அஜித்துடன் இணையும் சந்தோஷ் நாராயணன்.. ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் 62-வது படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. தற்போது ஏகே62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்
Published on

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

அஜித் -விக்னேஷ் சிவன்

இதையடுத்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவன் கதை பிடிக்காததால் அவர் ஏகே62 படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக 'தடம்', 'மீகாமன்', 'கலகத்தலைவன்' போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்தி பரவி வந்தது.

இந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் தன்னுடைய பயோவில் "ஏகே 62 இயக்குனர்" என்ற ஹேஸ்டேக் மற்றும் அஜித்தின் கவர் போட்டோவை நீக்கியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் விக்னேஷ் சிவன் விலகியது உண்மை தான் என்று கமெண்ட் செய்து வந்தனர்.

அனிருத் - சந்தோஷ் நாராயணன்

இந்நிலையில், ஏகே62 படம் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது, இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது அனிருத்திற்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது உறுதி செய்யப்படுமானால் சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com