என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய ஜோடி தோல்வி
    X

    ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய ஜோடி தோல்வி

    • கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ ஜோடியுடன் காங்காங் ஜோடி மோதியது.
    • பரபரப்பாக சென்ற முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் காங்காங் ஜோடி வென்றது.

    ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ ஜோடியுடன் காங்காங் ஜோடி மோதியது.

    இதில் பரபரப்பாக சென்ற முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் காங்காங் ஜோடி வென்றது. தொடர்ந்து ஆடிய 2-வது செட்டையும் அந்த ஜோடியே வென்றது. இதனால் 22-20, 21-13 என்ற செட் கணக்கில் காங்காங் ஜோடி வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    இந்த தொடரில் இந்திய வீரர் வீராங்கனைகள் யாரும் அரையிறுதிக்கு கூட தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×