விரைவில் உருவாகும் பையா -2.. தமிழில் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கும் ஜான்வி கபூர்..

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பையா’.இந்த படத்தில் கார்த்தி மற்றும் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பையா - ஜான்வி கபூர்
பையா - ஜான்வி கபூர்
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பையா'. லிங்குசாமி இயக்கத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது வரை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது. கார்த்தியின் சினிமா பயணத்தில் இப்படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

பையா

'பையா' திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் அடுத்த பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பையா' படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ளதாகவும் இதில் கார்த்தி பதில் ஆர்யாவும் தமன்னாவிற்கு பதிலாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் நடிக்கவுள்ளதாக செய்தி பரவி வருகிறது.

ஜான்வி கபூர் - ஆர்யா

எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகிவில்லை. இருப்பினும் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com