என் மலர்
நீங்கள் தேடியது "vinayagar temple"
- சங்கடகரசதுர்த்தி முன்னிட்டு செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது.
செங்கோட்டை:
சங்கடகரசதுர்த்தி முன்னிட்டு செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. செக்கடி விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கணேச பட்டர் செய்திருந்தார்.
இதேபோல் வல்லம், இலஞ்சி, பிரானூர், புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவபிள்ளையார் செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், ஸ்ரீமுக்தி விநாயகர், வீரகேரள விநாயகர் உள்ளிட்ட அனைத்து விநாயகர் கோவில்களிலும் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.
- சித்தி விநாயகர் கோவில் 20-வது வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
- மகா கணபதி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம், விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றுதல் நிகழ்வுகள் நடைபெற்றன.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள சுப்பிரமணிய புரம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் 20-வது வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இதில்விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜ நம்,கும்ப பூஜை,மகா கணபதி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம்,தீபாராதனை, சிறப்பு அபிஷேகம், விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றுதல், பிரசாதம் வழங்குதல், திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை சித்தி விநாயகர் கோவில் நிர்வாக பொறுப்பாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
- வெங்கடேச பெருமாள் அலமேலு மங்கைபத்மாவதி தாயார் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- பெண்கள் கலந்து கொண்ட கோலாட்டம் பக்தி பாடல்கள் பஜனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வணிகவைசிய சங்கத்திற்கு பாத்தியப்பட்ட தனுஷ்கோடியாபுரம் தெருவில் அமைந்து உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அலமேலு மங்கைபத்மாவதி தாயார் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாலையில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் முன்பு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அலமேலு மங்கை பத்மாவதி தாயார்அலங்கரிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட கோலாட்டம் பக்தி பாடல்கள் பஜனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன், மாரிக்கண்ணன், செல்வம், தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
- விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது.
குன்னூர்,
குன்னூர் நகரில் நூற்றாண்டு பழமை மிக்க விநாயகர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டு உள்ளது. அதன் ஒரு கட்டமாக கோவிலில் பாலாய நிகழ்ச்சி நடந்தது. கணபதி ஹோமம், விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ராஜேஷ், அறநிலையத்துறை ஆய்வாளர் ஹேமலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கன்னி விநாயகர், கல்யாண சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானை தேவஸ்தான கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
- 7 கிலோ வெள்ளி முழு கவசத்தினை சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவில் கமிட்டியினரிடம் வழங்கினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த கன்னி விநாயகர், கல்யாண சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானை தேவஸ்தான கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கன்னி விநாயகருக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் 7 கிலோ வெள்ளி முழு கவசத்தினை கோவில்பட்டி மத்திய பகுதி ம.தி.மு.க. ஒன்றிய செயலா ளரும், கோவில்பட்டி நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவருமான சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவில் கமிட்டியினரிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் மணிமாலா சின்னத்துரை, பஞ்சாயத்து தலைவர் சுந்தரி காளியப்பன், துணைத் தலைவர் பாண்டி முனியம்மாள், குமரன், கார்த்தி, மாரியப்பன், ரமேஷ், கமல், பரமகுரு, பொன் ரவி, மற்றும் ேகாவில் கமிட்டி நிர்வாகத்தினர், சைவ வேளாளர் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- செந்தில் விநாயகா் கோவில் கட்டுவதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
- காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
திருப்பூர் :
திருப்பூரை அடுத்த இடுவாய் பாரதிபுரம் பிரிவில் உள்ள செந்தில் விநாயகா் கோவில் கட்டுவதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன.இந்தப் பணிகள் அனைத்து நிறைவடைந்ததைத் தொடா்ந்து கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 5-ந் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது.
முன்னதாக 4-ந்தேதிஅதிகாலை 5 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதலும், காலை 9 மணி முதல் 10 மணிக்குள் தீா்த்தக்குடம் எடுத்தலும், இரவு 9 மணிக்கு விமான கோபுர கலசம் நிறுவுதலும் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.
