என் மலர்
நீங்கள் தேடியது "சரவணன்"
- உயிரிழந்த சரவணனின் உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
- ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்
இன்று காலை வயது மூப்பின் காரணமாக பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "ஏ.வி.எம். சரவணன் அவர்களுக்கும் எனக்கும் உள்ள உறவு அண்ணன் - தம்பி உறவு போன்றது. குகனுக்கு இருக்கும் சோகத்தில் எனக்கும் பங்கு இருப்பதாக நான் உரிமை கொண்டாடுகிறேன். நான் தனி மரம் அல்ல, AVM என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி இன்று வளர்ந்து வந்திருக்கிறேன். இந்த தோப்பில் பல ஆசான்கள் எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி இது" என்று பேசியுள்ளார்.
- என்னுடைய செலவுக்கு சரவணன் எந்தவிதமான பணத்தையும் தருவதில்லை.
- சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் நான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.
1990-களின் தொடக்கத்தில் 'வைதேகி வந்தாச்சு', 'பொண்டாட்டி ராஜ்யம்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சரவணன். இதன்பின் 'நந்தா' மற்றும் 'பருத்திவீரன்' படத்தில் கார்த்திக்குக்கு சித்தப்பாவாக நடித்து பிரபலமானார்.
கடந்த 2003-ம் ஆண்டில் சூர்யஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2015-ம் ஆண்டு முதல் ஸ்ரீதேவி என்ற பெண்ணுடன் லிவிங் டூ கெதரில் இருந்த சரவணன் 2019-ம் ஆண்டு முதல் மனைவியான சூர்ய ஸ்ரீயின் சம்மதத்துடன் ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொண்டார்.

முதல் மனைவி, இரண்டாவது மனைவி என இருவரையும் மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் எதிர்எதிர் வீடுகளில் குடிவைத்தார். ஏற்கனவே வீடு யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனையில் முதல் மனைவியுடன் மோதல் போக்கை கடைபிடித்த சரவணன், பின்னர் சமரசம் செய்து கொண்டார். இதனால் அவர் மீதான புகார்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டனர்.
இந்நிலையில், முதல் மனைவி சூர்ய ஸ்ரீ தனது கணவர் சரவணன் மீது ஆவடி காவல் ஆணையரக அலுவலத்தில் புகார் அளித்துள்ளார். அம்மனுவில்,
* சரவணன், இரண்டாவது திருமணம் செய்து கொண்டு என் வீட்டிற்கு எதிரிலேயே குடி வைத்து இருக்கிறார்.
* இதனால் தினமும் சண்டை, தகராறு வந்து கொண்டே இருக்கிறது.
* ஒரு செருப்பு ஸ்டாண்டை கூட வைத்துக் கொள்ளக்கூடாது, இந்த வீடு என்னுடையது என எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள்.
* ஒன்றுமே இல்லாமல் அந்த பெண் என் வீட்டுக்கு வந்த போது, அவளுக்கு ஆதரவு கொடுத்து பார்த்துக்கொண்டது நான் தான். ஆனால், அந்த பெண் அந்த நன்றியை மறந்துவிட்டாள்.
* என் வீட்டு கதவு திறந்து இருந்தாலே, கதவை எட்டி உடைத்து, இந்த வீடு என்னுடையது என சொந்தம் கொண்டாடுகிறாள்.
* 18-ந்தேதி செருப்பு ஸ்டாண்டில் பிரச்சனை ஆரம்பித்தது. அந்த செருப்பு ஸ்டாண்டை அடித்து உடைத்து போட்டுவிட்டாள்.
* நானும் என் கணவரும் சேர்ந்து எடுத்த போட்டோவை, என்னுடைய வீட்டுக்குள் புகுந்து, அந்த போட்டோவை பார்த்தாலே எரிச்சலாக வருகிறது என்று அந்தப் பெண் எடுத்து சென்றுவிட்டாள்.
* இப்படி தினம் தினம் அந்த பெண்ணால் எனக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
* என்னுடைய செலவுக்கு சரவணன் எந்தவிதமான பணத்தையும் தருவதில்லை.

* விவாகரத்து வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் அவர் ஒரு முறை கூட அதற்கு ஆஜராகவில்லை.
