என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
துணிவு, அஜித்தின் மங்காத்தா-வினோத்தின் சதுரங்கவேட்டையின் கலவையாகும் - இயக்குனர் லிங்குசாமி
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்ற திரையரங்குகளில் வெளியானது.
- இப்படத்தை திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் துணிவு படத்தை ஆனந்தம், ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கிய லிங்குசாமி பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், துணிவு திரைப்படம் அஜித் சாரின் மங்காத்தா மற்றும் வினோத்தின் சதுரங்கவேட்டையின் கலவையாகும். அது இறுக்கமாகவும் திடமாகவும் இருந்தது. வாழ்த்துக்கள் போனிகபூர் சார் மற்றும் படக்குழுவினருக்கு. இந்த பொங்கலுக்கு மாபெரும் வெற்றியடைகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.