- திருக்கோடிக்கா என்ற ஊரில், திரிபுரசுந்தரி உடனாய திருக்கோடீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது.
- இத்தல இறைவனை கோடிகாநாதர் என்றும், அம்பாளை வடிவாம்பிகை என்றும் அழைப்பார்கள்.
கும்பகோணம் சூரியனார் கோவில் செல்லும் வழியில் கஞ்சனூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருகோடிக்கா. இத்தல விநாயகர் 'கரையேற்று விநாயகர்' என்ற திருப்பெயர் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார்.
திருச்சி அருகே உள்ளது திருவானைக்கா. சீர்காழி அருகே உள்ளது திருக்கோலக்கா. திருத்துறைப் பூண்டி அருகில் திருநெல்லிக்கா, மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகில் திருகுரங்குக்கா, கும்பகோணம் சூரியனார் கோவில் செல்லும் வழியில் கஞ்சனூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருகோடிக்கா. இந்த ஐந்து திருத்தலங்களும் 'பஞ்ச கா தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
'கா' என்பதற்கு 'சோலை' என்று பொருள். இதில் திருக்கோடிக்கா என்ற ஊரில், திரிபுரசுந்தரி உடனாய திருக்கோடீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது. இத்தல இறைவனை கோடிகாநாதர் என்றும், அம்பாளை வடிவாம்பிகை என்றும் அழைப்பார்கள். திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசா் இருவரும் தேவாரப் பாடல் பாடிய இந்த தலம், காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது.
இதனை தற்போது 'திருக்கோடிக்காவல்' என்று அழைக்கிறார்கள். செம்பியன் மாதேவி திருப்பணி செய்த ஆலயங்களில் இதுவும் ஒன்று. `திரிகோடி' என்பதே `திருகோடி' என்று மருவியதாக சொல்கிறார்கள். திருகோடி என்பதற்கு மூன்று கோடி என்று பொருள். அதாவது மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கிய தலம் இது என்பதால், இதற்கு 'திருக்கோடிகா' என்ற பெயர் வந்தது.
முக்திக்காக மூன்று கோடி மந்திர தேவதைகளும் இங்கே தவம் இருந்ததாக, தல வரலாறு எடுத்துரைக்கிறது. அவர்கள் தவம் இருந்த வேளையில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, அனைவரும் விநாயகப் பெருமானை நினைத்து வழிபட்டனர். விநாயகரும், அந்த மூன்று கோடி மந்திர தேவதைகளையும் வெள்ளத்தில் இருந்து கரையேற்றி அருள்பாலித்தார். அப்போது அங்கு வந்த அகத்தியர், மணலால் விநாயகர் சிலை வடித்து, மந்திர தேவதைகளுக்கு உபதேசம் செய்தார்.
மந்திர தேவதைகள் இந்த விநாயகரை சகஸ்ர நாமத்தால் (ஆயிரம் திருநாமங்கள்) அர்ச்சனை செய்து பூஜித்தனர். மந்திர தேவதைகளை, வெள்ளத்தில் இருந்து கரையேற்றிவர் என்பதால், இத்தல விநாயகர் 'கரையேற்று விநாயகர்' என்ற திருப்பெயர் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி ஆலயத்தின் தென்மேற்கு திசையில் இருக்கிறது. இந்த விநாயகருக்கு ஆயிரம் மலர்களைக் கொண்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், அனைத்துவிதமான சாபங்களும், தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
மாதவரம்:
