என் மலர்

  நீங்கள் தேடியது "athletics"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
  • குழு விளையாட்டுகளில் கால்பந்து போட்டிகளில் மாணவிகள் பிரிவில் மாவட்ட அளவில் 2 வது இடமும், கோ-கோ மாணவிகள் பிரிவில் 2 வது இடமும் பெற்றுள்ளனர்.

  திருப்பூர் :

  பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியர்களுக்கான தடகளப் போட்டிகள் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அதில் திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதில் குண்டு எறிதல் போட்டியில் ஆர்யுஸ்‌ ரோகித் என்ற மாணவர் தங்க பதக்கம் பெற்றார்.

  யுவன் பாரத் என்ற மாணவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்றார். அபிகிருஷ்ணன் உயரம் தாண்டுதலில் தங்கம் பதக்கம் பெற்றார். 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புவனேஸ் என்ற மாணவன் தங்க பதக்கமும், 200 மீட்டரில் வெள்ளி பதக்கமும் பெற்றார். சஞ்சய் மும்முறைத்தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 400 மீட்டரில் காயத்ரி வெள்ளிப் பதக்கமும் வெண்கல பதக்கமும் வென்றார்.

  குழு விளையாட்டுகளில் கால்பந்து போட்டிகளில் மாணவிகள் பிரிவில் மாவட்ட அளவில் 2 வது இடமும், கோ-கோ மாணவிகள் பிரிவில் 2 வது இடமும் பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவில் தேர்வாகியுள்ள மாணவர்களை பள்ளி நிர்வாகிகள், தாளாளர் சாமிநாதன் , மூத்த முதல்வர் மணிகண்டன், முதல்வர் சின்னையா, துணை முதல்வர் ரவி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றமகளிா் கல்லூரி மாணவிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • அஸ்ஸாம் மாநிலத்தில் 37வது தேசிய அளவிலான ஜூனியா் தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

  உடுமலை :

  தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற உடுமலை ஜிவிஜி. விசாலாட்சி மகளிா் கல்லூரி மாணவிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.அஸ்ஸாம் மாநிலத்தில் 37வது தேசிய அளவிலான ஜூனியா் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் படித்து வரும் ஜி.வைஷாலி (முதலாம் ஆண்டு மாணவி) 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், மேலும் 400 மீட்டா் தொடா் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.

  இந்நிலையில் கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத், ஆலோசகா் மஞ்சுளா, முதல்வா் ராஜேஸ்வரி, உடற்கல்வி இயக்குநா் பா.சுஜாதா மற்றும் பேராசிரியா்கள் மாணவியை பாராட்டினா்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பங்களா சுரண்டையில் உள்ள பேரன் பரூக் பள்ளியில் நடைபெற்றது.
  • 24 மாணவர்கள் திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.

  சங்கரன்கோவில்:

  தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பங்களா சுரண்டையில் உள்ள பேரன் பரூக் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் ஒட்டுமொத்தமாக 10 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கல பரிசுகள் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். மாணவர்கள் பிரிவில் கலைவாணி பள்ளி மாவட்ட அளவிலான தடகள போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

  மூத்தோர் பிரிவில் பிரகாஷ் என்ற மாணவன் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். முதல் மற்றும் 2-ம் இடம் பெற்ற 24 மாணவ- மாணவிகள் திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் ஆசிரிய- ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 8-ம் வகுப்பு மாணவன் ஜெனிட்டோ ஸ்டேனி குண்டு எறிதல் , தட்டு எறிதலில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றார்.
  • வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

  தென்காசி:

  தென்காசி மாவட்ட வட்டார வருவாய் அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் எம்.கே.வி.கே. மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் ஜெனிட்டோ ஸ்டேனி குண்டு எறிதல் , தட்டு எறிதலில் கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தையும், 200மீட்டர் ஓட்டத்தில் ஒரு பதக்கத்தையும், தென்காசி மாவட்ட முதல் தடகள போட்டியின் முதன்மை இளையோருக்கான சான்றிதழையும் பெற்றார்.

  அதேபோல் பிளஸ்-2 மாணவன் ஸ்ரீராம் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்க பதக்கத்தையும், 7-ம் வகுப்பு மாணவி மகதி இறகு பந்தாட்டத்திலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் பாலமுருகன், பள்ளி முதல்வர் ஏசுபாலன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.

