என் மலர்
டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய சின்னர்- பெகுலா
- சின்னர் 6-0, 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
- மற்ற ஆட்டங்களில் ஜாக் டிராப்பர் (பிரிட்டிஷ்), டாலன் கிரீஸ்பூர் (டச்சு), ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் நாட்டின் ஜிரி லெஹெக்கா உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர் 6-0, 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர் 4-வது சுற்றில் ரூப்லெவ் உடன் மோத உள்ளார்.
மற்ற ஆட்டங்களில் ஜாக் டிராப்பர் (பிரிட்டிஷ்), டாலன் கிரீஸ்பூர் (டச்சு), ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, செக் வீராங்கனை மார்கெட்டா வோண்ட்ரூசோவாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை இழந்த பெகுலா அடுத்த இரண்டு செட்டை கைப்பற்றினார். இதனால் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பெகுலா வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டிகளில் அலெக்ஸாண்ட்ரோவா (ரஷ்யா), மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா), டாரியா கசட்கினா (ரஷ்யா), லோயிஸ் போய்சன் (பிரெஞ்சு) ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.






