search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "எலி"

  • வீடியோக்களுடன் ஜாஸ்மிதாவின் பதிவில், ரெயிலில் தூய்மையற்ற நிலை மற்றும் எலிகள் சுற்றித்திரிவதை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது.
  • அடுத்த சில நிமிடங்களில் பயணிகளுக்கு உதவி அளிக்கும் அதிகாரப்பூர்வ ரெயில்வே சேவா சங்கம் ஜாஸ்மிதாவின் புகாருக்கு பதில் அளித்தது.

  ஓடும் ரெயிலில் ஏ.சி. பெட்டியில் எலி சுற்றித்திரிந்த வீடியோவை பெண் பயணி ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஜாஸ்மிதா பதி என்ற அந்த பயணி 2 வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அதில், ஒரு வீடியோவில் ரெயில் பெட்டியில் இருக்கைகளுக்கு கீழே எலி சுற்றித்திரியும் காட்சிகளும், மற்றொன்றில் தூசி படிந்த கண்ணாடி மற்றும் பெட்டியின் மேல்புறமும் காட்டப்பட்டுள்ளது.

  வீடியோக்களுடன் ஜாஸ்மிதாவின் பதிவில், ரெயிலில் தூய்மையற்ற நிலை மற்றும் எலிகள் சுற்றித்திரிவதை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என குறிப்பிட்டு ரெயில்வே அமைச்சகத்தின் பக்கங்களை டேக் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் பயணிகளுக்கு உதவி அளிக்கும் அதிகாரப்பூர்வ ரெயில்வே சேவா சங்கம் ஜாஸ்மிதாவின் புகாருக்கு பதில் அளித்தது.

  அதில், உங்களது பயணச்சீட்டின் பி.என்.ஆர். எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை பகிர்ந்தால் மண்டல மேலாளர் வழியாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

  • குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் நிற்காமல் வந்தது.
  • ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று வீட்டில் இருந்த போது குழந்தையை படுக்க வைத்து விட்டு தாயார் குளிக்கச் சென்றார்.

  அந்த நேரத்தில் வீட்டில் இருந்த எலி ஒன்று குழந்தை அருகில் வந்தது. திடீரென குழந்தையின் மூக்கை எலி கடித்தது.

  இதனால் குழந்தை கதறி அழுதது. சத்தம் கேட்டு குழந்தையின் தாய் மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்தனர்.

  அப்போது குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் நிற்காமல் வந்தது. இதனை தொடர்ந்து குழந்தையை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  எலி இருக்கும் வீடுகளில் குழந்தையை தரையில் படுக்க வைக்க வேண்டாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

  • வங்கி அதிகாரி சிக்கன் கிரேவியை ஓரிரு வாய் சாப்பிட்ட பிறகே கண்டுபிடித்தார்.
  • உணவகம் மீது வங்கி அதிகாரி பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட உணவில் செத்த எலி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  மும்பை நகரில் வங்கி அதிகாரி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஷாப்பிங் முடித்துவிட்டு சபர்பன் பந்த்ரா பகுதியில் உள்ள உணவகத்திற்கு உணவு சாப்பிட வந்துள்ளார்.

  அப்போது அவர், சிக்கன் கிரேவி உணவை ஆர்டர் செய்தார். உணவகத்தில் அவருக்கு பரிமாறப்பட்ட கிக்கன் உணவில் சிக்கனுடன் சேர்ந்து செத்த எலியும் இருந்தது. இதைக்கண்டு வங்கி அதிகாரி அதிர்ச்சி அடைந்தார்.

  ஆனால் வங்கி அதிகாரி சிக்கன் கிரேவியை ஓரிரு வாய் சாப்பிட்ட பிறகே கண்டுபிடித்தார். சிக்கன் துண்டு என்று நினைத்து கடித்த வங்கி அதிகாரிக்கு வித்தியாசம் தெரியவே அதனை உன்னிப்பாக கவனித்தார். அப்போதுதான் அது சிக்கன் துண்டு அல்ல.. சுண்டெலி என்று தெரியவந்தது.

  இதனை உணவக ஊழியர்களிடம் காண்பித்தபோது அது எலிதான் என்பது நிரூபணமானதை அடுத்து, வங்கி அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டனர்.

  சிறுது நேரத்தில் வங்கி அதிகாரிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதை அடுத்து மருத்துமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டார்.

  இதைதொடர்ந்து, உணவகம் மீது வங்கி அதிகாரி பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட உணவக மேலாளர் மற்றும் ஊழியர்கள் இருவரை கைது செய்தனர்.