  வெற்றி பெற்ற 3 பேரும் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடையநல்லூர் வட்ட அளவில் நடைபெற்ற மாணவியர்களுக்கான தடகளப்போட்டிகளை தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி தொடங்கி வைத்தார்.
  • 50 உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்

  தென்காசி:

  தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் எவரெஸ்ட் பள்ளி மைதானத்தில் கடையநல்லூர் வட்ட அளவில் நடைபெற்ற மாணவியர்களுக்கான தடகளப்போட்டிகளை தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி தொடங்கி வைத்தார்.

  தேசியக் கொடியை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசியும், ஒலிம்பிக்கொடியை மாவட்ட தீ தடுப்பு மற்றும் மீட்பு பணி அலுவலர் கவிதாவும், பள்ளியின் கொடியை வட்டாரக் கல்வி அலுவலர் மகேஸ்வரியும் ஏற்றி வைத்தனர்.

  50 உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் பக்கீர் முகம்மது செய்திருந்தார். முதல்நாள் மாணவர்களுக்கான போட்டிகளில் சுமார் 690 மாணவர்கள் கலந்து கொண்டனர். 2-வது நாள் மாணவியர்களுக்கான போட்டிகளில் சுமார் 660 மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

  தாருஸ்ஸலாம் பள்ளி நிர்வாக உறுப்பினர் முகம்மது அனீஸ் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார் . தாருஸ்ஸலாம் பள்ளி தலைமை ஆசிரியர் சிக்கந்தர் வரவேற்புரை ஆற்றினார். உதவி தலைமை ஆசிரியர் ஜபருல்லா தொகுத்து வழங்கினார்.

  நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் புளியங்குடி டி.எஸ்.பி.அசோக், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் நாராயணன், எவரெஸ்ட் அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 100 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் தடகள பயிற்சி பெற்று வருகிறார்கள்.
  • மாநில ஜூனியர் ஓபன் தடகள போட்டிகள் கிருஷ்ணகிரியில் 3 நாட்கள் நடந்தது.

  திருப்பூர் :

  திருப்பூர் திருமுருகன்பூண்டி, திருநீலகண்டர் வீதியில் செயல்பட்டு வரும் சுகன் சுகா மெடிக்கல் சென்டர் சார்பில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தப்பட்டு வருகிறது. இதில்100 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் தடகள பயிற்சி பெற்று வருகிறார்கள். இதன்மூலம் இவர்கள் மாவட்ட மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.

  இந்தநிலையில் தமிழக தடகள சங்கம் சார்பில் 35 -வது மாநில ஜூனியர் ஓபன் தடகள போட்டிகள் கிருஷ்ணகிரியில் 3 நாட்கள் நடந்தது. இதில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் பாரதி தலைமையில் 23 பேர் கலந்து கொண்டனர். இதில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவி சவுமியா 3000 மற்றும் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கமும், 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

  மேலும் இவர் தென்னிந்திய அளவிலான தடகள போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற மாணவி சவுமியாவுக்கு சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் டாக்டர் எஸ் .சுந்தரன், செயலாளர் கார்த்திகை சுந்தரன், பொருளாளர் செங்கோடன் ,பயிற்சியாளர் பாரதி மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அவசியம்.
  • நுழைவு படிவம் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

  திருப்பூர் :

  திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 6 குறு மைய அளவில் குழு போட்டிகள், தடகள போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி, மெட்ரிக், நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டில் திறமையான மாணவர்கள் பங்கேற்கலாம்.மேலும் 14 வயது, 17 வயது, 19 வயது என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகிறது. பிறப்பு சான்றிதழ், ஆதார் எண், 19 வயது எனில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மிக அவசியம்.நுழைவு படிவம் அந்தந்த பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. ஒரு மாணவர் ஏதேனும் ஒரு வயது பிரிவில் மட்டுமே பங்கேற்க முடியும்.

  11 வயதுக்குட்பட்ட தொடக்க பள்ளி மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும்.திருப்பூர் தெற்கில் கோவில்வழியில் உள்ள அரசு ஆதி திராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளியில், திருப்பூர் வடக்கில் காந்திநகரில் உள்ள ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அவிநாசியில் எம்.எஸ்.வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் கோடங்கிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, உடுமலை எலையமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரத்தில் முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நேபாள் இளைஞர் விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற சர்வ தேச அளவிலான தடகளப் போட்டிகள் நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது.
  • நேபாள் காத்மாண்டுவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் மெர்லின் ஜோஸ் (10), ராகவ்கிருஷ்ணா (12) முகேஷ் (14) ஆத்தீஸ் (12) ஆகியோர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர்.

