என் மலர்
செய்திகள்

X
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்- சாய்னா அரை இறுதிக்கு முன்னேற்றம்
By
மாலை மலர்20 Oct 2018 7:28 PM IST (Updated: 20 Oct 2018 7:53 PM IST)

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் சாய்னா நேவால் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். #DenmarkOpen #SainaNehwal
ஓடென்ஸ்:
டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் பட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் ஜப்பானின் நசோமி ஒகுஹராவுடன் காலிறுதி போட்டியில் விளையாடினார்.
இதில் முதல் செட்டை ஒகுஹராவிடம் பறிகொடுத்த நேவால் மீண்டு வந்து அடுத்த 2 செட்களிலும் கவனமுடன் விளையாடி தனது ஆதிக்கத்தினை செலுத்தி போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
இந்த போட்டியில் 21-17, 16-21, 12-21 என்ற செட் கணக்கில் ஒகுஹராவை நேவால் வீழ்த்தினார். இந்த போட்டி 58 நிமிடங்கள் நீடித்தது. #DenmarkOpen #SainaNehwal

Next Story
×
X