என் மலர்
செய்திகள்

X
இந்திய ஓபன் பேட்மிண்டன் - இந்திய வீரர் ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்கு தகுதி
By
மாலை மலர்31 March 2019 3:31 AM IST (Updated: 31 March 2019 3:31 AM IST)

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். #IndianOpenBadminton #PVSindhu #Srikanth
புதுடெல்லி:
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 16-21, 21-14, 21-19 என்ற செட் கணக்கில் ஹூவாங் யுஜியாங்கை (சீனா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 11-21, 17-21 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் விக்டர் ஆக்சல்செனிடம் (டென்மார்க்) வீழ்ந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து 21-23, 18-21 என்ற நேர்செட்டில் சீன வீராங்கனை ஹீ பிங்ஜாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். #IndianOpenBadminton #PVSindhu #Srikanth

Next Story
×
X