என் மலர்
நீங்கள் தேடியது "ஓய்வு வயது உயர்வு"
- இதுதொடர்பான மசோதா டென்மார்க் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
- அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 81 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 21 பேரும் வாக்களித்தனர்.
கோபன்கேஹன்:
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் பிரதமர் மெட் பிரடெரிக்சன் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 70-ஆக உயர்த்த அரசாங்கம் முடிவு செய்தது.
இதுதொடர்பான மசோதா டென்மார்க் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 81 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 21 பேரும் வாக்களித்தனர். இதனால் ஓய்வூதிய வயது அதிகரிப்பு சட்டம் பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிக ஓய்வு பெறும் வயது உடைய நாடாக டென்மார்க் மாறி உள்ளது.
இந்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது அங்கு ஓய்வு பெறும் வயது 67 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து, 60 வயதாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
- ஒருங்கிணைந்த கல்வி திட்டமான சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குநர் சுதர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
சேலம்:
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1500-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. நடுநிலை, மேல்நிலை பள்ளிகளில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒருங்கிணைந்த கல்வி திட்ட தொகுப்பூதிய பணியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர பயிற்றுனர்கள், கல்வி மைய பாதுகாவலர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து, 60 வயதாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்டங்க ளில் உள்ள வட்டார வள மையங்க ளுக்கும், பள்ளி மேலாண்மை குழுக்களுக்கும் தெரிவிக்கு மாறு ஒருங்கிணைந்த கல்வி திட்டமான சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குநர் சுதர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.






