கடையநல்லூர் அருகே கார் மீது டேங்கர் லாரி மோதியதில் இளம்பெண் பலி

மங்களாபுரம் மஸ்தான் பள்ளிவாசல் வளைவில் கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த ஜெகன் சிவா, உயிரிழந்த பிரியா ஆகியோரை படத்தில் காணலாம்.
விபத்தில் படுகாயம் அடைந்த ஜெகன் சிவா, உயிரிழந்த பிரியா ஆகியோரை படத்தில் காணலாம்.
Published on

கடையநல்லூர்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் யாதவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்தான நல்ல ஜெகன் சிவா (வயது 33).

இவரது மனைவி பிரியா(27). இவர்களது மகன்கள் ராகவன் என்ற முகிலன்(4), வெற்றிவேல் நவீன் பாரதி(4). இவர்கள் 4 பேரும் சொக்கநாதன்புத்தூரில் இருந்து தென்காசி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கி பால் ஏற்றும் டேங்கர் லாரி எதிரே வந்து கொண்டிருந்தது.

கடையநல்லூரை அடுத்த மங்களாபுரம் மஸ்தான் பள்ளிவாசல் வளைவில் கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த சந்தான நல்ல ஜெகன் சிவா மற்றும் 2 குழந்தைகளும் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரியை ஓட்டி வந்த வேம்பநல்லூர் அண்ணா காலனி 1-வது தெருவை சேர்ந்த குமார் (39) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com