மாதவரம் பால்பண்ணை கேகே தாழை சிவபாலன் 1-வது தெருவில் சாலையை ஆக்கிரமித்து 400 சதுர அடியில் விநாயகர் கோயில் கட்டப்பட்டு பொதுமக்கள் சாமி கும்பிட்டு வந்தனர். இந்த கோவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனை அகற்றக்கோரி ஒருவர் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட் டிருந்த விநாயகர் கோவிலை அகற்ற நீதிமன்றம் சென்னை மாநகராட்சி மாதவரம் 3.வது மண்டல அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சி மாதவரம் 3-வது மண்டல அதிகாரி விஜயகுமார் தலைமையில் இன்று காலை மண்டல செயற்பொறியாளர் ராமமூர்த்தி உதவி செயற்பொறியாளர்கள் தேவேந்திரன், சதீஷ், கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் விநாயகர் சிலையை அகற்ற சென்றனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள், இந்து முன்னணியினர் கோவில் முன் திரண்டு கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மாதவரம் போலீஸ் உதவி கமிஷனர் ராமலிங்கம் தலைமையில் பால்பண்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணியினர் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் மண்டல அதிகாரிகள் பொக்லின் இயந்திரம் மூலம் விநாயகர் கோவிலை இடித்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினர் பால் பண்ணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலாயம் செல்ல ஈசனை வேண்டினார். அவரது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், அயிராவணம் (ஐராவதம் அல்ல) எனும் வெள்ளை யானையை சிவபெருமான் அனுப்பினார். அதில் ஏறி திருக்கயிலாயம் புறப்பட்டார் சுந்தரர். இதை அறிந்த சுந்தரரின் தோழரான சேரமான் பெருமான், தனது குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஓதி, சுந்தரர் ஏறிச் சென்ற யானையைச் சுற்றி வந்து அவரும் திருக்கயிலாயம் புறப்பட்டார்.
சுந்தரரும், சேரமான் பெருமானும் சேர்ந்து வானில் கயிலாயம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருக்கோவிலூர் பெரியநாயகி சமேத வீரட்டேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள தல விநாயகரான பெரிய யானை கணபதியை, அவ்வையார் வழிபட்டுக் கொண்டிருந்தார். மேல் இருந்து கீழே பார்த்த சுந்தரரும், சேரமானும், ‘அவ்வையே! நாங்கள் திருக்கயிலாயம் சென்று கொண்டிருக்கிறோம். நீயும் வருகிறாயா?’ எனக் கேட்டனர்.
கயிலாயம் சென்று பரமேஸ்வரனை தரிசிக்க, யாருக்குத் தான் ஆசை இருக்காது. அவ்வைப் பாட்டி ‘நானும் வருகிறேன்’ என்று கூறிவிட்டு, விநாயகர் பூஜையை விரைவாக முடிக்க எண்ணி பதற்றத்துடன் செயல்பட்டார்.
அப்போது அங்கு ஒரு அசரீரி கேட்டது. அந்தக் குரல் பெரிய யானைக் கணபதிக்குரியது. ‘அவ்வையே! நீ எனது பூஜையை வழக்கம் போல் நிதானமாகவே செய்! ‘திருக்கயிலாயம் செல்ல முடியாதோ’ என்ற கவலை வேண்டாம். சுந்தரரும், சேரமானும் கயிலை மலையை அடைவதற்கு முன்னதாகவே, உன்னை அங்கு சேர்த்து விடுகிறேன்’ என்றது அந்த அசரீரி.
தன்பால் விநாயகப்பெருமான் கொண்ட அன்பை எண்ணி மகிழ்ந்த அவ்வை, ‘சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பல இசைபாட...’ எனத் தொடங்கி பாடினார். அந்த பாடல் தான் ‘விநாயகர் அகவல்’ என்று அழைக்கப்படுகிறது.
அவ்வை தனது வழிபாட்டை முடித்ததும், விநாயகப்பெருமான் அவர் முன் தோன்றினார். அடுத்த நொடியே துதிக்கையால் அவ்வைப் பாட்டியை தூக்கி, கயிலாயத்தில் சேர்த்தார். விநாயகர், அவ்வையை திருக்கயிலையில் சேர்த்த பிறகு தான் சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமானும் கயிலையை அடைந்தார்கள்.
