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் தற்போது வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    ஜெய்சால்மர் பகுதி பண்டைய உயிரினங்களின் புதைபடிவங்களுக்கு பிரபலமானது. கடந்த காலத்தில், டைனோசர் கால்தடங்கள் தையாட் அருகே காணப்பட்டன. மேலும் 180 மில்லியன் ஆண்டுகள் பழமையான மர புதைபடிவங்கள் அகல் கிராமத்தில் காணப்பட்டன.   

    • ரியோ டி லாஸ் சைனாஸ் பள்ளத்தாக்கில் விஞ்ஞானிகள் புதைபடிவத்தைக் கண்டுபிடித்தனர்.
    • இந்த விலங்குகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போயிருக்கலாம்

    74 மில்லியன் (7.4 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களுடன் சேர்ந்து வாழ்ந்த மிகச்சிறிய பாலூட்டியின் புதைபடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

    தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் 40 கிராமுக்கும் குறைவான எடையுள்ள ஒரு சிறிய பாலூட்டி (mammal) உயிரினத்தின் உடல் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கடைவாய்ப்பல் உட்பட தாடை எலும்பின் ஒரு பகுதியாக இருக்கும் புதைப்படிவம் கிடைத்துள்ளது. 

    சிலியின் மாகெல்லன் பகுதியில் உள்ள ரியோ டி லாஸ் சைனாஸ் பள்ளத்தாக்கில் விஞ்ஞானிகள் புதைபடிவத்தைக் கண்டுபிடித்தனர்.

     சிலி பல்கலைக்கழகம் மற்றும் சிலியில் உள்ள மில்லினியம் நியூக்ளியஸ் ஆராய்ச்சி மையம் நடத்திய இந்த ஆராய்ச்சி பிரிட்டிஷ் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    டைனோசர்களுடன் சேர்ந்து வாழ்ந்த இந்த விலங்குகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது எலியை விட சிறிய பாலூட்டியாகும்.

    இது பிளாட்டிபஸைப் போன்ற முட்டையிடும் உயிரினம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    அல்லது கங்காருவைப் போல அதன் குஞ்சுகளை அதன் உடலின் ஒரு பை போன்ற பகுதியில் வைத்திருக்கும் ஒரு விலங்காக இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

    அதன் பற்களிலிருந்து, இது கடினமான காய்கறிகள் அல்லது நண்டுகளை உண்ணும் ஒரு விலங்கு என்பதை அறிய முடிகிறது.

    குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் கொண்ட ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை ஃபாசில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. #Fossil #smartwatch



    ஃபாசில் நிறுவனம் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் மற்றும் கூகுளின் வியர் ஓ.எஸ். கொண்டிருக்கிறது. 

    இத்துடன் நீட்டிக்கப்பட்ட பேட்டரி பேக்கப், புதிய பேட்டரி சேவிங் மோட், மேம்படுத்தப்பட்ட ஆம்பியன்ட் மோட், இன்டகிரேட் செய்யப்பட்ட இதயதுடிப்பு சென்சார், என்.எஃப்.சி., மற்றும் ஜி.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது. ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் 41 மற்றும் 43 எம்.எம். என இருவித அளவுகளில் கிடைக்கிறது.

    350 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் ரேபிட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதன் பேட்டரி சேவிங் மோட் இரண்டு நாட்கள் டெல்லிங் டைம் வழங்ங்குகிறது. கூகுளின் வியர் ஓ.எஸ். கொண்டிருப்பதால் குவிக் ஸ்வைப், தகவல்களை வேகமாக இயக்கும் வசதி, கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் கூகுள் ஃபிட் சேவைகளை பயன்படுத்த முடியும்.



    இதய துடிப்பு சென்சார், ஆப்டிமைஸ் செய்யப்பட்ட கனெக்டிவிட்டி, ஜி.பி.எஸ். மற்றும் என்.எஃப்.சி. உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச்களில் புதிய செயலிகள் ஆட்டோ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஸ்பாடிஃபை மற்றும் நூன்லைட் உள்ளிட்ட செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.

    18 எம்.எம். மற்றும் 22 எம்.எம். அளவுகளில் கிடைக்கும் பிரேஸ்லெட்களில் மாற்றக்கூடிய ஸ்டிராப்கள் வழங்கப்பட்டுள்ளது. புது ஸ்மார்ட்வாட்ச் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆன்ட்ராய்டு உள்ளிட்ட சாதனங்களில் ப்ளூடூத் தொழில்நுட்பம் மூலம் இணைக்க முடியும். வயர்லெஸ் சின்கிங் மற்றும் மேக்னடிக் சார்ஜிங் வசதிகளை சப்போர்ட் செய்கிறது.

    ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் விலை 225 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.18,440 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை நவம்பர் 12ம் தேதி முதல் சர்வதேச சந்தைகளில் கிடைக்கிறது. 
    ×