ராயன் படத்தில் அடுத்தடுத்து இணையும் முக்கிய பிரபலங்கள்.. அடுத்தது யார் தெரியுமா?

ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.ராயன் படத்தில் நடிகர் சரவணன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயன் படத்தில் அடுத்தடுத்து இணையும் முக்கிய பிரபலங்கள்.. அடுத்தது யார் தெரியுமா?
Published on: 

தனுஷ் நடிக்கும் தனது 50வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது.

இந்நிலையில், இவர்களை தொடர்ந்து ராயன் படத்தில் நடிகர் சரவணன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சரவணனின் போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com