search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "newborn"

  • குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் நிற்காமல் வந்தது.
  • ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று வீட்டில் இருந்த போது குழந்தையை படுக்க வைத்து விட்டு தாயார் குளிக்கச் சென்றார்.

  அந்த நேரத்தில் வீட்டில் இருந்த எலி ஒன்று குழந்தை அருகில் வந்தது. திடீரென குழந்தையின் மூக்கை எலி கடித்தது.

  இதனால் குழந்தை கதறி அழுதது. சத்தம் கேட்டு குழந்தையின் தாய் மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்தனர்.

  அப்போது குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் நிற்காமல் வந்தது. இதனை தொடர்ந்து குழந்தையை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  எலி இருக்கும் வீடுகளில் குழந்தையை தரையில் படுக்க வைக்க வேண்டாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

  • 15 நாட்களுக்கு முன்பு அஸ்மா இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.
  • குழந்தைகள் பிறந்ததில் இருந்து தினமும் வீட்டில் பூனை ஒன்று காணப்பட்டதாக போலீசில் கூறி உள்ளனர்.

  உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புடான் நகரில் காட்டுப் பூனையால் தூக்கிச் செல்லப்பட்ட குழந்தை இறந்த சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியது.

  இச்சம்பவம் இங்குள்ள உசவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்றிரவு நடந்துள்ளது. அக்குழந்தையின் தாய் அஸ்மா, 15 நாட்களுக்கு முன்பு கவுத்ரா பட்டி பௌனி கிராமத்தில், அல்ஷிஃபா மற்றும் ரிஹான் என பெயரிடப்பட்ட இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.

  இரட்டை குழந்தைகள் பிறந்ததில் இருந்து தினமும் வீட்டில் பூனை ஒன்று காணப்பட்டதாகவும், ஆனால் உஷாரான

  குடும்பத்தினர் அதை விரட்டி வந்ததாகவும் அஸ்மாவின் கணவர் ஹசன் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

  நேற்றிரவு, அஸ்மாவுக்கு அருகில் குழந்தை ரிஹான் தூங்கி கொண்டிருந்திருக்கிறான். அப்போது ரிஹானை பூனை கவ்விக் கொண்டு சென்றது. இதனை கண்ட தாய் அஸ்மா எழுந்து கூக்குரலிட்டார். உடனே ஹசன் தன் குழந்தையை காப்பாற்ற அந்த பூனையை துரத்திக் கொண்டு ஓடினார். அப்போது வீட்டின் கூரை மேல் ஓடிய அந்த பூனை, குழந்தை ரிஹானை கீழே போட்டு விட்டு ஓடி விட்டது. கூரையிலிருந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே குழந்தை ரிஹான் உயிரிழந்தான்.

  இச்சம்பவத்தை உறுதி செய்த காவல்துறையினர், இவ்விவகாரத்தில் குழந்தையின் குடும்பத்தினர் இதுவரை புகார் ஏதும் கொடுக்கவில்லை என கூறினர்.

  • ஏற்கனவே திருமணமாகி கார்த்திக் என்ற கணவரும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
  • பச்சிளம் குழந்தையை கல்நெஞ்சம் படைத்த தாயே ஏரியில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  வேளச்சேரி:

  வேளச்சேரி, சசி நகர் அருகே உள்ள ஏரிப் பகுதியில் நேற்று மாலை பச்சிளம் பெண் குழந்தை உடல் மிதந்தது.

  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வேளச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இது தொடர்பாக போலீ சார் நடத்திய விசாரணையில் சசிநகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சங்கீதா (வயது26) என்பவர் கள்ளக்காதலன் மூலம் குழந்தை பிறந்ததால் அதனை ஏரியில் வீசி கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி கார்த்திக் என்ற கணவரும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. கார்த்திக் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். மனைவியின் செயலை அறிந்து அவர் அதிர்ச்சியில் உள்ளார்.

  சங்கீதாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

  இந்த தொடர்பை சங்கீதா தனது கணவருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார். இதனால் அவர் மீது கணவருக்கும் பெரிய அளவில் சந்தேகம் ஏற்படவில்லை.

  இதற்கிடையே சங்கீதா, கள்ளக்காதலன் மூலம் கர்ப்பம் அடைந்தார். அந்த குழந்தையை கலைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர் வயிற்றில் குழந்தை இருப்பதை அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் மறைத்தார்.

  வயிறு பெரிதானதும் கணவர் மற்றும் உறவினர்கள் கேட்டபோது சாப்பிட்டு தூங்குவதால் வயிறு பெரிதாகி விட்டது என்று கூறி சமாளித்து உள்ளார்.

  இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் சங்கீதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

  பின்னர் கணவர் வருவதற்குள் அந்த பச்சிளம் குழந்தையை அருகில் உள்ள ஏரியில் வீசி விட்டு சங்கீதா வீட்டுக்கு வந்து உள்ளார். இதில் ஏரி தண்ணீரில் மூழ்கி குழந்தை இறந்து போனது.

  2 நாட்களுக்கு பிறகு குழந்தையின் உடல் தண்ணீரில் மிதந்து கரை ஒதுங்கியதால் போலீசாரின் விசாரணையில் சங்கீதா சிக்கிக்கொண்டார்.

  தவறான உறவின் மூலம் பிறந்ததால் குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்ததாக சங்கீதா எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்து உள்ளார்.

