search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohan Lal"

    • இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மலைக்கோட்டை வாலிபன்'.
    • இப்படத்தின் டைட்டில் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    மலையாளத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும் லிஜோ ஜோஸ் 'ஜல்லிக்கட்டு', 'அங்கமாலி டைரிஸ்', 'சுருளி','நண்பகல் நேரத்து மயக்கம்' போன்ற பல படங்களை இயக்கி கவனம் பெற்றார். இவர் தற்போது 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தை இயக்கியுள்ளார்.


    இப்படத்தில் மோகன் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், மணிகண்டன் ஆர். ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


    மலைக்கோட்டை வாலிபன் போஸ்டர்

    இந்நிலையில், 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. வித்தியாசமான லுக்கில் மோகன்லால் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • மோகன்லால் தற்போது வைசாக் இயக்கத்தில் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மோகன்லால் தற்போது மான்ஸ்டர் என்ற புதிய மலையாள படத்தில் நடித்துள்ளார். இதில் லட்சுமி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இயக்குனர் வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 21-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 3 நாட்களுக்கு இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.


    மான்ஸ்டர்

    மான்ஸ்டர் படத்தை 'கல்ப்' நாடுகள் எனப்படும் வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மான்ஸ்டர் படத்தை அந்த நாடுகளின் தணிக்கை குழுவுக்கு படக்குழுவினர் அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், படத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்று உள்ளதால் திரையிட அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


    மான்ஸ்டர்

    வளைகுடா நாடுகளில் படம் வெளியாகாவிட்டால் வசூல் பெருமளவு பாதிக்கும் என்பதால் சர்ச்சை காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் வளைகுடா நாடுகளின் தணிக்கை குழுவுக்கு அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் பஹ்ரைன் நாட்டில் இப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    மான்ஸ்டர்

    அதாவது, படத்தை மறுமதிப்பீடு செய்ய தணிக்கை குழுவிடம் படக்குழு சமர்ப்பித்துள்ளதாகவும், படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு தயாரிப்பாளர்களிடம் தணிக்கை குழு கூறியதாகவும் கூறப்படுகிறது. அதன்படி படத்திற்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் நடிப்பில் உருவாகி இருக்கும் `காப்பான்' படத்தின் டீசர் நேற்று வெளியாகிய நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. #Kaappaan #Suriya #Mohanlal
    சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் `காப்பான்' படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    படத்தில் சூர்யா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்திருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். டீசரை பார்க்கும் போது படத்தில் சூர்யா பிரதமரின் பாதுகாவலராக வருகிறாரா? அல்லது போராளியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    தமிழ்நாட பாலைவனம் ஆக்கிட்டு, இந்தியாவ சூப்பர் பவர் ஆக்கப்போறீங்களா?, இயற்கையாகவே உற்பத்தியாகுற நதிய தனக்கு மட்டும் தான் என்று சொந்தம் கொண்டாடுற உரிமையை யாருங்க கொடுத்தா?, போராடுறதே தப்புன்னா, போராடுற சூழ்நிலைய உருவாக்குறதும் தப்புதான? உள்ளிட்ட வசனங்கள் தற்போதைய தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது.



    இந்த படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்கள். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். படம் ஆகஸ்ட் 30-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


    சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Kaappaan #Suriya #MohanLal #Arya #Sayyeshaa

    காப்பான் டீசர்:

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் `காப்பான்' படத்தில் இருந்து சிறப்பு விருந்து ஒன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Kaappaan #Suriya #Mohanlal
    சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படம் `காப்பான்'. சூர்யாவுடன் இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். நாயகியாக சாயிஷா நடிக்கிறார்.

    படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை மாலை 7 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். மோகன்லாலின் மகனாக ஆர்யாவும், பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Kaappaan #Suriya #MohanLal #Arya #Sayyeshaa

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் `காப்பான்' படத்தில் நடித்து வரும் சூர்யா, படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார். #Kaappaan #Suriya #Mohanlal
    சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று முடிந்தததாக படக்குழு அறிவித்தது.

    இந்த நிலையில், மொத்த படக்குழுவினருக்கும் நடிகர் சூர்யா இன்று பிரியாணி விருந்து அளித்தார். காப்பான் படக்குழுவுக்கு சூர்யா பிரியாணி பரிமாறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் பாடல் காட்சியை படக்குழு படமாக்கி வருவதாகவும், அடுத்ததாக அமெரிக்கா சென்று அங்கு ஒரு பாடலை படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். 

