search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chicken biriyani"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொமேட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இச்சேவையில் முன்னணியில் உள்ளன
    • இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியின் போது மிக அதிகளவில் ஆர்டர்கள் செய்துள்ளனர்

    கடந்த சில வருடங்களாக உணவிற்காக வசிப்பிடத்தை விட்டு வெளியே சென்று உணவகங்களை தேடுவதற்கு பதிலாக இணையதளத்தில் உள்ள செயலிகளின் மூலம் விருப்பமான உணவகங்களிலிருந்து விலைகளை ஒப்பிட்டு பார்த்து தங்களுக்கு பிடித்தமான உணவுகளை இருக்கும் இடத்திற்கே தருவிப்பது இந்தியர்களிடையே பிரபலமாகி வருகிறது.

    சொமேட்டோ (Zomato), ஸ்விக்கி (Swiggy) உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையில் முன்னணியில் உள்ளன.

    ஆண்டுதோறும், ஸ்விக்கி நிறுவனம் தங்கள் செயலியின் மூலம் பெரும்பான்மையானோர் தருவிக்கும் உணவு வகைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

    இதில் தொடர்ச்சியாக 8-வது ஆண்டாக முதலிடத்தை "பிரியாணி" பிடித்துள்ளது.


    இந்த தரவுகளின்படி ஒவ்வொரு 2.5 வினாடிகளில் இந்தியர்களால் ஒரு பிரியாணி ஆர்டர் செய்யப்படுகிறது. அதிலும் சைவ பிரியாணியோடு ஒப்பிட்டால் சிக்கன் பிரியாணியின் விகிதாசாரம் 1 : 5.5 எனும் அளவில் உள்ளது.

    ஸ்விக்கி செயலியின் தளத்தில் 40,30,827 முறை "பிரியாணி" அதிகம் தேடப்பட்ட சொல்லாக உள்ளது. ஐதராபாத் நகரில்தான் பிரியாணி ஆர்டர்கள் அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. அந்நகரத்தில் ஒரே நபர் இந்த ஒரே வருடத்தில் 1633 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளார்.

    ஐசிசி 2023 ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது சண்டிகர் நகரில் ஒரு குடும்பம் ஒரே முறையில் 70 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளது. விறுவிறுப்பான அப்போட்டி நடைபெற்ற தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 250 ஆர்டர்கள் எனும் விகிதத்தில் மக்கள் ஸ்விக்கியில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர்.

    ஸ்விக்கியின் தரவுகளின்படி கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரூ மக்கள்தான் அதிகளவில் கேக் ஆர்டர் செய்துள்ளனர். 8.5 மில்லியன் ஆர்டர்கள் செய்ததால் இந்நகர் "கேக் தலைநகரம்" (cake capital) என அழைக்கப்படுகிறது.

    பிப்ரவரி 14, வேலண்டைன் தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 271 கேக்குகள் எனும் விகிதத்தில் ஆர்டர்கள் குவிந்தன. நாக்பூர் நகரில் ஒரு உணவு விரும்பி, ஒரே நாளில் 92 கேக்குகளை ஆர்டர் செய்துள்ளார்.


    பிரியாணியையும், கேக்குகளையும் தவிர, மும்பை நகரை சேர்ந்த ஒருவர் 42.3 லட்சம் பெருமான உணவு ஆர்டர்களை செய்திருந்தது இந்த தரவுகளில் உள்ள வியக்க வைக்கும் மற்றொரு தகவல்.

    அதே போல் ஒடிஸா மாநில தலைநகர் புபனேஸ்வரில் ஒரு வீட்டில் ஒரே நாளில் 207 பீஸாக்களை ஆர்டர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலவின பட்டியலில் மட்டன் பிரியாணியின் விலை ரூ.200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. #EC #LSPolls
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகின்றன. இதில் களம் காண வாய்ப்பு கிடைத்திருக்கும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

    தேர்தலில் எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற முடிவோடு களத்தில் இறங்கி இருக்கும் அவர்கள், வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு வகையில் பிரசாரங்களை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். இதற்காக சிலப் பல கோடிகளை வாரியிறைக்கவும் சிலர் தயங்குவது இல்லை.

    ஆனால் அப்படிப்பட்ட வேட்பாளர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் தேர்தல் கமிஷன் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் செலவினங்களுக்கு அதிகபட்சம் ரூ.70 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    இந்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது வேட்பாளர் தங்கள் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களின் அதிகப்பட்ச விலை விவரங்களை தேர்தல் கமிஷன் அறிவித்து இருக்கிறது. இது தொடர்பான பட்டியல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

    அதன்படி, வேட்பாளர்கள் பயன்படுத்தும் 2 படுக்கை வசதி கொண்ட அறையின் வாடகை 5 நட்சத்திர விடுதி என்றால் ரூ.9300 மற்றும் வரிகளும் அடங்கியதாக இருக்க வேண்டும். 3 நட்சத்திர விடுதி என்றால் ரூ.5,800 மற்றும் வரிகள் அடங்கி இருக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

    இதைப்போல மட்டன், சிக்கன், காய்கறி பிரியாணிகளின் விலை முறையே ரூ.200, ரூ.180, ரூ.100 ஆக இருக்க வேண்டும் எனக்கூறி உள்ள தேர்தல் கமிஷன், மற்ற உணவு வகைகளான சாப்பாடு ரூ.100, சிற்றுண்டி ரூ.100, தேநீர் ரூ.10, பால் ரூ.15, காய்கறி சாதம் ரூ.50, இளநீர் ரூ.40 என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் எனவும் அறிவித்து இருக்கிறது.

    மேலும் பூசணிக்காய் ரூ.120, சேலை (பூனம்) மற்றும் டீ-சர்ட் முறையே ரூ.200 மற்றும் ரூ.175, வாழை மரம் ரூ.700, தொப்பி ரூ.50, பூக்கள் ரூ.60, சால்வை ரூ.150, தண்ணீர் ஒரு லிட்டர் ரூ.20, பிளச்சிங் பவுடர் கிலோ ரூ.90 போன்றவற்றுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    வேட்பாளர்களுடன் செல்லும் தொழிலாளர்களின் ஊதியத்தை பொறுத்தவரை 8 மணி நேரத்துக்கு ரூ.450-ம், டிரைவர்களுக்கு ரூ.695-ம் வழங்கப்பட வேண்டும். பட்டாசுகளுக்கு ரூ.600 (ஆயிரம் வாலா), பேண்ட் மேளத்துக்கு ரூ.4500 (4 மணி நேரத்துக்கு) என நிர்ணயித்துள்ள தேர்தல் கமிஷன், திருமண மண்டபங்களுக்கு வாடகையாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை அறிவித்து இருக்கிறது.

    வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பிரசார கூட்டங்களில் பயன்படுத்தும் எல்.இ.டி. திரைகளின் வாடகை ரூ.12 ஆயிரமாகவும் (8 மணி நேரம்) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    வேட்பாளர்களின் இத்தகைய தேர்தல் செலவினங்களை கண்காணிக்க தொகுதிக்கு 2 அதிகாரிகளை நியமித்து இருக்கும் தேர்தல் கமிஷன், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் சார்பில் நடைபெறும் பிரசாரங்கள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்யவும் அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. #EC #LSPolls

    ×