ஒரு குறிக்கோளை மனதில் இருத்தி, அச்செயல் வெற்றிகரமாக நிறைவேற ‘விநாயகர் அகவல்’ பாராயணம் செய்வது நல்லது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள குலசேகர விநாயகரை, சங்கடஹர சதுர்த்தி நாளில் 11 முறை விநாயகர் அகவல் பாராயணம் செய்வது சிறப்பான பலனைத் தரும். மேலும் தொடர்ச்சியாக 8 சங்கடஹர சதுர்த்தியன்று அருகம்புல் சாத்தி, நெய் தீபம் ஏற்றி விநாயகர் அகவல் பாடினால் நன்மைகள் பல வந்து சேரும்.
உலகை சமன் செய்ய அகத்தியர் தென்திசை வந்தபோது, தென்குமரியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அகத்தியர் பிரதிஷ்டை செய்து பூஜித்த அந்த சிவலிங்கம் ‘அகஸ்தீஸ்வரர்’ எனப் பெயர் பெற்றது. அகத்தியர் பூஜித்த திருத்தலம் ‘அகஸ்தீஸ்வரம்’ எனப்படுகிறது. இப்படி குறுமுனி அகத்தியர் பூஜித்த அகஸ்தீஸ்வரத்தில் ‘வாமன ரூபன்-மகேஸ்வர புத்திரன்' என அழைக்கப்படும் விநாயகர் விரும்பிக் கோவில் கொண்டார். அவரே குலசேகர விநாயகர் ஆவார்.
தமிழ் மாதப் பிறப்பு, வெள்ளிக்கிழமை, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி நாட்களில், இத்தலத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று அந்திப்பொழுதில் குலசேகர விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவுலா வரும் பெருநிகழ்வு நடைபெறுகிறது. குலசேகர விநாயகர் ஆலயத்தில் கருவறை தீபத்தில் நெய் சேர்த்து வழிபட்டு வந்தால் திருமணத்தடைகள் அகல்கிறதாம். குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் புதன்கிழமைகளின் அந்திப்பொழுதில் தொடர்ந்து விளக்கேற்றி வழிபட்டுவந்தால் குலம் தழைக்க குழந்தைச்செல்வம் கிட்டும் என்கிறார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் குலசேகர விநாயகருக்கு அருகம்புல் சாற்றி, சிதறுகாய் உடைத்து கருவறையில் நல்லெண்ணெய் சேர்த்து வழிபட்டு வந்தால் வறுமை, தரித்திரம் அகலும். செய்தொழிலில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். இத்தல விநாயகருக்கு அவல், கொழுக்கட்டை, மோதகம் படைத்து வழிபடுவது சிறப்பு. கல்வி அறிவில் சிறக்க அனுதினமும் விநாயகர் அகவல் பாராயணம் செய்து அருகம்புல், எருக்கு சாற்றி வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தி நாட்களில் தேன், பால் அபிஷேகம் செய்து வழிபடுவதும் நல்ல பலனைத் தரும்.
ஓர் இரவில் கட்டப்பட்ட ஆலயம்
அகஸ்தீஸ்வரத்தில் குலசேகர விநாயகருக்கு ஆலயம் எழுப்பியபோது, அப்போதைய திருவிதாங்கூர் மன்னன் தடை விதித்தானாம். இதனால் ஆலயம் எழுப்பிய அடியவர்கள், ஒரேநாள் இரவில் குலசேகர விநாயகர் ஆலயத்தைக் கட்டிமுடித்தனர். இதனை அறிந்த மன்னன் இரவோடு இரவாக தம் படைவீரர்களை அனுப்பி ஆலயத்தை இடித்துவிட உத்தரவிட்டான். உடனே புறப்பட்டு வந்த படைவீரர்கள், இத்தலத்தை நெருங்கும் போது ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பூஜைகள் ஆரம்பமாகியதால், படைவீரர்கள் கோவிலை இடிக்காமல் சென்று விட்டதாக ஒரு செய்தி உள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து வடமேற்கில் 4 கிலோமீட்டர் தூரத்திலும், சுசீந்திரம் அடுத்துள்ள கொட்டாரத்தில் இருந்து தெற்கில் 2 கிலோமீட்டர் தூரத்திலும் அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் திருக்கோவில் அமைந்து உள்ளது.