என் மலர்
நீங்கள் தேடியது "வித்யா ப்ரதீப்"
பேட்ட படத்திற்கு பிறகு தனது அடுத்தடுத்த படங்களில் பிசியாகியிருக்கும் சசிகுமார், அடுத்ததாக ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேட்ட படத்திற்கு பிறகு சசிகுமார் நாடோடிகள் 2, கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் கென்னடி கிளப் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது ராஜவம்சம் என்ற படத்தில் நடித்து வருகிறார். என்.வி.நிர்மல்குமார் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்த நிலையில், சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில், குருசோமசுந்தரம், இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப், மஞ்சுபெத்து ரோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Announcement: The versatile @SasikumarDir plays the lead in our #ProductionNo14! We're really excited to have you on board sir. #JabaksMoviesNext@proyuvraajpic.twitter.com/McK0Q8Vueo
— Nemichand Jhabak (@JabaksMovies) May 29, 2019
ஜெபக் மூவிஸ் சார்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இந்த படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் உருவாகிறது. படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜெபக்கின் 14-வது தயாரிப்பாக உருவாகும் இந்த படத்திற்கு ரோனி ராப்பில் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவையும், வெங்கட் ரமணன் படத்தொகுப்பையும், சிவகுமார் யாதவ் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
கிரண்சந்த் இயக்கத்தில் கிருஷ்ணா - வித்யா பிரதீப் நடிப்பில் வெளியாகி இருக்கும் `களரி' படத்தின் விமர்சனம். #KalariReview #Krishna #VidyaPradeep
கிருஷ்ணா கேரளவில் தமிழர் வாழும் பகுதியான வாத்துருதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். குடிகார தந்தையின் கொடுமையால் சிறு வயதில் இருந்தே பய நோய்க்கு ஆளாகிவிடுகிறார். இதனாலேயே சண்டை நடக்கும் இடங்களில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பார். தன்னை அடிக்க வருபவர்களை பார்த்து நடுங்கும் சுபாவம் கொண்டவர். ஆனால் அவரது தங்கை சம்யுக்தாவோ தன் அண்ணணுக்கு நேர் எதிராக பிரச்சனைகளை கண்டு கலங்காமல் அதை நிற்க கூடியவர்.
அடிக்கடி ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொண்டு சண்டை போட்டுவிடுவார். கிருஷ்ணா சென்று பேசி அதனை தீர்த்து வைத்துவிட்டு வருவார். கிருஷ்ணாவுக்கு தன் தங்கை சம்யுக்தாவை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது லட்சியம்.

ஆனால் குடிகார தந்தை எம்.எஸ்.பாஸ்கரால், வரும் வரன் எல்லாம் விட்டுப்போகிறது. இந்த நிலையில் விஷ்ணுவை காதலிக்கிறார் சம்யுக்தா. பெண் கேட்டு வரும் அவரையும் அவமானப்படுத்தி அனுப்புகிறார் எம்.எஸ்.பாஸ்கர்.
உள்ளூர் பெரிய மனிதர் ஜெயப்பிரகாஷிடம் வேலை பார்ப்பவருக்கு சம்யுக்தா மீது காதல் ஏற்பட, எம்.எஸ்.பாஸ்கருக்கு சரக்கு வாங்கிக்கொடுத்து, சம்யுக்தாவை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்துவிடுகிறது. ஆனால் திருமணத்திற்கு பிறகு சம்யுக்தா, அவளது காதலன் விஷ்ணுவுடன் சேர்ந்து சுற்றுவதை கிருஷ்ணா பார்த்து விடுகிறார். மேலும் தனது தங்கை கர்ப்பமாக இருப்பதும் தெரிய வருகிறது.

கடைசியில் சம்யுக்தாவின் வாழ்க்கை என்ன ஆனது? கிருஷ்ணா தனது கோழைத்தனத்தில் இருந்து விடுபட்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கிருஷ்ணாவுக்கு நடிக்க முக்கியத்துவம் உள்ள வேடம். தங்கை மீது பாசம், அப்பா மீது வெறுப்பு, பழி வாங்கும்போது ஆக்ரோஷம் என்று நிறைவாகவே செய்திருக்கிறார். அவரது காதலி வித்யா பிரதீப்புக்கு அதிகம் வேலை இல்லை. வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். விஷ்ணு தனது நடிப்பின் மூலம் அனைரையும் கவர்கிறார்.

தங்கையாக வரும் சம்யுக்தா பாசத்தை பொழிகிறார். ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு தங்கச்சி அறிமுகம். எம்.எஸ்.பாஸ்கர் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜெயப்பிரகாஷ், பாண்டி, சென்ட்ராயன் என மற்ற கதாபாத்திரங்களும் அவர்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
கோழையாக இருக்கும் ஒருவன் தங்கைக்காக பழி வாங்க எடுக்கும் அவதாரமாக படத்தை இயக்கியிருக்கிறார் கிரண் சந்த். திரைக்கதையில் எந்த வித திருப்பமும் இல்லாமல் செல்கிறது படம். கிருஷ்ணாவின் கோழைத்தனம் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் பார்த்து சலித்து போன கதை என்பதால் அடுத்தடுத்த காட்சியை எளிதில் யூகிக்க முடிகிறது. படம் கேரளாவில் உருவாகி இருந்தாலும் ரொம்பவும் மலையாள வாசனை இல்லை. திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் களரி மனம் கவர்ந்து இருக்கும்.
வி.வி.பிரசன்னா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். குருதேவின் ஒளிப்பதிவில் கேரளாவின் தமிழர் வாழும் பகுதி அழகாக காட்டப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் `களரி' நன்றாக கிளறியிருக்கலாம். #KalariReview #Krishna #VidyaPradeep
கிரண்சந்த் இயக்கத்தில் கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன் நடிப்பில் இளைஞனின் வாழ்க்கை போராட்டமாக உருவாகியிருக்கும் ‘களரி’ படத்தின் முன்னோட்டம். #Kalari #Krishna #VidyaPradeep
நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் செனித் கெலோத் தயாரிப்பில் உருவவாகியிருக்கும் படம் ‘களரி’.
கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன், எம். எஸ். பாஸ்கர், ஜெய பிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ஆர்.பி.குருதேவ், படத்தொகுப்பு - பிரபாகர், இசை - வி.வி. பிரசன்னா, கலை - நந்தன், சண்டைபயிற்சி - ஸ்டன்னர் ஷாம், நடனம் - ராஜூ பாஸ்கர், கல்சாமணி, தயாரிப்பு - செனித் கெலோத், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கிரண்சந்த்.
படம் பற்றி இயக்குநர் கிரண் சந்த் பேசும் போது,
‘களரி’ என்றால் தற்காப்புகலை என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் களரி என்றால் போர்க்களம் என்பது தான் பொருள். அதை மையப்படுத்தி தான் இந்த தலைப்பு இருக்கிறது.

கொச்சி மாநகரத்தில் வாத்துருத்தி என்ற ஒரு பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள். இந்த பகுதியை கதைக்களமாக கொண்டு தான் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். நடிகர் கிருஷ்ணா இதில் ஒரு சராசரி இளைஞராக நடித்திருக்கிறார். இவருக்கும், இவருடைய தந்தைக்கும் உள்ள தலைமுறை இடைவெளியால் ஏற்படும் சிக்கல்களும், அதைத்தொடர்ந்து நடைபெறும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தான் படத்தின் கதை.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, காதல், சென்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைவரையும் கவரும் வகையில் ‘களரி’ உருவாகியிருக்கிறது என்றார். படம் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Kalari #Krishna #VidyaPradeep
களரி படத்தின் டிரைலர்:






