என் மலர்
சினிமா செய்திகள்

மாரி செல்வராஜின் உலகத்தை விட்டு என்னால் வெளிவர முடியவில்லை- இயக்குனர் லிங்குசாமி
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட 'பைசன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
இப்படம் தீபாவளி முன்னிட்டு கடந்த 17ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், பைசன் படத்தை பார்த்த இயக்குனர் லிங்குசாமி படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," பைசன் படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜின் உலகத்தை விட்டு என்னால் வெளிவர முடியவில்லை.
துருவ் விக்ரமின் அசாத்திய முயற்சியும், அமீர், பசுபதி, லால் ஆகியோரின் கதாபாத்திரங்களும் அற்புதமாக எழுதப்பட்டு இருந்தன.
நிவாஸ் கே பிரசன்னாவின் பாடல்களும், இசையும் படத்திற்கு உயிரூட்டி உள்ளன. படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என்றார்.






