மதுரை தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவேன்- சரவணன் உறுதி

சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிற்கும் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அழிவு பாதையில் இருந்து அ.தி.மு.க.வை காப்பாற்றிய பெருமை எடப்பாடி பழனிச்சாமியையே சேரும்.
மதுரை தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவேன்- சரவணன் உறுதி
Published on

மதுரை:

மதுரை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஆத்திக்குளம், சர்வேயர் காலனி, நாராயணபுரம். பேங்க் காலணி, அய்யர் பங்களா, திருப்பாலை, மேனேந்தல், நாகனாங்குளம் ஆகிய இடங்களில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது டாக்டர் சரவணனுக்கும், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிற்கும் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் பேசுகையில், தி.மு.க.வின் 3 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து விலை வாசிகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு விரல் புரட்சி செய்து அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும். மதுரை மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவேன் என பேசினார்.

பின்னர் ராஜன் செல்லாப்பா எம்.எல்.ஏ. கூறுகையில், அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்து அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என பா.ஜ.க. எண்ணியதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். பா.ஜ.க.வோடு தொடர்ந்து கூட்டணி வைத்திருந்தால் அ.தி.மு.க.வை அழித்து இருப்பார்பார். அழிவு பாதையில் இருந்து அ.தி.மு.க.வை காப்பாற்றிய பெருமை எடப்பாடி பழனிச்சாமியையே சேரும். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது நூற்றுக்கு நூறு சரியானது என மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் புரிந்து கொண்டுள்ளனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com