* சரவணன் எனக்கு ஜீவனாம்சம் தரவேண்டும், அவரால், மாதா மாதம் பணத்தை கொடுக்க முடியாது என்பதால், ஒரே செட்டில்மெண்டாக அவர் பணத்தை தர வேண்டும்.
* இப்போது சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் நான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.
* அப்பா, அண்ணன் இவர்கள் தான் என்னை பார்த்துக் கொள்கிறார்கள்.
* எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு காரணம் சரவணணும், அவருடைய இரண்டாவது மனைவி ஸ்ரீதேவியும் தான் என்றார்.
- மஹா கும்பாபிஷேக விழா வருகிற 27.0 8 .2025 காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
- திறப்பு விழாவில் பிரபல இயக்குநர் பாண்டிராஜ் கலந்து கொண்டு ஸ்டுடியோவைத் திறந்து வைக்கிறார்.
ஒரு காலத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் சரவணன். மறுபிரவேச வாய்ப்பாக அமைந்த 'பருத்திவீரன்' படத்திற்குப் பிறகு அந்தப் பாத்திரத்தின் வெற்றியால் பெயரே 'பருத்திவீரன்' சரவணன் என்றானது. அதன் பிறகு, ஏராளமான படங்களில் நடித்தார்; நடித்தும் வருகிறார்.
எதிர்மறை மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வரும் அவர், தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டு பயணித்து வருகிறார்.
அண்மையில் வெளியான 'சட்டமும் நீதியும்' இணையத் தொடர் சரவணன் வாழ்க்கையில் அமைந்த ஒரு மைல் கல் எனலாம். அந்த அளவுக்குத் தனது பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
நடிகர் சரவணன் ஒரு விநாயகர் கோவிலை சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டம், வட்டக்காடு என்கிற ஊரில் கட்டி இருக்கிறார்.
தனது தோட்டத்தில் எழுந்து அருள்பாலிக்கும் விநாயகராக அதை வணங்கி வந்தவர், தற்போது அதற்காக ஓர் ஆலயம் கட்டி இருக்கிறார்.
அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் என்று பெயர் கொண்ட அந்த ஆலயத்தின் மகா ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வருகிற 27.0 8 .2025 காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
ஆலய கும்பாபிஷேகம் நடக்கும் அதே நாளில் சேலம் சரவணன் ஸ்டுடியோ ட்ரீம் பேக்டரி என்கிற பெயரில் படப்பிடிப்பு தளம், ஒரு ஸ்டுடியோவையும் அன்று தொடங்குகிறார். அதன் திறப்பு விழாவில் பிரபல இயக்குநர் பாண்டிராஜ் கலந்து கொண்டு ஸ்டுடியோவைத் திறந்து வைக்கிறார்.
- நடிகர் சரவணன் கடந்த 2014-ஆம் ஆண்டு மவுலிவாக்கத்தில் லேக் வியூ அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார்.
- அந்த வீடுகளுக்கு சொந்தமான கார் பார்க்கிங் மட்டும் 700 முதல் 800 சதுரடி இருந்துள்ளது.
90-களில் பல திரைப்படங்களில் நடித்து கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சரவணன். கார்த்தியுடன் இவர் நடித்த 'பருத்திவீரன்' திரைப்படம் சினிமாவில் இவருக்கு மேலும் புகழை சேர்த்தது. நடிகர் சரவணன் கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை, போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடம் லேக் வியூ அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார். அந்த வீடுகளுக்கு சொந்தமான கார் பார்க்கிங்கும் யு.டி.எஸ். என்று சொல்லப்படும் உபயோகிக்கும் இடம் 700 முதல் 800 சதுரடி இருந்துள்ளது.

சரவணன் -தாமோ அன்பரசன்
இந்த இடத்தை அந்த பகுதியில் இருக்கும் இராமமூர்த்தி என்பவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அந்த இடத்தில் கடை அமைத்து அதற்கு மின் இணைப்பு வாங்கிக் கொண்டதாகவும் அதற்கான வரியையும் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்த சரவணன் அந்த இடத்தை மீட்டு தருமாறு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு போரூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் தாமோ அன்பரசனிடம் தனது இடத்தை மீட்டு தருமாறு கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
- நடிகர் சரவணன் தனது இடத்தை மீட்டு தருமாறு அமைச்சர் தாமோ அன்பரசனிடம் கோரிக்கை மனு அளித்தார்.
