search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடியின் ஆட்சியில் நமது நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது- அண்ணாமலை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பிரதமர் மோடியின் ஆட்சியில் நமது நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது- அண்ணாமலை

    • தி.மு.க.வில் உள்ள 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நடந்து கொண்டு இருக்கிறது.
    • மத்திய பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு கடந்த ஆண்டில் பேரிடர் மீட்பு நிவாரண நிதியாக ரூ.813 கோடி வழங்கி உள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை நேற்று மாலை தொடங்கினார்.

    அவருக்கு வழிநெடுகிலும் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் மேற்கொண்டார். பின்னர் அண்ணாமலை பேசுகையில்:-

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் நம் நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.


    தி.மு.க.வில் உள்ள 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நடந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு திருக்குறள், தமிழ் மொழி இருக்கைகள், காசி தமிழ் சங்கம், 46 சங்க இலக்கியங்கள் என மொழி பெயர்ப்புக்கு ரூ. 700 கோடி செலவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் தமிழை புகுத்தி வருபவர் பிரதமர் மோடி.

    வருகிற தேர்தலில் பா.ஜனதா ஆட்சி அமைத்து கும்பகோணம் மகாமகத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்தியா முழுவதும் ஒரு கோடி மக்கள் திரண்டு மகாமக விழாவை சிறப்பாக நடத்துவோம்.

    மத்திய பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு கடந்த ஆண்டில் பேரிடர் மீட்பு நிவாரண நிதியாக ரூ.813 கோடி வழங்கி உள்ளது. நடப்பாண்டில் மத்திய அரசு மேலும் ரூ. 900 கோடி வழங்கி உள்ளது. மொத்தம் ரூ. 1,713 கோடி செலவு செய்யப்படாமல் தமிழக அரசு கணக்கில் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×