ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பிவி சிந்து, ஸ்ரீகாந்த், பிரனோய் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நேற்று தொடங்கியது.பிரனோய் 21-18, 16-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பிவி சிந்து, ஸ்ரீகாந்த், பிரனோய் வெற்றி
Published on

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஓற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் முன்னனி வீரரான பிரனோய் ஹாங்காங்கை சேர்ந்த லீ செயுக் யியூ-வுடன் மோதினார்.

இதில் பிரனோய் 21-18, 16-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரரான நிஷிமோட்டோவை 21-18, 21-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து தனது முதல் சுற்றில் 21-18, 21-13 என்ற கணக்கில் சகநாட்டவரான அஷ்மிதா சாலிஹாவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com