என் மலர்
நீங்கள் தேடியது "Indoor Stadium"
- மக்களின் கோரிக்கையை ஏற்று உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.
- இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொகுதியில் மக்களுக்கு தனது சொந்த செலவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் மக்களின் தேவைகளை அறிந்து நிதி ஒதுக்கீடு செய்து சாலை பணிகள், அங்கன்வாடி, நியாயவிலைக் கடை, பள்ளி வகுப்பறைகள், உயர் கோபுர சோலார் மின்விளக்கு போன்ற முக்கிய பணிகள் செய்து வருகிறார், அந்த வகையில் அன்னைநகர் மக்களின் கோரிக்கையை ஏற்று உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம். பள்ளம் துறை ஊராட்சி, அன்னை நகரில் பாரளுமன்ற உறுப்பினர் தொகுதி (2025-2026) மேம்பாடு நிதியிலிருந்து ரூ. 25,00,000 இலட்சம் செலவில் உள் விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு நிதி ஓதுக்கீடு செய்து இன்று அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னைநகர் பங்குதந்தை ரெமண்ட் அர்ச்சிப்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார தலைவர் அசோக்ராஜ், மாவட்ட துணைத் தலைவர் மணக்குடி லாரன்ஸ், நாகர்கோவில் மாநகர பொதுச்செயலாளர் கலையரசு, அன்னை நகர் ஊர் தலைவர் கென்னடி, அன்னை நகர் முன்னாள் ஊர் தலைவர் ஆன்சல், அன்னை நகர் காங்கிரஸ் தலைவர் லூயிஸ், பள்ளம் பஞ்சாயத்து கமிட்டி காங்கிரஸ் தலைவர் கெவின், புத்தளம் பேரூராட்சி தலைவர் ரங்கன், தர்மபுரம் பஞ்சாயத்து பொருளாளர் ரவிசந்திரன், காங்கிரஸ் நிர்வாகிகள் செல்வி, சார்லஸ் செல்லையா, ஒப்பந்தக்காரர் முருகன் உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பிரனோய் 21-12 என்ற கணக்கில் வென்றார்.
- 2-வது செட் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அரங்கத்தின் மேல்கூறையில் இருந்து தண்ணீர் கொட்டியது.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் 'சிக்கன் குனியா' பாதிப்பில் இருந்து மீண்டு 5 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்பும் 32 வயது இந்திய வீரர் பிரனாய், முதல் ஆட்டத்தில் பிரையன் யங்கை (கனடா) சந்திக்கிறார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பிரனோய் 21-12 என்ற கணக்கில் வென்றார். அடுத்த செட் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உள்விளையாட்டு அரங்கத்தின் மேல்கூறையில் இருந்து தண்ணீர் கொட்டியது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உள்விளையாட்டு அரங்கம் 52 அடி நீளம், 34 அடி அகலத்துடன், மரத்தினாலான தரைத்தளம் 40 மீ நீளம், 20 மீ அகலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, இறகுப்பந்து, கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, டேபிள்டென்னிஸ், கேரம், செஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடுவதற்கு மின்னொளி வசதியுடன் இந்த அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ரூ. 1½ கோடியும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.1½ கோடியும் என மொத்தம் ரூ. 3 கோடி செலவில் உள்விளையாட்டு அரங்க கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைக்கப்பட்டு வரும் உள் விளையாட்டு அரங்கின் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் கட்டுமானப்பணிகளின் தன்மை குறித்து கேட்டறிந்த கலெக்டர், உள் விளையாட்டு அரங்கின் கட்டுமானப்பணிகளை உயர்ந்த தரத்துடன் விரைந்து முடித்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட விளையாட்டு அதிகாரிக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிக்கும் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி ராமசுப்பிரமணியராஜா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.