- இதையடுத்து சரவணனின் ஆதரவாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கடையை திறைந்து பொருட்களை அப்புறப்படுத்தினர்.
90-களில் பல திரைப்படங்களில் நடித்து கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சரவணன். கார்த்தியுடன் இவர் நடித்த 'பருத்திவீரன்' திரைப்படம் சினிமாவில் இவருக்கு மேலும் புகழை சேர்த்தது. நடிகர் சரவணன் கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை, போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடம் லேக் வியூ அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார். அந்த வீடுகளுக்கு சொந்தமான கார் பார்க்கிங்கும் யு.டி.எஸ். என்று சொல்லப்படும் உபயோகிக்கும் இடம் 700 முதல் 800 சதுரடி இருந்துள்ளது.
இந்த இடத்தை அந்த பகுதியில் இருக்கும் இராமமூர்த்தி என்பவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அந்த இடத்தில் கடை அமைத்து அதற்கு மின் இணைப்பு வாங்கிக் கொண்டதாகவும் அதற்கான வரியையும் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சரவணன் அந்த இடத்தை மீட்டு தருமாறு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு போரூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

சரவணன் -தாமோ அன்பரசன்
ஆனால் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அமைச்சர் தாமோ அன்பரசனிடம் தனது இடத்தை மீட்டு தருமாறு கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
இந்தநிலையில் அமைச்சரின் உத்தரவை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இரண்டு கடைகளையும் போலீசார் பாதுகாப்புடன் திறந்து உள்ளே இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி கடை நடிகர் சரவணனுக்கு உரிமையானது என்று நோட்டீஸ் ஒட்டினர். இதனைக் கண்டித்து இராமமூர்த்தி மற்றும் அவரது மனைவி ஜெபமணி, நடிகர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கடுமையாக பேசினர்.

சூர்யா ஸ்ரீ
இதையடுத்து சரவணின் முதல் மனைவி சூர்யா ஸ்ரீ , சரவணன் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சூர்யாஸ்ரீ , ''காதலித்து தன்னை திருமணம் செய்து கொண்ட சரவணன், சில ஆண்டுகளுக்கு முன் மவுலிவாக்கத்தில் தான் சம்பாதித்த பணம் மற்றும் நகைகளை வைத்து வீடு வாங்கினார். வாங்கிய வீட்டை அவரது பெயரில் பதிவு செய்து கொண்டார்.
பட வாய்ப்பு இல்லாத போது, தனது சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிட்ட சரவணன் பிக்பாஸ் சென்று வந்த பிறகு கையில் பணம் வந்தவுடன், ஸ்ரீதேவி என்ற பெண்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். கடந்த சில நாட்களாக சரவணன் 30 அடியாட்களுடன் தனது வீட்டிற்கு வந்து, வீட்டை விட்டு வெளியேறுமாறு ஆபாசமாக பேசி மிரட்டுகிறார். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நியாயத்தை பெற்று தர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
- ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
- ராயன் படத்தில் நடிகர் சரவணன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடிக்கும் தனது 50வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது.
இந்நிலையில், இவர்களை தொடர்ந்து ராயன் படத்தில் நடிகர் சரவணன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சரவணனின் போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Saravanan sir from Raayan pic.twitter.com/inZs40LEjM
— Dhanush (@dhanushkraja) February 27, 2024
- தமிழகத்தை பொறுத்த வரை அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மட்டுமே போட்டி.
