ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை

டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட்டில் அமைந்துள்ள டாடா மோட்டார்சில் கார் உற்பத்தியை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வருகிறார்.

இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளை மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதித்தும், டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜமால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com