search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Semifinals"

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெளியேறினார். #SingaporeOpenBadminton #Sindhu
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், மகளிருக்கான ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில், ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும், ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து, முன்னாள் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹாரா (ஜப்பான்) ஆகியோர் மோதினர்.

    போட்டியின் ஆரம்பத்தில் சிந்து தொடர்ந்து தவறுகளை செய்ததால் பின்தங்கினார். குறிப்பாக நெட்டில் பந்தை அடிப்பது, அவுட்லைனுக்கு வெளியே அடிப்பது போன்ற தவறுகளால் புள்ளிகளை இழந்தார். சில சமயம் பொறுமையிழந்து அவசரப்பட்டு ஆடுவது போல் தெரிந்தது. இதனால் முதல் செட்டை 7-21 என இழந்தார்.

    2வது செட் ஆட்டத்தில் சிந்து சற்று நிதானமாக ஆடி, ஒகுஹாராவுக்கு நெருக்கடி கொடுக்க முயன்றார். ஆனாலும், ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒகுஹாரா, அடுத்தடுத்து 6 புள்ளிகளைப் பெற்று முன்னேறினார். இறுதியில் அந்த செட்டையும் 11-21 என்ற கணக்கில் சிந்து இழந்தார். வெற்றி பெற்ற ஒகுஹாரா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    பி.வி.சிந்துவும், ஒகுஹாராவும் இதுவரை 13 போட்டிகளில் மோதி உள்ளனர். இதில் 7 போட்டிகளில் சிந்துவும், 6 போட்டிகளில் ஒகுஹாராவும் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக கடைசியாக மோதிய இரண்டு போட்டிகளில் சிந்து வெற்றி பெற்றார். அதற்கு பழிதீர்க்கும் வகையில் ஒகுஹாராவின் இன்றைய ஆட்டம் அமைந்திருந்தது.



    மற்றொரு அரையிறுதியில் சீன தைபேய் வீராங்கனை தாய் சு யிங், 15-21, 24-22, 21-19 என்ற செட்கணக்கில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் ஒகுஹாரா, திய் சூ யிங் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். #SingaporeOpenBadminton #Sindhu
    இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். #IndianOpenBadminton #PVSindhu #Srikanth
    புதுடெல்லி:

    இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 16-21, 21-14, 21-19 என்ற செட் கணக்கில் ஹூவாங் யுஜியாங்கை (சீனா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 11-21, 17-21 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் விக்டர் ஆக்சல்செனிடம் (டென்மார்க்) வீழ்ந்தார்.



    பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து 21-23, 18-21 என்ற நேர்செட்டில் சீன வீராங்கனை ஹீ பிங்ஜாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.  #IndianOpenBadminton #PVSindhu #Srikanth 
    இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் காஷ்யப் அரையிறுதிக்கு முன்னேறினர். #IndianOpenBadminton #PVSindhu
    புதுடெல்லி:

    இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் காஷ்யப் 21-16, 21-11 என்ற நேர்செட்டில் சீன தைபே வீரர் வாங் சு வெய்யை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-23, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் சக வீரர் சாய் பிரனீத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 10-21, 16-21 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் விக்டோர் ஆக்சல்செனிடம் (டென்மார்க்) தோல்வி கண்டு வெளியேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்யிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-19, 22-20 என்ற நேர்செட்டில் மியா பிச்பெல்ட்டை (டென்மார்க்) சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறினார். #IndianOpenBadminton #PVSindhu
    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா, கியூபா வீரர் வால்டேசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். #WorldWrestlingChampionship #BajrangPunia #Semifinal
    புடாபெஸ்ட்:

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கியது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இறங்கிய இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா முதலாவது சுற்றில் ரோமன் அஷாரினையும் (ஹங்கேரி), 2-வது சுற்றில் லீ சியங்கையும் (தென்கொரியா), கால்இறுதியில் துல்கா துமர் ஒசிரையும் (மங்கோலியா) விரட்டினார்.

    அதைத் தொடர்ந்து அரைஇறுதியில் அலெக்சாண்ட்ரோ என்ரிக் வால்டேசை (கியூபா) 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பிரமிக்க வைத்தார். இதன் மூலம் ஆசிய மற்றும் காமன்வெல்த் சாம்பியனான பஜ்ரங் பூனியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. 
    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் சாய்னா நேவால் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். #DenmarkOpen #SainaNehwal
    ஓடென்ஸ்:

    டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் பட்ட போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் ஜப்பானின் நசோமி ஒகுஹராவுடன் காலிறுதி போட்டியில் விளையாடினார்.

    இதில் முதல் செட்டை ஒகுஹராவிடம் பறிகொடுத்த நேவால் மீண்டு வந்து அடுத்த 2 செட்களிலும் கவனமுடன் விளையாடி தனது ஆதிக்கத்தினை செலுத்தி போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

    இந்த போட்டியில் 21-17, 16-21, 12-21 என்ற செட் கணக்கில் ஒகுஹராவை நேவால் வீழ்த்தினார். இந்த போட்டி 58 நிமிடங்கள் நீடித்தது. #DenmarkOpen #SainaNehwal
    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. #VijayHazareTrophy
    பெங்களூரு:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் 8 அணிகள் கால்இறுதியை எட்டின.

    இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த 3-வது கால்இறுதி ஆட்டத்தில் மராட்டியம்-ஜார்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த ஜார்கண்ட் அணி, மராட்டியத்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதன்படி முதலில் பேட் செய்த மராட்டிய அணி, ஜார்கண்ட் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 42.2 ஓவர்களில் 181 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ரோஹித் மோத்வானி 52 ரன்னும், கேப்டன் ராகுல் திரிபாதி 47 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஜார்கண்ட் அணி தரப்பில் அன்குல் ராய் 4 விக்கெட்டும், ராகுல் சுக்லா 3 விக்கெட்டும், வருண் ஆரோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இலக்கை நோக்கி ஜார்கண்ட் அணி பேட்டிங் செய்கையில் 2 முறை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி ஜார்கண்ட் அணிக்கு 34 ஓவர்களில் 127 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜார்கண்ட் அணி 32.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. ஆனந்த் சிங் 12 ரன்னிலும், கேப்டன் இஷான் கிஷன் 28 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஷஷீம் ரதோர் 53 ரன்னுடனும், சவுரப் திவாரி 29 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    பெங்களூருவில் நடந்த மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் ஐதராபாத்-ஆந்திரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சந்தீப் 96 ரன்கள் எடுத்தார். கேப்டன் அம்பத்தி ராயுடு 28 ரன்னில் ‘ரன்-அவுட்’ ஆனார். பின்னர் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆந்திரா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 267 ரன்களே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. ஆந்திர அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹனுமா விஹாரி 95 ரன்னும், ரிக்கி புய் 52 ரன்னும் எடுத்தனர்.

    பெங்களூருவில் நாளை நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் மும்பை-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரைஇறுதியில் டெல்லி-ஜார்கண்ட் அணிகள் சந்திக்கின்றன. #VijayHazareTrophy
    ×