என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asia Badminton Championship"

    • ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், ஹாங்காங் வீரர் லீ செக் யூ உடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 18-21, 10-21 என தோல்வி அடைந்து முதல் சுற்றில் இருந்து வெளியேறினார்.

    ஏற்கனவே, எச்.எஸ்.பிரனோய் இந்தத் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்று இந்திய ஆடவர் ஜோடி சாதனை படைத்தது.
    • ஆசிய போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா என்ற வீரர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்களான சாத்வித்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளனர். சாம்பியன் பட்டம் வென்ற சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    "ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த முதல் இந்திய ஆடவர் ஜோடி சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டியை நினைத்து பெருமை கொள்கிறேன். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், அவர்களின் எதிர்காலம் சிறப்பிக்க வேண்டுகிறேன்," என்று பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

     

    முன்னதாக லக்னோவில் 1965ம் ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா என்ற வீரர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதன்பின் சுமார் 58 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இந்த ஆண்டு இந்திய வீரர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    ஆசிய சாம்பியன்ஷிப் பட்டம் தவிர, சாத்விக் மற்றும் சிராக் 2022ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று இருந்தனர். இதுமட்டுமின்றி உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் உலக சுற்றுப்பயணத்தில் ஐந்து பட்டங்களை வென்றுள்ளனர்.

    ×