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. #Kaappaan #Suriya37 #Suriya

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் - ஆர்யா - சாயிஷா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி வரும் காப்பான் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. #Kaappaan #Suriya #Mohanlal
    சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மோகன்லால் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

    மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடிக்கின்றனர்.


    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 

    சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. #Kaappaan #Suriya37 #Suriya
     
    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன் லால் - ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 37-வது படத்திற்கு `காப்பான்' என்று தலைப்பு வைத்துள்ளனர். #Kaappaan #Suriya
    `மாற்றான்' படத்திற்கு பிறகு சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் த்ரில்லர் படத்திற்கு `காப்பான்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

    முன்னதாக காப்பான், மீட்பான், உயிர்கா உள்ளிட்ட மூன்று தலைப்புகளை தேர்வு செய்து வைத்திருந்த படக்குழு, எந்த தலைப்பை வைக்கலாம் என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டிருந்தது. இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 12.10 மணிக்கு படத்திற்கு காப்பான் என்று தலைப்பு வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் முதல்பார்வை போஸ்டரையும் வெளியிட்டது.

    இதில் சூர்யா, கோர்ட், சூட்டுடன் கையில் துப்பாக்கி வைத்தபடி தோற்றமளிக்கிறார். மற்றொரு போஸ்டரில், சூர்யா, மோகன் லால், ஆர்யா இடம்பெற்றுள்ளனர்.

    மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்து வருகிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 

    70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி 17-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. அதற்குள் என்ஜிகே படப்பிடிப்பை முடித்துவிட்டு சூர்யா விரைவில் காப்பான் படக்குழுவில் இணையவிருக்கிறார். #Kaappaan #Suriya37 #Suriya

    வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் மோகன் லால் - மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஒடியன்' படத்தின் விமர்சனம். #Odiyan #OdiyanReview #MohanLal #ManjuWarrier
    கேரளாவின் மலபார் பகுதியில் வாழ்ந்த ஒடியனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் கிடைக்காத அந்த காலத்தில், ஒடியன் என்று அழைக்கப்படுபவர்கள், விலங்குகளை போல வேடம் தரித்துக் கொண்டு ஒருவரை பயம்கொள்ளச் செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர். அந்த வகையில் கடைசி ஒடியனாக வருகிறார் மோகன்லால்.

    மோகன் லாலுக்கு தன்னுடன் பள்ளியில் படித்த மஞ்சு வாரியருடன் காதல் வருகிறது. ஆனால் தனது காதலை மஞ்சு வாரியரிடம் சொல்லாமல் மறைக்கிறார். மறுபுறம் மஞ்சு வாரியரிக் முறைமாமனான பிரகாஷ்ராஜ், மஞ்சு வாரியரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். அத்துடன் கண் பார்வையற்ற மஞ்சு வாரியரின் தங்கையையும் அடைய நினைக்கிறார்.

    பிரகாஷ்ராஜின் ஆசைக்கு முட்டுக்கட்டை போடும் மஞ்சு வாரியர், நரேனை திருமணம் செய்து கொள்கிறார். திருமணமான சில காலங்களில் நரேன் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்.



    அதேபோல் மஞ்சு வாரியரின் பார்வை தெரியாத தங்கையின் கணவரும் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். இந்த இரண்டு மரணங்களுக்கும் மோகன்லால் தான் காரணம் என்று மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நினைக்கிறார்கள்.

    இதனால் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊரைவிட்டு சென்றுவிடுகிறார் மோகன்லால், மஞ்சு வாரியரின் மகளின் மூலம் உண்மைகளை அறிந்து சொந்த ஊருக்கு திரும்பி அந்த இருவிரன் கொலைக்கும் காரணமானவரை எப்படி பழிதீர்க்கிறார்? மோகன் லால் தனது சுயரூபத்தை காட்டினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    மோகன் லால் ஒடியன் கதாபாத்திரமாக சிறப்பாக நடித்திருக்கிறார். இளம்வயது மற்றும் முதிர்ச்சியான தோற்றம் என ரசிக்கும்படியாக நடித்துள்ளார். குறிப்பாக ஒடியன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் அதகளப்படுத்தி இருக்கிறார்.