  குழந்தை பெற்றதும் சங்கீதா ஏரிப்பகுதிக்கு சென்று குழந்தையை தண்ணீரில் வீசி இருக்க முடியாது என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

  எனவே குழந்தை கொலையில் சங்கீதாவுக்கு கள்ளக்காதலன் உதவினாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  கள்ளக்காதலில் பிறந்ததால் பச்சிளம் குழந்தையை கல்நெஞ்சம் படைத்த தாயே ஏரியில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • கழிவறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து குழந்தையை தூக்கி எறிந்துள்ளார்.
  • தான் கர்ப்பமாக இருப்பது குறித்து தனக்கே தெரியாது என்றும் பெண் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

  மேற்கு வங்காளம் மாநிலம், கொல்கத்தா, கஸ்பா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 22ம் தேதி அன்று பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அவரது வீட்டின் கழிவறையிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

  பிறந்த குழந்தை அழ ஆரம்பித்ததால், கழிவறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து குழந்தையை தூக்கி எறிந்துள்ளார்.

  சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பெண் ரத்த வெள்ளத்தில் படுத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

  பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பெண்ணையும், குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

  இந்நிலையில், பச்சிளங்குழந்தை மறுநாள் காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

  சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • போலீசார் சம்பேபால் கிராமத்தில் இருந்து விற்கப்பட்ட பெண் குழந்தையை மீட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர்.
  • இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

  ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் வறுமையின் காரணமாக பிறந்த சில நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ.7000-க்கு விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

  குழந்தை விற்கப்பட்டது தொடர்பாக, தசரத்பூர் பிளாக்கின் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி ஒருவர், சுரேஷ் தாஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் குழந்தை இல்லாத தம்பதிக்கு பிறந்த சில நாட்களே ஆன குழந்தையை ரூ.7000-க்கு விற்றதாக போலீசில் புகார் தெரிவித்தனர்.

  இதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் குழந்தை இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

  இதன் பின்னர், போலீசார் சம்பேபால் கிராமத்தில் இருந்து விற்கப்பட்ட பெண் குழந்தையை மீட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர்.

  இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

  இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், " நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எனவே பிறந்த குழந்தையை எங்கள் உறவினர் ஒருவருக்குக் கொடுக்க முடிவு செய்தோம். நாங்கள் குழந்தையை விற்கவில்லை " என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

  குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கான விளக்கங்களை அளிக்கும் பதிவுதான் இது.
  குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கான விளக்கங்களை அளிக்கும் பதிவுதான் இது.

  தாய்ப்பாலிலே 85% நீர்ச்சத்து இருப்பதால், தனியாகக் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 6 மாத குழந்தைக்கு மினரல் வாட்டர், நிலத்தடி நீர் - குடிநீர் போன்ற எதுவும் தேவையில்லை.

  6 மாதம் முடியாத குழந்தைகளுக்கு, தண்ணீர் கொடுத்தால், தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகளும் ஃபார்முலா மில்கில் உள்ள ஊட்டச்சத்துகளும் உறிஞ்சப்படும். உடலில் ஊட்டச்சத்துகள் சேராமல் தடுக்கப்படும். வயிறு விரைவில் நிறைந்துவிடும். இந்த உணர்வால் குழந்தைகள் தாய்ப்பாலை சரியாகக் குடிக்க மாட்டார்கள்.

  உடலில் உள்ள சோடியத்தை அதிக தண்ணீர் கரைத்து விடலாம். உடலில் எலக்ட்ரோலைட் சீரற்ற அளவில் இல்லாமல் போகலாம். திசுக்கள் வீக்கமடையும் பிரச்சனைகளும் வரலாம்.

  குழந்தையின் சிறுநீரகங்கள் அந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்காது. அதிகபடியானத் தண்ணீர் குழந்தையின் முகத்தை வீக்கமடைய செய்யும். கண்களை சுற்றி பஃபினெஸ் பிரச்னை வரலாம்.

  வெப்ப காலமாக இருந்தாலும், பனிக்காலமாக இருந்தாலும் குழந்தைக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தாய்ப்பாலிலே நீர்ச்சத்துகளே போதும். அதுவே தண்ணீர் தாகத்தை தணிக்கும்.

  ஃபார்முலா மில்க் குடிக்கும் குழந்தையாக இருந்தாலும், 6 மாதம் வரை தண்ணீர் தனியாகக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சில குழந்தைகள் அதிகமாகத் தண்ணீர் குடித்தால், வாட்டர் இன்டாக்ஸிஃபிகேஷன் (Water intoxification) எனும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

  6 மாதம் ஆன குழந்தைக்கு, தண்ணீர் கொடுக்கலாம். குழந்தைக்கு தண்ணீர் தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் கொடுப்பது நல்லது.6-12 மாதங்கள் வரை, குழந்தை கேட்கும் போதெல்லாம் தண்ணீர் கொடுக்கலாம்.

  ஒரு வயது ஆன பிறகு, தண்ணீர் நன்றாகவே குடிக்க வைக்கலாம். குழந்தையை தண்ணீர் குடிக்க சொல்லி நீங்களும் நினைவுப்படுத்தலாம். குழந்தையின் 3 வயது வரை, வெந்நீரை கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொடுப்பது நல்லது. அதன் பிறகு பெரியவர்கள் குடிக்கும் தண்ணீரே குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
  ×