search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Championships"

    • 4, 16,18,20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள், பெண்கள் தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது.
    • பதிவு செய்யப்படாத கிளப்புகளை வீரர்கள் UNATTACHED தடகள வீரர்களாகவே பதிவு செய்யப்படுவார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் தடகள சங்கத்தின் சார்பில் கிட்ஸ் கிளப் பள்ளிகளின் நிறுவனர் மோகன் கந்தசாமி நினைவு 5-வது திருப்பூர் மாவட்ட அளவிலான 14, 16,18,20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள், பெண்கள் தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் வருகிற 13-ந் தேதி அவினாசி அருகே பழங்கரையில் உள்ள டீ பப்ளிக் பள்ளியில் நடைபெற உள்ளது.

    98 வகையான தடகள போட்டிகள் நடைபெற இருக்கிறது. மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெறுபவர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு மாநிலதடகள போட்டிகளில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்பார்கள். மாநில தடகளப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள், கோவை நேரு விளையாட்டு அரங்கில், நவம்பர் மாதம் 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கும் தேசிய அளவிலான தடகள போட்டிகளில் தமிழக அணி சார்பில் பங்கேற்க உள்ளனர்.

    திருப்பூர் மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நுழைவுக்கட்டணம் இல்லை. தடகள சாதனை விவரங்கள், தேசிய, மாநில சங்க தகவல்கள், செய்திகளை www.tirupurathleticassociation.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள் entrytaa@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான கடைசிநாள் வருகிற 8-ந் தேதியாகும்.

    திருப்பூர் தடகள சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கிளப்கள் மட்டுமே கிளப் பெயரில் தடகள வீரர்களை பதிவு செய்ய முடியும். பதிவு செய்யப்படாத கிளப்புகளை வீரர்கள் UNATTACHED தடகள வீரர்களாகவே பதிவு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு 86677 99305 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிறந்த தடகள வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் தடகள சங்கம் சார்பாக தேவையான உதவிகள் செய்யப்படும் என சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் சோனியா சாஹல், பிங்கி ராணி, சிம்ரன்ஜித் கவுர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். சவீட்டி பூரா தோல்வி கண்டு வெளியேறினார். #WorldBoxing #Championship #Sonia #Pinki #Simranjeet
    புதுடெல்லி:

    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 57 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல், 2014-ம் ஆண்டு உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பல்கேரியா வீராங்கனை ஸ்டானிமிரா பெட்ரோவாவை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த போட்டியில் நடுவர்கள் முடிவின் படி 3-2 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டியின் முடிவில் சர்ச்சை ஏற்பட்டது. தோல்வி கண்ட ஸ்டானிமிரா பெட்ரோவா கருத்து தெரிவிக்கையில், ‘நடுவர்கள் ஊழல் செய்து விட்டனர். இது நியாயமான முடிவு அல்ல’ என்று குற்றம்சாட்டினார். முன்னதாக போட்டி நடுவர் சோனியா சாஹல் வெற்றி பெற்றதாக அறிவித்த போது ஸ்டானிமிரா பெட்ரோவா சிரித்தபடி ஆள்காட்டி விரலை உயர்த்தி அதிருப்தி தெரிவித்தார். ‘நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியாயமான முடிவு தான்’ என்று சோனியா சாஹல் தெரிவித்தார்.

    51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை அலிசி எபோனி ஜோன்சை எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இதேபோல் 64 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 5-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் மெகன் ரிட்டை வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

    75 கிலோ எடைப்பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சவீட்டி பூரா 0-5 என்ற கணக்கில் போலந்து வீராங்கனை எல்சிபெடா வோஜ்சிக்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார். சரிதா தேவிக்கு (60 கிலோ) அடுத்து தோல்வி கண்டு வெளியேறிய 2-வது இந்திய வீராங்கனை சவீட்டி பூரா ஆவார். 
    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று இந்திய வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர். #WomensWorldBoxing #Championship #India
    புதுடெல்லி:

