என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரெட்ரோ படத்தின் `எதற்காக மறுபடி வீடியோ பாடல் ரிலீஸ்
    X

    ரெட்ரோ படத்தின் `எதற்காக மறுபடி' வீடியோ பாடல் ரிலீஸ்

    • ரெட்ரோ திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • முதல் நாள் வசூலாக திரைப்படம் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டியது.

    நடிகர் சூர்யாவின் 44-வது படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    முதல் நாள் வசூலாக திரைப்படம் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டியது. சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியுள்ளது.

    இதுவரை ரெட்ரோ படம் உலக அளவில் ரூ.104 கோடி வசூலை கடந்துள்ளது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற எதற்காக மறுபடி வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விவேக் வரிகளில் அனந்து பாடியுள்ளார். பாடலின் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    Next Story
    ×