- கடந்த முறை எம்.பி.யாக இருந்த வெங்கடேசன் இந்த முறையும் போட்டியிடுகிறார்.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதியல் அ.தி.மு.க. சார்பில் மக்களின் மருத்துவர் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். இதையொட்டி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வேட்பாளர் டாக்டர் சரவணன் பேசியதாவது:-
தமிழகத்தை பொறுத்த வரை அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மட்டுமே போட்டி. எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக சேவையாற்றி வருகிறார். தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கிறார்கள். கடந்த முறை எம்.பி.யாக இருந்த வெங்கடேசன் இந்த முறையும் போட்டியிடுகிறார். அவர் டுவிட்டர் அரசியல் வாதியாக செயல்பட்டு வருகிறார். மதுரை மக்களுக்காக எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
கடந்த 4 வருடங்களாக மக்களை சந்திக்காத அவர் தற்போது தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்கிறார். அவரது சொத்து 10 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த தேர்தலின்போது சு.வெங்கடேசன் உள்ளிட்ட எண்ணற்ற 44 வாக்குறுதிகளை மதுரை மக்களுக்கு அளித்திருந்தார். ஆனால் அதை எதையும் நிறைவேற்றவில்லை. மோடி, மு.க.ஸ்டாலின் வாயால் வடை சுடுவது போல சு வெங்கடேசனும் 44 ஊசி போன வடைகளை சுட்டுள்ளார்.

இது மதுரை மக்களுக்கு ஆரோக்கியமானதல்ல. கீழடிக்கு அவர் தன்னை முன்னிலை படுத்தி வருகிறார். கீழடி தொடர்பாக முதலில் வெளிப்படுத்தியவர் வரலாற்று ஆசிரியர் பாலசுப்பிரமணியன். ஆனால் வெங்கடேசன் உரிமை கொண்டாடி வருகிறார். இதன் மூலம் அவர் போலி விளம்பர அரசியல் செய்து வருகிறார்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு 26 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் போது மதுரையில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியது அ.தி.மு.க. தான். குறிப்பாக மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு உள் இடஒதுக்கீடு. குடிமராமத்து பணி, அம்மா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டம், மடிக்கணினி, பெண்களுக்கு இலவச கால்நடை திட்டம்
திட்டங்களை அ.தி.மு.க. செயல்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியின்போது ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றப்பட்டன.
தி.மு.க. அரசு கடந்த முறை தேர்தல் அறிக்கையின்போது கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.100 குறையும் என தெரிவித்தார்கள். ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 மட்டும் குறைத்தார்கள். தற்போது 75 ரூபாய்க்கு பெட்ரோல், டீசல் விலை கொண்டு வருவோம் என கூறுகிறார்கள். தி.மு.க. அரசு இதுபோன்ற பொய் வாக்குறுதிகளை அளித்து ஆசையை தூண்டுகிறார்கள். ஆனால் மக்கள் ஏமாற மாட்டர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மதுரைக்கு ரூ.7,000 கோடி அளவில் செய்யப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.
- வழியெங்கும் திரண்ட மக்கள் மேளதாளம் முழங்க பூக்களை தூவி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வரவேற்பு அளித்தனர்.
மதுரை:
மதுரை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. பேட்பாளர் மக்களின் மருத்துவார் டாக்டர் பா.சரவணன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் தொகுதிக்கு உட்பட்ட பல்பேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறொர். அதன் ஒரு பகுதியாக மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், கோவலன் நகர், முத்துப்பட்டி, பழங்காநத்தம், திருவள்ளவர் நகர், மாடக்குளம் ஆகிய பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.
வழியெங்கும் திரண்ட மக்கள் மேளதாளம் முழங்க பூக்களை தூவி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு அளித்து ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு சரவணனை அவர்கள் வாழ்த்தினார்கள். அப்போது அவர் 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது மதுரைக்கு ரூ.7,000 கோடி அளவில் செய்யப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.
மதுரையில் நடைபெறுகிற மக்களவைத் தேர்தல் உண்மைக்கும் பொய்க்கும் நடைபெறும் தேர்தல் எனவும், சி.பி.எம். பாராளுமன்ற உறுப்பி்னுர் சு.வெங்கடேசன் கொண்டு வந்த திட்டங்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை எனவும் பேசினார்.
