search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Samyuktha Menon"

  • கார்த்திகேயா-2 படத்தின் மூலம் பிரபலமானார் நடிகர் நிகில்
  • அறிமுக இயக்குனரான பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கும் புதிய படம் சுயம்பு.

  அறிமுக இயக்குனரான பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கும் புதிய படம் சுயம்பு.

  கார்த்திகேயா-2 படத்தின் மூலம் பிரபலமானார் நடிகர் நிகில். படத்தில் பழங்கால வீரராக நடிக்கும் நிகில் படத்தின் கதாபாத்திரத்துக்காக தற்காப்புக் கலை, குதிரை சவாரி போன்ற தீவிர பயிற்சிகளை எடுத்துள்ளார்.

  படத்தில் கதாநாயகிகளாக சம்யுக்தா, நபா நடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் பான் இந்தயன் படமாக வெளியாகவுள்ளது.

  நபா நடேசுக்கு சமீபத்தில் கையில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பில் இருந்து சில நாட்கள் சிகிச்சைக்காக இடைவெளி விட்டிருந்தார். குணமடைந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் நபாநடேஷ் இணைந்து நடித்து வருகிறார். படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

   

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  கே.சி.சுந்தரம் இயக்கத்தில் அனந்த் நாக் - அஞ்சு குரியன் - சம்யுக்தா மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜூலை காற்றில்' படத்தின் விமர்சனம். #JulyKaatril #JulyKaatrilReview #AnanthNag
  தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நாயகன் அனந்த் நாக் தனது நண்பன் திருமணத்தில் நாயகி அஞ்சு குரியனை சந்திக்கிறார். பின்னர் இருவருக்கிடையே நட்பு வளர்கிறது. ஒரு கட்டத்தில் அஞ்சு குரியனுக்கு, அனந்த் நாக் மீது காதல் வளர்கிறது.

  இதையடுத்து இருவீட்டாரும் பேசி இவர்களது திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இவர்களுக்கு நிச்சதார்த்தமும் நடக்கிறது. அஞ்சு குரியனுடன் காதல் வயப்படாத அனந்த் நாக் அஞ்சுவிடம் இருந்து விலகியே இருக்கிறார். இந்த நிலையில், இவரது அலுவலகத்துக்கு வரும் சம்யுக்தா மேனனுடன் அனந்த நாக்குக்கு பழக்கம் ஏற்படுகிறது.  இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பிக்கின்றனர். வேறு ஒருவருடனாக காதலை முறித்துக் கொண்டு வந்த சம்யுக்தா மேனனை, அனந்த் நாக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் சம்யுக்தா, அனந்த் நாக் மீது பெரியதாக விருப்பம் கொள்ளவில்லை. எனினும், இவர்களது நெருக்கம் அதிகமாகிறது. சம்யுக்தா மற்றவர்களுடன் பழகுவதை விரும்பாத அனந்த் நாக், சில அறிவுரைகளை கூற அது சம்யுக்தாவுக்கு பிடிக்கவில்லை.

  கடைசியில், அஞ்சு குரியனின் காதல் வென்றதா? அனந்த் நாக்கின் காதல் வென்றதா? இவர்களின் காதல் என்னவானது? என்ற முக்கோணக் காதல் கதையே ஜூலை காற்றில் படத்தின் மீதிக்கதை.

  இதற்கு முன்பாக சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அனந்த் நாக் இந்த படத்தில் நாயகனாக வலம் வருகிறார். காதல், பிரிவு என இந்த கால இளைஞனாக பளிச்சிடுகிறார். அஞ்சு குரியன் அழகு பதுமையாக வந்து ரசிக்க வைக்கிறார்.   கள்ளங்கபடமற்ற தனது காதலை வெளிப்படுத்துவதும், அதிலிருந்து வெளியேறுவதும் என அவரது வேலையை செவ்வென செய்துவிட்டுச் செல்கிறார். சம்யுக்தா மேனன் அழுத்தமான பெண் கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். ஆங்காங்கே காமெடியில் சிரிக்க வைக்கிறார் சதீஷ். மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்கள்.

  இந்த காலத்து இளைஞர்களின் காதல், பிரிவு, மீண்டும் காதல் என்ற இயல்பை படமாக இயக்கியிருக்கிறார் கே.சி.சுந்தரம். படத்தில் ஆங்காங்கே காமெடியும், படம் முழுக்க வரும் காதலும், பிரிவும் இடம்பெற்றிருக்கின்றன. இது ஒரு முக்கோணக் காதல் கதை என்று எளிதாக சொல்லும் அளவுக்கு படத்தின் திரைக்கதை நகர்கிறது. படத்தில் நீளத்தை சுருக்கி, திரைக்கதையை வலுப்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.  ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் ரசிக்கும்படியான பாடல்களும், பின்னணி இசையும் மனதை வருடுகின்றன. டேமல் சேவியரின் ஒளிப்பதிவும் அருமை.

  மொத்தத்தில் `ஜூலை காற்றில்' காதல், பிரிவு. #JulyKaatril #JulyKaatrilReview #AnanthNag #AnjuKurian #SamyukthaMenon

  கே.சி.சுந்தரம் இயக்கத்தில் அனந்த் நாக் - அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் `ஜூலை காற்றில்' படத்தின் முன்னோட்டம். #JulyKaatril #AnanthNag
  காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் சரவணன் பழனியப்பன் தயாரித்துள்ள படம் `ஜூலை காற்றில்'.

  அனந்த் நாக் நாயகனாகவும், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் நாயகிகளாகவும் நடித்துள்ள இந்த படத்தில் சதீஷ், பலோமா மொனப்பா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

  படத்தொகுப்பு - சேவியர் எட்வெர்ட்ஸ், இசை - ஜோஸ்வா ஸ்ரீதர், படத்தொகுப்பு - அணுசரண், கலை - ஜெகுமார், பாடல்கள் - நா.முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, ரோகிணி, சௌந்தரராஜன், நடனம் - ஸ்ரீசெல்வி, நிர்வாக தயாரிப்பு - எம்.செந்தில், தயாரிப்பு மேற்பார்வை - வல்லம் டி.வெங்கடேஷ், தயாரிப்பு - சரவணன் பழனியப்பன், எழுத்து, இயக்கம் - கே.சி.சுந்தரம்.  படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் கே.சி.சுந்தரம் பேசுகையில்,

  “ நான் இன்சினியரிங் முடித்துவிட்டு, இயக்குனர் ஜீவாவிடம் உதவியாளராக சேர்ந்தேன். தயாரிப்பாளர் சரவணன் பழனியப்பன், அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன். காதல் படத்திலிருந்து இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதரின் ரசிகன் ஆகிவிட்டேன். இந்த கதையை முதலில் அவரிடம் சொல்லி பாடலைக் கேட்டபோது, 5 அற்புதமான மெட்டுகளை நமக்காக அமைத்துக் கொடுத்தார். இந்தப் படத்தின் ஆல்பம் ஹிட்டாகும் என்று நம்புகிறேன். இந்த படம் சினிமா ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்றார்.

  படம் வருகிற மார்ச் 15-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #JulyKaatril #AnanthNag #AnjuKurian #SamyukthaMenon

  ஜூலை காற்றில் டிரைலர்:

  கிரண்சந்த் இயக்கத்தில் கிருஷ்ணா - வித்யா பிரதீப் நடிப்பில் வெளியாகி இருக்கும் `களரி' படத்தின் விமர்சனம். #KalariReview #Krishna #VidyaPradeep
  கிருஷ்ணா கேரளவில் தமிழர் வாழும் பகுதியான வாத்துருதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். குடிகார தந்தையின் கொடுமையால் சிறு வயதில் இருந்தே பய நோய்க்கு ஆளாகிவிடுகிறார். இதனாலேயே சண்டை நடக்கும் இடங்களில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பார். தன்னை அடிக்க வருபவர்களை பார்த்து நடுங்கும் சுபாவம் கொண்டவர். ஆனால் அவரது தங்கை சம்யுக்தாவோ தன் அண்ணணுக்கு நேர் எதிராக பிரச்சனைகளை கண்டு கலங்காமல் அதை நிற்க கூடியவர். 

  அடிக்கடி ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொண்டு சண்டை போட்டுவிடுவார். கிருஷ்ணா சென்று பேசி அதனை தீர்த்து வைத்துவிட்டு வருவார். கிருஷ்ணாவுக்கு தன் தங்கை சம்யுக்தாவை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது லட்சியம்.   ஆனால் குடிகார தந்தை எம்.எஸ்.பாஸ்கரால், வரும் வரன் எல்லாம் விட்டுப்போகிறது. இந்த நிலையில் விஷ்ணுவை காதலிக்கிறார் சம்யுக்தா. பெண் கேட்டு வரும் அவரையும் அவமானப்படுத்தி அனுப்புகிறார் எம்.எஸ்.பாஸ்கர்.

  உள்ளூர் பெரிய மனிதர் ஜெயப்பிரகாஷிடம் வேலை பார்ப்பவருக்கு சம்யுக்தா மீது காதல் ஏற்பட, எம்.எஸ்.பாஸ்கருக்கு சரக்கு வாங்கிக்கொடுத்து, சம்யுக்தாவை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்துவிடுகிறது. ஆனால் திருமணத்திற்கு பிறகு சம்யுக்தா, அவளது காதலன் விஷ்ணுவுடன் சேர்ந்து சுற்றுவதை கிருஷ்ணா பார்த்து விடுகிறார். மேலும் தனது தங்கை கர்ப்பமாக இருப்பதும் தெரிய வருகிறது.  கடைசியில் சம்யுக்தாவின் வாழ்க்கை என்ன ஆனது? கிருஷ்ணா தனது கோழைத்தனத்தில் இருந்து விடுபட்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

  கிருஷ்ணாவுக்கு நடிக்க முக்கியத்துவம் உள்ள வேடம். தங்கை மீது பாசம், அப்பா மீது வெறுப்பு, பழி வாங்கும்போது ஆக்ரோ‌ஷம் என்று நிறைவாகவே செய்திருக்கிறார். அவரது காதலி வித்யா பிரதீப்புக்கு அதிகம் வேலை இல்லை. வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். விஷ்ணு தனது நடிப்பின் மூலம் அனைரையும் கவர்கிறார்.  தங்கையாக வரும் சம்யுக்தா பாசத்தை பொழிகிறார். ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு தங்கச்சி அறிமுகம். எம்.எஸ்.பாஸ்கர் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜெயப்பிரகாஷ், பாண்டி, சென்ட்ராயன் என மற்ற கதாபாத்திரங்களும் அவர்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

  கோழையாக இருக்கும் ஒருவன் தங்கைக்காக பழி வாங்க எடுக்கும் அவதாரமாக படத்தை இயக்கியிருக்கிறார் கிரண் சந்த். திரைக்கதையில் எந்த வித திருப்பமும் இல்லாமல் செல்கிறது படம். கிருஷ்ணாவின் கோழைத்தனம் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் பார்த்து சலித்து போன கதை என்பதால் அடுத்தடுத்த காட்சியை எளிதில் யூகிக்க முடிகிறது. படம் கேரளாவில் உருவாகி இருந்தாலும் ரொம்பவும் மலையாள வாசனை இல்லை. திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் களரி மனம் கவர்ந்து இருக்கும்.

  வி.வி.பிரசன்னா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். குருதேவின் ஒளிப்பதிவில் கேரளாவின் தமிழர் வாழும் பகுதி அழகாக காட்டப்பட்டிருக்கிறது. 

  மொத்தத்தில் `களரி' நன்றாக கிளறியிருக்கலாம். #KalariReview #Krishna #VidyaPradeep

  கிரண்சந்த் இயக்கத்தில் கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன் நடிப்பில் இளைஞனின் வாழ்க்கை போராட்டமாக உருவாகியிருக்கும் ‘களரி’ படத்தின் முன்னோட்டம். #Kalari #Krishna #VidyaPradeep
  நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் செனித் கெலோத் தயாரிப்பில் உருவவாகியிருக்கும் படம் ‘களரி’.

  கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன், எம். எஸ். பாஸ்கர், ஜெய பிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

  ஒளிப்பதிவு - ஆர்.பி.குருதேவ், படத்தொகுப்பு - பிரபாகர், இசை - வி.வி. பிரசன்னா, கலை - நந்தன், சண்டைபயிற்சி - ஸ்டன்னர் ஷாம், நடனம் - ராஜூ பாஸ்கர், கல்சாமணி, தயாரிப்பு - செனித் கெலோத், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கிரண்சந்த்.

  படம் பற்றி இயக்குநர் கிரண் சந்த் பேசும் போது, 

  ‘களரி’ என்றால் தற்காப்புகலை என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் களரி என்றால் போர்க்களம் என்பது தான் பொருள். அதை மையப்படுத்தி தான் இந்த தலைப்பு இருக்கிறது.  கொச்சி மாநகரத்தில் வாத்துருத்தி என்ற ஒரு பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள். இந்த பகுதியை கதைக்களமாக கொண்டு தான் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். நடிகர் கிருஷ்ணா இதில் ஒரு சராசரி இளைஞராக நடித்திருக்கிறார். இவருக்கும், இவருடைய தந்தைக்கும் உள்ள தலைமுறை இடைவெளியால் ஏற்படும் சிக்கல்களும், அதைத்தொடர்ந்து நடைபெறும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தான் படத்தின் கதை.

  உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, காதல், சென்டிமெண்ட், காமெடி, ஆக்‌ஷன் என அனைவரையும் கவரும் வகையில் ‘களரி’ உருவாகியிருக்கிறது என்றார். படம் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Kalari #Krishna #VidyaPradeep

  களரி படத்தின் டிரைலர்:

  ×