  • இரவு நேரங்களில் தான் வைத்து செல்லும் பணம் காலை இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • பணத்தை திருடி உரிமையாளரை எலி ஒன்று பாடாய்ப்படுத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

  திருப்பூர்:

  திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மகேஷ் என்பவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் தினசரி பணம் காணாமல் போவது வாடிக்கையாக இருந்துள்ளது. இரவு நேரங்களில் தான் வைத்து செல்லும் பணம் காலை இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒவ்வொரு நாளும் இதே நிலை நீடித்தது. இதனால் ரூ.100, 50 என வைத்து சோதித்து பார்த்த போதும் பணம் மட்டும் காணாமல் போவது தொடர்ந்துள்ளது.

  இதையடுத்து பணம் காணாமல் போவதை கண்டுபிடிக்க கடையில் சிசிடிவி., கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தார். இன்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த பணம் காணாமல் போனது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிசிடிவி., காட்சிகளை பார்த்த போது அவர் மேலும் அதிர்ச்சிக்குள்ளானார்.

  அதிகாலை 4 மணி அளவில் பழங்களுக்கு இடையே புகுந்து வந்த எலி ஒன்று கல்லா பெட்டியில் பிளாஸ்டிக் கூடையில் இருந்த பணத்தை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து கடையில் இருந்த பொருட்களை வெளியேற்றி பார்த்த போது எலி தங்கியிருந்த இடத்தை கண்டறிந்தார். அதில் இது நாள் வரையில் எலி திருடிய பணம் அனைத்தும் எந்தவித சேதமும் இன்றி அங்கு கிடந்துள்ளது. அதனை எண்ணி பார்த்த போது 1500 ரூபாய் இருந்துள்ளது. எல்லோரும் பழத்தை திருடும் எலியை தான் பார்த்திருப்போம். ஆனால் திருப்பூர் பழக்கடையில் எலி பணத்தை திருடி சேதப்படுத்தாமல் பதுக்கி வைத்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  நடிகர்கள் முரளி, வடிவேல் நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தில் எலியின் சேட்டைகளால் முரளியும் வடிவேலும் படாதபாடுபடுவார்கள். அது போல் திருப்பூர் பழக்கடையில் தினமும் பணத்தை திருடி உரிமையாளரை எலி ஒன்று பாடாய்ப்படுத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எலி பணத்தை திருடும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

  • சிசிடிவி உதவியுடன் பார்த்தபோது, குப்பையில் இருந்து சில எலிகள் அந்த உணவுப்பையை எடுத்துக்கொண்டு சாக்கடைக்குள் சென்றது தெரியவந்தது.
  • சாக்கடைக்குள் தேடியபோது அந்த பை கிடைத்தது. அதில் இருந்த நகைகளும் பத்திரமாக இருந்தன.

  மும்பை:

  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த சுந்தரி பிளானிபெல் என்பவர் கோகுல்தாம் காலனி பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

  அவர் தனது தங்க நகைகளை வங்கியில் அடகு வைக்க சென்றபோது வழியில் இருந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு, தான் கொண்டு சென்ற உணவுப் பையை தந்துள்ளார். அதில் தவறுதலாக நகைகளையும் வைத்துள்ளார்.

  சுந்தரி வங்கிக்கு சென்று பார்த்தபோதுதான் நகை, தான் கொண்டு வந்த பையில் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து அவர் திரும்பி சென்று குழந்தைகளை தேடியுள்ளார். ஆனால் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவர் காவல்நிலையத்தை தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார்.

  இதையடுத்து போலீசார் உதவியுடன் தேடியதில், அந்த குழந்தைகள் இருக்கும் இடம் தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்ததில் அந்த பையை குழந்தைகள் குப்பையில் போட்டுவிட்டதாக கூறினர். குப்பையை சென்று பார்த்தபோது அதில் நகைகள் இல்லை. இதை தொடர்ந்து போலீசார் சிசிடிவி உதவியுடன் பார்த்தபோது, குப்பையில் இருந்து சில எலிகள் அந்த உணவுப்பையை எடுத்துக்கொண்டு சாக்கடைக்குள் சென்றது தெரியவந்தது.


  இதையடுத்து சாக்கடைக்குள் தேடியபோது அந்த பை கிடைத்தது. அதில் இருந்த நகைகளும் பத்திரமாக இருந்தன.

  அந்த நகைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நகைகளை போலீசார் சுந்தரியிடம் ஒப்படைத்தனர்.

  ×