பிரசாரத்தில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ். பாண்டியன், ஜெயவேல், பரவை ராஜா, கருப்பசாமி, முத்துவேல், எஸ்.எம்.டி.ரவி, செல்வக்குமார், மைதிலி, இஷிகா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தேமுதிக மாவட்ட செயலாளர் (தெற்கு) மணிகண்டன், அகில இந்திய பார்வர்டு பிளாக் சிவபாண்டி, பசும்பொன், எஸ்.டி.பி.ஐ. பிலால் மைதீன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
- மருத்துவர் சரவணன் அவர்கள் வாக்கு சேகரிப்பதற்கு உருவாக்கும் யுக்திகள் அவரையே கேலி பொருளாக மாற்றி விடுகின்றன
- மக்களிடம் வாக்குகள் கேட்பதற்கு அவரிடமோ, அவர் சார்ந்த கட்சியிடமோ சொந்தத் திட்டங்கள் எதுவும் இல்லாதால் அவதூறுகளை நம்பி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்
மதுரை எம்.பி நிதி ₹17 கோடி ஒதுக்கீடு இருந்தும் ₹5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என சரவணன் கூறியதற்கு, ₹17 கோடியில் ₹16.96 கோடி செலவு செய்து 245 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்
அதிமுக வேட்பாளர் சரவணன் அவதூறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதில்,
"மதுரைத் தொகுதியில் அதிமுக கேட்பாளாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் சரவணன் அவர்கள் வாக்கு சேகரிப்பதற்கு உருவாக்கும் யுக்திகள் அவரையே கேலி பொருளாக மாற்றி விடுகின்றன. மக்களிடம் வாக்குகள் கேட்பதற்கு அவரிடமோ, அவர் சார்ந்த கட்சியிடமோ சொந்தத் திட்டங்கள் எதுவும் இல்லாதால் அவதூறுகளை நம்பி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.
உண்மையில் தேர்தல் பிரச்சாரம் என்பது கருத்தியலும் களச் செயல்பாடும் முன்வைக்கப்படும் மேடைகள், அந்த மேடைகள் ஆரோக்கியமான விவாதமாக மாற்றுவதே பண்பட்ட அரசியல். தற்போது சரவணன் அவர்கள் ஒரு ஆங்கில் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் வெங்கடேசன எம்.பி நிதிக்கான 17 கோடி ஒதுக்கீட்டில் 5 கோடி மட்டுமே செலவிட்டுள்ளார். மீதம் 12 கோடியை பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
அவர் பைனாகுலர் மூடியைத்தான் திறக்காமல் வீட்டுவிட்டதாய் செய்திகள் வெளிவந்தன. உண்மையில் அவர் தனது சொந்தக் கண்களைக் கூட திறக்க மறந்து விட்டாரா? என்ற கேள்வி எழுகிறது.
நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்ட காலத்திலும் கூட களச் செயல்பாட்டினாலும், விரைவான தலையீடுகளினாலும் கோவிட் காலத்தில் மதுரை மக்களை காக்க செய்த பணிகளை அருகிருந்து பார்த்தவர் தான், அன்றைய திருப்பரங்குன்றத்தின் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் சரவணன் அவர்கள்,
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மோபாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 17 கோடி 10 கோடியே 98 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அநேகமாக 100 சதவீதம். ஓட்டுமொத்தமாக 245 பணிகளைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்துள்ளோம். எண்ணிக்கையில் அடிப்படையில் இவ்வளவு அதிகமான பணிகளை செய்திருப்பதே ஒரு சாதனை தான்.
ஆனால் மரியாதைக்குரிய மருத்துவர் சரவணன் அவர்கள் 5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக சொல்வது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல். அரசு ராசாசி மருத்தவமனை பெருந்தொற்று நோய் சிகிச்சை, அனைத்து அரசு நூலகங்களிலும் மாணவர் போட்டித் தேர்வுக்காக நூல்கள், மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தின் சுற்றுப்புற உயர்மின் கோபுர விளக்குகள், இளைஞர்களுக்கான கபாடி மைதானங்கள் என இந்தியாவிற்கு முன்னுதாரணம் சொல்லும் பல பணிகளை செய்துள்ளோம்.
உண்மை இப்படி இருக்க 5 கோடி மட்டுமே செல்வழித்துள்ளோம். மீதப்பணந்தை செலவழிக்க வில்லை எனக்கூறுவது அவதூறுகளை தாண்டி வேறு எதுவும் ல்லை. அவதூறுகளுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல; ஆனால தாங்கள் உதிர்க்கும் சொற்களுக்கு நீங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி இருக்குமென்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
- மருத்துவரான நான் உங்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் தேவையான உதவிகள் செய்வதற்கு தயாராக உள்ளேன்.
- மக்கள் நலத்திட்டங்கள் கிடைக்க இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.
