என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    யாரும் பார்த்திடாத புதிய வெர்ஷனில் கனிமா- வீடியோ வெளியிட்ட ரெட்ரோ படக்குழு
    X

    யாரும் பார்த்திடாத புதிய வெர்ஷனில் "கனிமா"- வீடியோ வெளியிட்ட ரெட்ரோ படக்குழு

    • திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவிற்கும் இடையே திருமணம் நடக்கும் போது அமைந்துள்ள பாடலாகும்.

    நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    முதல் நாள் வசூலாக திரைப்படம் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியுள்ளது.

    இதற்கிடையே, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கனிமா பாடல், ரிலீஸ் ஆன நாள் முதல் பட்டித்தொட்டி எங்கும் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

    சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவிற்கும் இடையே திருமணம் நடக்கும் போது அமைந்துள்ள பாடலாகும். இப்பாடலின் வரிகளை விவேக் எழுத சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.

    இந்த பாடலின் நடன அசைவுகளும் சமூக வலைத்தளங்களில் ரீக்ரியேட் செய்யப்படுகிறது.

    இந்நிலையில், கனிமா பாடலின் புதிய வெர்ஷனை ரெட்ரோ படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×