search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malaysia Open badminton"

    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது.
    • இதில் தென் கொரிய ஜோடியை இந்திய ஜோடி வீழ்த்தியது.

    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் தென் கொரியாவின் காங் மின் ஹியுக்-சியோ சியுங் ஜே ஜோடியுடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 21-18, 22-20 என்ற செட் கணக்கில் தென் கொரிய ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஜோடி சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    • மலேசியா ஒபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது.
    • பெண்கள் ஒன்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப்-சீனாவின் சாங்யிமன் மோதினர்.

    கோலாலம்பூர்:

    மலேசியா ஒபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது. 14-ந்தேதி வரை போட்டி நடக்கிறது.

    பெண்கள் ஒன்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப்-சீனாவின் சாங்யிமன் மோதினர். இதில் ஆகர்ஷி காஷ்யப் 15-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் தோற்றார்.

    ஆண்கள் ஒன்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இன்று இந்தோனேசிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதுகிறார்.

    நாளைய ஆட்டங்களில் இந்தியாவின் எச்.எஸ். பிரணாய்,லக்ஷயா சென் காப் இறங்குகிறார்கள்.

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வெற்றி வாய்ப்பை இழந்தனர். #MalaysianOpenBadminton #Pvsindhu #KidambiSrikanth
    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி போட்டி கோலாலம்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து, உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் தை டுசு யிங் மோதினர். மிகவும் சிறப்பாக விளையாடிய சீன வீராங்கனை சிந்துவை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சிந்து சிறப்பாக விளையாடினாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இது தையுடன் மோதி சிந்து தோல்வியடையும் 5 வது போட்டி இதுவாகும்.

    இதற்கிடையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வியடைந்தார். இவர் ஜப்பானின் கெண்டோ மோமட்டவை எதிர்க்கொண்டார். ஸ்ரீகாந்த் 13-21, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த இருவரும் இறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தனர். #MalaysianOpenBadminton #Pvsindhu #KidambiSrikanth
    மலேசியா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி நேர்செட்டில் பிரான்ஸ் வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். #MalaysiaOpen2018
    மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, உலகத் தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீரர் பிரைஸ் லெவர்டேஸை எதிர்கொண்டார்.



    இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த் கிதாம்பி 22-18, 21-14 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். அரையிறுதியில் ஸ்ரீகாந்த் 11-ம் நிலை வீரரான கென்டோ மோமொட்டாவை எதிர்கொள்கிறார்.
    மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிவி சிந்து ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #MalaysiaOpenbadminton #PVSindhu #KidambiSrikanth

    கோலாலம்பூர்:

    மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தாய்வானின் வாங் சூ-வேவை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை ஸ்ரீகாந்த் 22-20 என போராடி கைப்பற்றினார்.

    இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய ஸ்ரீகாந்த் 21-12 என எளிதாக கைப்பற்றினார். இதன்மூலம் 22-20, 21-12 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அவர் காலிறுதி போட்டியில் பிரான்சின் ரிரைஸ் லெவர்டெசை எதிர்கொள்ள இருக்கிறார்.

    பெண்கள் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டி ஒன்றில் மூன்றாம் நிலை வீராங்கனையான பிவி சிந்து, மலேசியாவில் லீ யிங் யிங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சிந்து முதல் இரண்டு செட்டையும் 21-8, 21-14 என்ற நேர் செட்களில் கைப்பற்றி வெற்றி பெற்றார். அவர் காலிறுதி போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.

      சாய்னா நேவால், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ். பிரனோய் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால், ஹாங்காங் வீராங்கனையான யிப் புய் யின்னை எதிர்கொண்டார்.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சாய்னா முதல் செட்டை 21-12 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் இரண்டாவது செட்டையும் 21-16 என கைப்பற்றினார். 

    இறுதியில் 21-12, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சாய்னா நேவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். சாய்னா தனது இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொள்கிறார். #MalaysiaOpenbadminton #PVSindhu #KidambiSrikanth
    கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தோல்வியடைந்தார். #SainaNehwal
    கோலாலம்பூரில் மலேசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் 2-வது சுற்றில் ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்த்து விளையாடினார்.

    உலகின் நம்பர்-2 வீராங்கனையான யமகுச்சியின் ஆட்டத்திற்கு சாய்னாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 15-21, 13-21 என சாய்னா தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.



    36 நிமிடத்தில் தோல்வியைத் தழுவிய சாய்னாவிற்கு, யமகுச்சிக்கு எதிரான 6-வது தோல்வி இதுவாகும். 2014-ம் ஆண்டு யமகுச்சியை வீழ்த்தியிருந்தார். அதன்பின் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளார்.

    முதல் சுற்றில் யமகுச்சி 9-2 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் சாய்னா சிறப்பாக விளையாடி 10-11 என முன்னேறி வந்தார். அதன்பின் யமகுச்சி 18-11 என முன்னேறி, இறுதியில் 21-15 என வெற்றி பெற்றார். 2-வது சுற்றில் யமகுச்சி 8-2 என முன்னிலைப் பெற்று, அதன்பின் 21-13 என வெற்றி பெற்றார்.
    கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினார். #Srikanth
    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-18, 21-9 என்ற நேர்செட்டில் டென்மார்க் வீரர் ஜான் ஜோர்ஜென்செனை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 26-24, 21-15 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 12-21, 7-21 என்ற நேர்செட்டில் சீன தைபே வீரர் வாங் சு வெய்யிடம் தோல்வி கண்டு வெளியேறினார். 
    மலேசியாவில் இன்று தொடங்கிய பேட்மிண்டன் தொடர் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். #MalaysiaOpenbadminton #SainaNehwal #Malaysiaopenbadminton2018

    மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் இன்று தொடங்கின. இதில் இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ். பிரனோய் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால், ஹாங்காங் வீராங்கனையான யிப் புய் யின்னை எதிர்கொண்டார்.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சாய்னா முதல் செட்டை 21-12 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் இரண்டாவது செட்டையும் 21-16 என கைப்பற்றினார். 

    இறுதியில் 21-12, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சாய்னா நேவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். சாய்னா தனது இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொள்கிறார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வெர்மா, இந்தோனேசியாவின் டாமி சுகியார்டோவிடம் 21-13, 21-5 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறினார். #MalaysiaOpenbadminton #SainaNehwal 
    ×