என் மலர்
நீங்கள் தேடியது "poisonous gas attack"
- விஷவாயு தாக்கி கத்தியவாடி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மயங்கி விழுந்தார்.
- சுத்திகரிப்பு பணிக்கு உதவியாக வந்திருந்த பெண்கள் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூரில் தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் ராணிப்பேட்டை நகரம் மற்றும் சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றி அனுப்பபடும் கழிவுநீர் பல்வேறு நிலைகளில் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.
சுத்திகரிப்பு நிலையத்திற்கு தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீர் வரும் குழாயில் சுத்திகரிப்பு நிலையம் சார்பில் அவ்வப்போது அடைப்பு சரி செய்வது உள்பட பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை வி.சி.மோட்டூர் தனியார் கியாஸ் ஏஜென்சி எதிரில், சுத்திகரிப்பு நிலையத்திற்கு தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வரும் பெரிய அளவிலான குழாயில் அடைப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்ய அதன் மேல் புறத்தை திறந்து அதில் 4 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விஷவாயு தாக்கி கத்தியவாடி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை(54) என்பவர் மயங்கி விழுந்தார்.
இதை பார்த்த ஆற்காட்டை சேர்ந்த சாந்தகுமார் (31), மேல்விஷாரத்தை சேர்ந்த இப்திகார் உல்கக் (31), பூண்டிகிரமத்தைசேர்ந்த ரமேஷ்(46) ஆகியோர் ஏழுமலையை மீட்க முயன்றனர். அவர்களும் மூச்சு திணறி மயக்கம் ஏற்பட்டு மயங்கினர்.
இதை பார்த்த சுத்திகரிப்பு பணிக்கு உதவியாக வந்திருந்த பெண்கள் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து குழாய்க்குள் மயங்கிய நிலையில் இருந்த 4 பேரை உடனடியாக மீட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏழுமலை மேல் சிகிச்சைக்காக பூட்டுத்தாக்கில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற 3 பேருக்கும் வாலாஜா அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
இது தொடர்பாக ராணிப்பேட்டை, வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 54) விவசாயி. இவர் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்தார். கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருவதால் விவசாய கிணற்றில் மோட்டார் பழுதானது.
மின் மோட்டாரை சரி செய்வதற்காக அவரது மருமகன் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் சுபாஷ் (24) என்பவரை அழைத்துக்கொண்டு நேற்று விவசாய நிலத்துக்கு சென்றனர்.
இருவரும் கிணற்றில் இறங்கி மோட்டாரை சரி செய்யும் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் உடல்கள் கிணற்றில் மூழ்கியது.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தேடிச் சென்றனர். அப்போது விவசாய கிணற்றின் அருகில் துணி பொருட்கள் இருந்தன. இதனால் அவர்கள் கிணற்றுக்குள் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து ராணிப்பேட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேரம் போராடி 2 பேரின் உடல்களை மீட்டனர். அவலூர் போலீசார் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாய கிணற்றில் விஷவாயு தாக்கியது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் மின்சாரம் தாக்கி இறந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அவலூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
குடியாத்தம் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் சச்சின் கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் தங்கம் நகர் 1-வது தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரது வீட்டில் உள்ள 15 அடி ஆழ தரை தள குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்வதற்காக வேலைக்கு சென்றனர்.
கடந்த 2 நாட்களாக வேலை பார்த்து வந்த நிலையில் இன்று வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது தொட்டியை சுத்தம் செய்ய கெமிக்கல் ரசாயனத்தை பயன்படுத்தினர்.
அந்த ரசாயனத்தில் இருந்து வெளியேறிய விஷ வாயுவினால் 2 பேரும் மயங்கி விழுந்தனர். இதனை கண்ட நடராஜன் குடியாத்தம் தீயணைப்பு துறைக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தொட்டியில் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர்.
போலீசார் அவர்களை குடியாத்தம் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்தியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews






