

'வாத்தி' படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சம்யுக்தா. இவர் தெலுங்கிலும் பல படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். மலையாளம், கன்னடத்திலும் படங்கள் நடிக்கிறார்.
படங்கள் நடிப்பது போலவே, சமூக வலைதளங்களிலும் சம்யுக்தா மேனன் சுறுசுறுப்பாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் தினந்தோறும் தனது அன்றாட நடவடிக்கைகள் குறித்து ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்.
அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடவும் செய்கிறார். வாட்டசாட்டமான நடிகை என்று வர்ணிக்கப்படும் சம்யுக்தாவை, இன்ஸ்டாகிராமில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடருகிறார்கள்.
இதற்கிடையில் சமீபத்தில் கருப்பு நிற உடையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை சம்யுக்தா வெளியிட்டுள்ளார்.
இந்த படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சம்யுக்தாவின் அழகை புகழ்ந்து ரசிகர்கள் கருத்துகளை அள்ளி தெளிக்க, அம்மணி படுகுஷியாம்.