    மஞ்சு வாரியர் மோகன் லால் மீதான காதல், தனது வாழ்க்கை, தனது தங்கையின் வாழ்க்கை என இரண்டையும் தொலைத்துவிட்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் பக்குவம் காட்டுகிறார். பிரகாஷ் ராஜ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் கருத்த தோளுடன் வரும் பிரகாஷ் ராஜின் தோற்றம் பேசும்படியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மற்றபடி இன்னோசென்ட், சித்திக், மனோஜ் ஜோஸி, நந்து, நரேன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கின்றனர்.

    வித்தயாசமான கதையை தொட்டதற்காகவே இயக்குநர் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனனுக்கு பாராட்டுக்கள். கதையும், கதைக்கு அச்சாணியாக மோகன் லால், பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியர் என பிரபலங்கள் இணைந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்த நிலையில், அந்த எதிர்பார்ப்புகளை இயக்குநர் பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இன்னமும் மெனக்கிட்டிருக்கலாம்.

    எம்.ஜெயச்சந்திரன், சாம்.சி.எஸ் இசையில் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் `ஒடியன்' பலமில்லை. #Odiyan #OdiyanReview #MohanLal #ManjuWarrier

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால், மீடூ இயக்கம் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளார். #Mohanlal #Metoo
    தமிழ் திரையுலகில் பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது மீ டூ புகார் கூறியதை அடுத்துப் பரபரப்பானது. அதே போல் கேரள திரையுலகிலும் நடிகை ஒருவர் கடத்தப்பட்ட விவகாரத்திலிருந்து அங்கிருக்கும் நடிகைகள் திரையுலகில் பெண்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகள் பற்றி பேசி வருகின்றனர்.

    இந்நிலையில், மீ டூ விவகாரம் குறித்து கருத்துக் கூறியுள்ளார் நடிகர் மோகன்லால். சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பாதிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்ட மலையாள திரையுலகம் வரும் டிசம்பர் 7ஆம் தேதி துபாயில் கலை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிகழ்விற்கான ஏற்பாடு வேலைகளுக்காக துபாய் சென்றுள்ள நடிகர் மோகன்லால் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மீ டூ விவகாரம் பற்றி பேசும் போது, “மலையாள சினிமா உலகில் இதுபோன்ற பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீ டூவை ஒரு இயக்கமாக நீங்கள் நினைக்கக் கூடாது. அது உள்நோக்கம் கொண்டது. அது ஒரு டிரெண்ட். பாலியல் குற்றம் சொல்வது ஒரு பே‌ஷனாக மாறிவிட்டது. எந்த ஒரு சிக்கலுக்கும் ஒரு ஆயுட்காலம் உண்டு. பாலியல் சச்சரவுகள் திரைப்படங்களில் மட்டுமல்ல... வாழ்வில் எல்லா இடங்களிலும் நடக்கலாம்” என்று கூறியுள்ளார்.
    கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக கருத்து கேட்ட பத்திரிகையாளரிடம் எரிந்து விழுந்ததற்காக நடிகர் மோகன் லால் மன்னிப்பு கேட்டார். #Mohanlalapologises #Mohanlaljourno
    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான மோகன் லால் விஸ்வசாந்தி அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். 

    கேரள மாநிலத்தில் பல்வேறு சமூகநலச் சேவைகளில் விஸ்வசாந்தி அறக்கட்டளையின் சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியவர்களுக்கான புதிய மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    சமீபத்தில் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தை புனரமைப்பதற்காக  வெளிநாடுகளில் வாழும் மலையாளிகள் பங்கேற்கும் வட்டமேஜை கருத்தரங்கம் ஒன்றுக்கும் மோகன் லால் ஏற்பாடு செய்தார்.

    கேரள வெள்ள நிவாரணத்துக்கு பொருட்களை அனுப்புவது தொடர்பாக நேற்று விஸ்வசாந்தி அறக்கட்டளை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு மோகன் லால் பேட்டியளித்தார். அந்த பேட்டியின்போது, கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் எரிச்சல் அடைந்த மோகன் லால் அந்த செய்தியாளரை கடிந்து கொண்டார்.

    வெள்ள நிவாரண உதவி செய்வது தொடர்பான உன்னத நோக்கம் பற்றி பேசி கொண்டிருக்கும்போது, இதைப்போன்ற அவசியமற்ற கேள்விகளை கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? வெள்ள நிவாரணத்துக்கும் கன்னியாஸ்திரி புகாருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? என்று மோகன் லால் எதிர் கேள்வி கேட்டார். 

