search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிடியன் நாதஸ்வரம்"

    • மோகன்லால் இயக்கி நடிக்கும் திரைப்படம் 'பரோஸ்'.
    • இப்படம் டிசம்பரில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    'பரோஸ்' என்ற புதிய மலையாள படத்தை நடிகர் மோகன்லால் இயக்கி நடிக்கிறார். இந்த படத்தில் லிடியன் நாதஸ்வரம் இசைஅமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.படத்தின் பாடல்களுக்கு இசை அமைக்கிறார்.


    இந்த மலையாளமொழி படம் காவிய கற்பனை திரைப்படமாகும் . ஜிஜோ புன்னூஸ் எழுதிய ஒரு நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகுகிறது. இந்த படத்தை ஆசிர்வாத் ஆண்டனி தயாரிக்கிறார். இதில் மாயா, சீசர் லோரெண்டே ராடன், கல்லிரோய் சியாபெட்டா, துஹின்மேனன் மற்றும் குருசோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கு லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கிறார். இதன் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2021-ல் தொடங்கியது.கொரோனா ஊரடங்கின் போது இந்த படத்தின் திரைக்கதை மற்றும் நடிகர்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டது.


    மோகன்லாலும் டி.கே.ராஜீவ் குமாரும் இணைந்து காட்சிகள், கதாபாத்திரங்களை மாற்றி அமைத்தனர். அதன்பின் டிசம்பர் 2021-ல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பெரும்பாலான படப்பிடிப்பு கொச்சி, கோவா பகுதியில் நடந்தது. 2 பாடல்கள் பாங்காக் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டன. இப்படம் 3டியில் எடுக்கப்பட்டு உள்ளது. இந்தபடம் டிசம்பரில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் பார்த்திபன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.


    இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


    இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "குழந்தைகளை மையப்படுத்திய என் அடுத்த படத்தின் முதல் பார்வையை (First look) குழந்தைப் பருவத்திலிருந்தே இசையின் விசையை அசைத்துப் பார்க்கும் லிடியன் நாதஸ்வரம் நாளை (20.01.2024) வெளியிடுவார்" என்று குறிப்பிட்டு போஸ்டரை பகிர்ந்துள்ளார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


    • தனது இசைத்திறமையால் உலக அளவில் பிரபலமானவர் லிடியன் நாதஸ்வரம்.
    • இவர் தனது புதிய இண்டிபெண்டெண்ட் ஜாஸ் ஆல்பம் மூலம் உலக அரங்கில் கால் பதிக்கவுள்ளார்.

    லிடியன் நாதஸ்வரம் தனது இசைத்திறமையால் உலக அளவில் பிரபலமானவர். உலகின் தலை சிறந்த கலைஞர் என்ற பட்டம் பெற்ற இவர் தனது முதல் இண்டிபெண்டெண்ட் ஜாஸ் ஆல்பமான 'குரோமாடிக் கிராமாடிக்' மூலம் உலக அரங்கில் முத்திரை பதிக்கவுள்ளார். லிடியனின் இசையமைப்பில் உலகெங்கிலும் உள்ள முன்னணி இசைக்கலைஞர்கள் இந்த ஆல்பத்தில் பணியாற்றியுள்ளனர். இந்த ஆல்பத்தில் மொத்தம் 12 பாடல்கள் உள்ளன.


    இந்த ஆல்பத்தை பற்றிப் பேசிய லிடியன், 'உலக இசை அரங்கில் ஜாஸ் இசை படைப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன. இந்தியாவில் ஜாஸ் இசைக்கலைஞர்கள் மிகக் குறைவு. இந்த முயற்சி ஜாஸ் இசைக்கு புத்துயிர் தரும் என்று நம்புகிறேன்' என்றார்.

    உலக இசை தினத்தை முன்னிட்டு ஜூன் 21-ம் தேதி வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த ஆல்பம் சர்வதேச தளங்களிலும் கிடைக்கும் என்றும் பல்வேறு விருது விழாக்களுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் லிடியன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×