மேலூர்:
மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணன் மேலூர் அருகே வெள்ளலூர் நாட்டை சார்ந்த மட்டங்கி பட்டி, புலிமலைப் பட்டி, குறிஞ்சிப்பட்டி, அழகிச்சிபட்டி, கோட்டநத்தம்பட்டி, அம்பலகாரன்பட்டி, நயத்தான் பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
முன்னதாக வேட்பாளர் சரவணனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து குலவையிட்டு வரவேற்றனர். அப்போது சரவணன் பேசியதாவது:- கடந்த முறை வெற்றிப் பெற்ற வேட்பாளர் வெங்கடேசன் 4 ஆண்டுகளாக தொகுதி பக்கமே வராதவர். அவருக்கு சினிமாவிற்கு கதை எழுதுவதற்கு மட்டுமே நேரம் உள்ளது. மருத்துவரான நான் உங்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் தேவையான உதவிகள் செய்வதற்கு தயாராக உள்ளேன்.
அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் கிடைக்க இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் ராஜேந்திரன், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிச்செழியன், பொருளாளர் அம்பலம் மற்றும் கட்சியினர் தீரளாக பங்கேற்றனர்.
- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மதுரை கிழக்கு தொகுதியில் மதுரை-நத்தம் சாலை ரூ.ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டது.
- பாண்டிகோவில் அருகே 50 கோடியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன், புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் ஆலாத்தூர், ஊமச்சிகுளம், சத்திரப்பட்டி, வெளிச்சநத்தம், ஆலங்குளம், பாசிங்காபுரம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரசாரத்தின் போது வேட்பாளர் டாக்டர் சரவணன் பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மதுரை கிழக்கு தொகுதியில் மதுரை-நத்தம் சாலை ரூ.ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டது. மக்களின் நிர்வாக வசதிக்கா மதுரை கிழக்கு தொகுதியில் புதிய வட்டம் அமைக்கப்பட்டது. மூன்றுமாவடி முதல் ஆனையூர் வரை ரூ.50 கோடியில் சாலை அமைக்கப்பட்டது.
பாண்டிகோவில் அருகே 50 கோடியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் மதுரையில் செயல்படுத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் மதுரையில் எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. கடந்த தேர்தலில் கூறிய வக்குறுதிகளை வெங்கடேசன் நிறைவேற்றவில்லை. எனவே வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரை இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்க்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவன தலைவர் ராஜேஸ்வரி பிரியா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் வாசு என்று பெரியணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்னம்பலம், எஸ்.எஸ். சரவணன், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழகச் செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி இணைச் செயலாளர் வில்லாபுரம் ரமேஷ், ஒத்தக்கடை கார்த்திகேயன், மாணவரணி உசிலை முத்துகிருஷ்ணன் பாசறை ராமர், மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிற்கும் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- அழிவு பாதையில் இருந்து அ.தி.மு.க.வை காப்பாற்றிய பெருமை எடப்பாடி பழனிச்சாமியையே சேரும்.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஆத்திக்குளம், சர்வேயர் காலனி, நாராயணபுரம். பேங்க் காலணி, அய்யர் பங்களா, திருப்பாலை, மேனேந்தல், நாகனாங்குளம் ஆகிய இடங்களில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது டாக்டர் சரவணனுக்கும், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிற்கும் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் பேசுகையில், தி.மு.க.வின் 3 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து விலை வாசிகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு விரல் புரட்சி செய்து அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும். மதுரை மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவேன் என பேசினார்.
பின்னர் ராஜன் செல்லாப்பா எம்.எல்.ஏ. கூறுகையில், அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்து அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என பா.ஜ.க. எண்ணியதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். பா.ஜ.க.வோடு தொடர்ந்து கூட்டணி வைத்திருந்தால் அ.தி.மு.க.வை அழித்து இருப்பார்பார். அழிவு பாதையில் இருந்து அ.தி.மு.க.வை காப்பாற்றிய பெருமை எடப்பாடி பழனிச்சாமியையே சேரும். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது நூற்றுக்கு நூறு சரியானது என மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் புரிந்து கொண்டுள்ளனர் என்றார்.