    இந்த விவகாரம் செய்தியாக வெளியானதும் சமூக வலைத்தளங்களில் மோகன் லாலுக்கு எதிராக பலர் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டனர். 
        
    இதைதொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக மோகன் லால் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று விளக்கம் அளித்துள்ளார். சமயம் அறியாமல் அந்த பத்திரிகையாளர் எழுப்பிய கேள்வி தன்னை கோபப்படுத்தியதாக அவர் குறிப்பிடுள்ளார்.

    ‘அந்த செய்தியாளர் கேட்ட கேள்வி கேரள மாநிலத்தில் தற்போது மிகுந்த பரபரப்புக்குள்ளான ஒரு விவகாரம் தொடர்பானதுதான். ஆனால், அப்போது அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் மனநிலையில் நான் இல்லை. நான் வேறொரு மனநிலையில் இருந்ததால் நிருபருக்கு அப்படி பதில் அளிக்க நேர்ந்தது.

    ஒரு நிறுவனத்தையோ, பத்திரிகையாளர்களையோ, தனிநபரையோ அவமதிக்கும் வகையில் நான் அப்படி பதில் அளிக்கவில்லை. எனது பதிலால் அந்த கேள்வியை எழுப்பியவரின் மனம் காயப்பட்டிருந்தால், தயவு செய்து என்னை உங்களது மூத்த சகோதரராக நினைத்து எனது மன்னிப்பை ஏற்குமாறு கேட்டு கொள்கிறேன்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். #Mohanlalapologises #Mohanlaljourno
    ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கப் போவதாக மூன்று அறிவிப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில், அந்த படத்தில் கமல்ஹாசன், மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #JayalalithaaBiopic #KamalHaasan
    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக்குவதாக ஏற்கனவே 2 தயாரிப்பாளர்கள் அறிவித்து இருந்தனர். இப்போது இன்னொரு தயாரிப்பாளரும் களத்தில் இறங்கி உள்ளார். முதலில் இயக்குநர் விஜய் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. இந்த படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிப்பதாக கூறப்பட்டது.

    இவர் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையையும் படமாக்கி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு உலக கிரிக்கெட் கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 வேல்டு கப் என்ற படத்தையும் தயாரிக்கிறார். ஜெயலலிதா வாழ்க்கை கதை படப்பிடிப்பு அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப்போவதாக பெண் இயக்குனர் பிரியதர்ஷினியும் அறிவித்தார். இவர் டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தற்போது வரலட்சுமி நடிக்கும் சக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். மூன்றாவதாக இப்போது பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.



    இந்த படத்தை மும்பையை சேர்ந்த ஆதித்யா பரத்வாஜ் தயாரிக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜெயலலிதா வாழ்க்கையை பாரதிராஜா இயக்கத்தில் படமாக்க ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே திரைக்கதையை உருவாக்கி வருகிறோம். இதற்கு தற்காலிகமாக புரட்சித்தலைவி என்று தலைப்பு வைத்துள்ளோம். அந்த தலைப்போடு அம்மா என்ற பெயரையும் சேர்க்கும்படி சிலர் கூறியுள்ளனர். இளையராஜாவிடம் இசையமைக்க பேசி உள்ளோம். ஜெயலலிதா வேடத்துக்கு ஐஸ்வர்யாராய், அனுஷ்கா ஆகியோரில் ஒருவரை பரிசீலிக்கிறோம். எம்.ஜி.ஆர் வேடத்துக்கு கமல்ஹாசன், மோகன்லால் ஆகியோரிடம் பேசி வருகிறோம்” என்றார்.

    மற்ற இரு படங்களிலும் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஜோதிகா, ரம்யா கிருஷ்ணன், மஞ்சிமா மோகன், வித்யாபாலன், நித்யா மேனன் ஆகியோர் பரிசீலிக்கப்படுகின்றனர். 3 படங்களிலும் ஜெயலலிதா வேடத்தில் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. #JayalalithaaBiopic #KamalHaasan

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 37-வது படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கே.வி.ஆனந்த் அறிவித்துள்ளார். #Suriya37 #Chiragjani
    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 37-வது படத்தில் ஆர்யா, மோகன்லால், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி என பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஒரு மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சிரக் ஜனி ஒப்பந்தமாகி இருப்பதாக இயக்குநர் கே.வி.ஆனந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிரக் ஜனிக்கு பிறந்தநாள் பரிசாக இந்த அறிவிப்பை கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு தற்போது லண்டனில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Suriya37 #Chiragjani

    ×