    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 57 கிலோ பிரிவில் நேற்று நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சோனியா லாத்தெர், மொராக்கோ வீராங்கனை டோஜானி டோயாவை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சோனியா லாத்தெர் 5-0 என்ற கணக்கில் டோஜானி டோயாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அரியானாவை சேர்ந்த 26 வயதான சோனியா லாத்தெர் 2016-ம் ஆண்டு உலக போட்டியில் வெள்ளிப்பதக்கமும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 2 முறை வெள்ளிப்பதக்கமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் 51 கிலோ பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி 4-1 என்ற கணக்கில் அர்மேனியா வீராங்கனை அனுஷ் கிரிகோர்யானை சாய்த்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். 64 கிலோ பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 4-1 என்ற கணக்கில் அமெரிக்காவின் அமெலி மூரை தோற்கடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
    உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைத்தது. #JuniorShooter #India ##ISSFWCH
    சாங்வான்:

    52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது.

    12-வது நாளான நேற்று நடந்த ஜூனியர் ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் 16 வயதான இந்திய வீரர் உதய்வீர் சித்து 587 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அமெரிக்க வீரர் ஹென்றி லிவெரெட் 584 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்பதக்கமும், தென்கொரியா வீரர் லீ ஜாக்யோன் 582 புள்ளிகள் திரட்டி வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இந்த பந்தயத்தில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் விஜய்வீர் சித்து 581 புள்ளிகளுடன் 4-வது இடமும், ராஜ்கன்வார் சிங் சந்து 568 புள்ளிகளுடன் 20-வது இடமும் பிடித்தனர்.

    25 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் அணிகள் பிரிவில் உதய்வீர் சித்து, விஜய்வீர் சித்து, ராஜ்கன்வார் சிங் சந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,736 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. 1,730 புள்ளிகளுடன் சீனா அணி வெள்ளிப்பதக்கமும், 1,721 புள்ளிகளுடன் தென்கொரியா அணி வெண்கலப்பதக்கமும் வென்றன.

    ஆண்களுக்கான 25 மீட்டர் சென்டர் பயர் பிஸ்டல் பந்தயத்தில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்திய வீரர் குர்பிரீத் சிங் 581 புள்ளிகளுடன் 10-வது இடம் பிடித்தார். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் விஜய்குமார் (576 புள்ளிகள்) 24-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அனிஷ் பன்வாலா (576 புள்ளிகள்) 25-வது இடமே பெற்றார்.

    இந்த போட்டி தொடரில் இதுவரை இந்தியா 9 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கம் வென்று 4-வது இடத்தில் உள்ளது. சீனா 18 தங்கம், 14 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கமும், தென்கொரியா 11 தங்கம், 11 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 32 பதக்கமும், ரஷியா 9 தங்கம், 9 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கமும் வென்று முறையே முதல் 3 இடங்களை வகிக்கின்றன.  #JuniorShooter #India ##ISSFWCH 
    ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், ஜூனியர் உலக சாம்பியன் குன்லாட் விடிட்ஸ்ரனுக்கு (தாய்லாந்து) அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். #LakshyaSen
    புதுடெல்லி:

    ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் ஜூனியர் உலக சாம்பியன் குன்லாட் விடிட்ஸ்ரனுக்கு (தாய்லாந்து) அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே கவுதம் தாக்கர் (1965-ம் ஆண்டு), பி.வி.சிந்து (2012-ம் ஆண்டு) ஆகியோர் சாம்பியன் ஆகி இருக்கிறார்கள்.

    உத்தரகாண்ட்டை சேர்ந்த 16 வயதான லக்‌ஷயா சென் கூறுகையில், ‘இந்த போட்டியில் நெருக்கடியின்றி எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி குன்லாட்டை வீழ்த்தினேன். தங்கப்பதக்கத்தை வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது நிச்சயம் எனது நம்பிக்கைக்கு ஊக்கமளிக்கும்’ என்றார்.
    ×