search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "semifinal"

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். #SingaporeOpenBadminton #PVSindhu
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற சீன வீராங்கனை காய் யான்யானை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கடுமையாக போராடிய சிந்து, 21-13, 17-21, 21-14 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம், இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் சிந்து அரையிறுதி வரை முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.



    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால், ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார். இப்போட்டியில் துவக்கம் முதலே தடுமாறிய சாய்னா முதல் செட்டை விரைவில் இழந்தார். அடுத்த செட்டில் சற்று போராடினார். ஆனாலும் அவரால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. இந்த ஆட்டத்தில், 21-8, 21-13 என்ற செட்கணக்கில் ஜப்பான் வீராங்கனை வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தார். அரையிறுதியில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒகுஹரா- பி.வி.சிந்து பலப்பரீட்சை நடத்த உள்ளனர். #SingaporeOpenBadminton #PVSindhu
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #ISL2018 #Bengaluru #NorthEastUnited
    பெங்களூரு:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், பெங்களூரு எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டம் பெங்களூருவில் நேற்று இரவு நடந்தது. கவுகாத்தியில் நடந்த முதலாவது சுற்றில் பெங்களூரு எப்.சி. அணி கடைசி நிமிடத்தில் செய்த தவறால் 1-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியிடம் தோல்வி அடைந்தது. எனவே இந்த ஆட்டத்தில் குறைந்தது 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணியால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியுடன் களம் கண்டது. நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி ‘டிரா’ செய்தாலே இறுதிப்போட்டியை உறுதி செய்து விடலாம் என்ற நிலையில் களம் இறங்கியது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஆடிய பெங்களூரு அணி கடைசி நேரத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. முடிவில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெங்களூரு அணியில் மிகு 72-வது நிமிடத்திலும், டிமாஸ் டெல்காடோ 87-வது நிமிடத்திலும், சுனில் சேத்ரி 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கவுகாத்தி அணியால் கடைசி வரை பதில் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை.

    எப்.சி.கோவா-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டம் கோவாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. மும்பையில் நடந்த முதல் சுற்றில் கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் மும்பையை வென்று இருந்தது. எனவே இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி 5 கோல்களுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும்.
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம் வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தார். #MadridOpen #DominicThiem
    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. களிமண் தரையில் நடக்கும் இந்த போட்டியின் அரையிறுதி நேற்று நடைபெற்றது.

    இந்த போட்டியில், 7ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆகியோர் மோதினர்.

    தொடக்கத்தில் இருந்து சிறப்பாக ஆடிய டொமினிக் தீம் 6-4 என்ற கணக்கில் முதல் சுற்றை கைப்பற்றினார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய டொமினிக் தீம் 6-2 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றையும் கைப்பற்றி அசத்தினார்.

    இதையடுத்து, 6-4, 6-2 என்ற கணக்கில் கெவின் ஆண்டர்சனை வீழ்த்திய டொமினிக் தீம் முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.

    இவர் காலிறுதியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #MadridOpen #DominicThiem
    ×