மாவட்ட தடகள போட்டியில் கலைவாணி பள்ளி சாம்பியன்

மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பங்களா சுரண்டையில் உள்ள பேரன் பரூக் பள்ளியில் நடைபெற்றது.24 மாணவர்கள் திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
வெற்றி பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.
வெற்றி பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பங்களா சுரண்டையில் உள்ள பேரன் பரூக் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் ஒட்டுமொத்தமாக 10 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கல பரிசுகள் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். மாணவர்கள் பிரிவில் கலைவாணி பள்ளி மாவட்ட அளவிலான தடகள போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

மூத்தோர் பிரிவில் பிரகாஷ் என்ற மாணவன் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். முதல் மற்றும் 2-ம் இடம் பெற்ற 24 மாணவ- மாணவிகள் திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் ஆசிரிய- ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com