  சங்கரன்கோவில்:

  சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிபட்டி மாணவர் நேபாளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

  நேபாள் இளைஞர் விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற சர்வ தேச அளவிலான தடகளப் போட்டிகள் நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது.

  கடந்த மாதம் ஜூலை 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், ராமலட்சுமி தம்பதியரின் மகன் கலையரசு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

  நேபாள் காத்மாண்டுவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் மெர்லின் ஜோஸ் (10), ராகவ்கிருஷ்ணா (12) முகேஷ் (14) ஆத்தீஸ் (12) ஆகியோர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர்.

  சர்வதேச அளவில் தடகளப் போட்டிகளில் பங்கெடுத்து மாணவர் கலையரசுவை ஏ.வி.கே. கல்வி குழும தலைவர் அய்யாத்துரைபாண்டியன், பயிற்சியாளர்கள் பிரவீன் குமார், பிரியா மற்றும் பெருமாள், ராமலட்சுமி, பூலித்தேவன் மக்கள் கழக மாநில தலைவர் பெருமாள்சாமி, மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டுக்களும், வாழ்த்துக களும் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஹரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் திருச்சி சமது பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்
  • கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க இருப்பதோடு, மாணவன் சூரஜின் இந்த சாதனை திருச்சிக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது

  திருச்சி:

  தேசிய அளவிலான தடகள் போட்டிகள் ஹரியானாவில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி காஜாநகரில் உள்ள சமது மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவரும், தடகள வீரருமான ஏ.சூராஜ் 400 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.

  மேலும் 20-வது தேசிய பெடரஷன் கப் ஜூனியர்ஸ் போட்டியில் 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவினருக்கான தடகள போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கமும் வென்றார்.

  மேலும் இதன் மூலம் வருகிற 1.8.2022 முதல் 6.8.2022 வரை கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க இருக்கிறார்.

  மாணவன் சூரஜின் இந்த சாதனை திருச்சிக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த வெற்றியை பாராட்டும் வகையில், மஜ்லிஸ் உல் உலமா சங்கத்தலைவர் டாக்டர் ஏ.கே.காஜா நஜிமுதீன், பள்ளியின் தாளாளரும், செயலாளருமான டாக்டர் வி.எஸ்.ஏ.ஷேக் முகமது சுஹேல்,

  பள்ளி பொருளாளர் ஹாஜி ஏ.எஸ்.காஜாமியான் அக்தர் மஜ்லிசுல் உலமா சங்க உறுப்பினர் ஏ.எம்.முகமது ஆஷிக், பள்ளி முதல்வர் டாக்டர் சி.ஜே.சாக்கோ, உடற்கல்வி இயக்குநர் டி.உமா மகேஸ்வரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய விளையாட்டு தொடரில் 400 மீட்டர் தடகள ஓட்டத்தில் ஆண்கள், பெண்கள் என 4 பேர் பங்கேற்பதால் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. #AsianGames2018
  ஜகார்தா:

  18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா, பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

  நேற்றைய 7-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 7 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலம் ஆக மொத்தம் 29 பதக்கங்களை பெற்று இருந்தது.

  ஆசிய விளையாட்டுப் போட்டியின் 8-வது நாளான இன்று தடகளத்தில் 400 மீட்டர் ஓட்டம் நடக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெறும் இந்த ஓட்டத்தில் இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

  பெண்கள் பிரிவில் ஹிமாதாஸ் (அசாம்), நிர்மலா (ராஜஸ்தான்), ஆண்கள் பிரிவில் முகமது அனஸ் யசியா (கேரளா), ஆரோக்ய ராஜ் (தமிழ்நாடு) ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

  பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கும், ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் 5.40 மணிக்கு நடக்கிறது. 4 பேர் தகுதி பெற்றுள்ளதால் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. முகமது அனஸ் 2-வது அரையிறுதியில் முதல் இடத்தை பிடித்தார். இதனால் அவர் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

  இதேபோல தமிழகத்தை சேர்ந்த ஆரோக்யராஜூம் அரையிறுதியில் சிறப்பாக செயல்பட்டார். இதனால் அவரும் பதக்கம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

  நீளம் தாண்டும் போட்டியில் இந்தியா சார்பில் ஸ்ரீசங்கரும், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் லெட்சுமணனும் பங்கேற்கிறார்கள். #AsianGames2018
  ×